"தயவு செஞ்சு என்னை டிஷ்டர்ப் பண்ணாத சிவா ப்ளீஸ்",
"என்னை மறக்க ட்ரை பண்ணு , இனிமேல் என் மூஞ்சில முழிக்காத"
இது தாங்க என் ஷாலு என்னை பார்த்து சொன்ன கடைசி வரிகள் என்று ராமிடம் விளக்கி கொண்டிருந்தான் சிவா.
"ஏன் சார் அதுக்கு அப்புறம் நீங்க உங்க ஷாலினிய பாக்கவே இல்லையா" என்றான் ராம்.
"இல்லைங்க அதுக்குள்ள என்னோட ஷாலு வேற ஒருத்தரோட திருமதி ஆனா நியூஸ் தான் எனக்கு வந்தது, ஏதோ ஒன்னு தொலைஞ்சு போன மாதிரி ஆயிடுச்சு அதான் இப்படி ஆயிட்டேன்" என்றான் சிவா.
"எப்படி இருந்த நீங்க இப்படி ஆயிடீங்க " என்று கலாய்த்து கொண்டே ,"சார் உங்க லவ் ஸ்டோரி கொஞ்சம் சொல்லுங்க" என்றான் ராம்.
"ரொம்ப சரி இப்படி ஆகிட்டேன் பாருங்க அடுத்தவன் லவ் ஸ்டோரி நாவே கிளுகிளுப்பு தான, சொல்றேன் சார்"
"அது ஓர் அழகிய பூ உதிர் காலம், வேகமா நடந்தா பூமிக்கு வலிக்குமோ, என்று மெல்ல பாதத்தை எடுத்து வைத்து வந்து கொண்டிருந்த போது என் தேவதை தரிசனம் கிடைத்தது".
"இப்படி உருகுவதற்கு நான் ரியல் ஹீரோ இல்ல சார் ரீல் தான்" என்றான் சிவா நிதானமாய்.
"உங்களுக்கு கொடுத்த பில்டப் போதும் உங்க கதை சொல்லுங்க பாஸ் " என்றான் ராம்.
"என்ன சார், உருகி உருகி லவ் பண்ணி இருக்கேன், கொஞ்சம் பில்டப் கொடுக்க கூடாதா? , சரி சொல்றேன் கேளுங்க"
"நான் என் தேவதைய என்னோட காலேஜ்ல தான் பார்த்தேன், பார்த்தவுடன முடிவு பண்ணிட்டேன். இவ தான் டா உனக்கு சரியான பொண்ணு விடாதடா சிவா, எனக்குள்ள மைன்ட் வாய்ஸ் வேற ஓடிட்டு இருந்துச்சு "
"நம்ம என்ன மன்மதனா?, ஸ்ரைட்டா லவ் சொல்ல, அது முடியாம முதல்ல ப்ரண்ட் ஆனேன்"
"அப்படியே பழகி நல்ல திக் பிரெண்ட்ஸ் ஆனோம் என்னோட ஒவ்வொரு நிமிஷமும் அதில் நடந்த விஷயத்த தினமும் போன்ல பேசிப்போம். எங்க அப்பாகிட்ட காலேஜ்கே தெரியாத பீஸ் எல்லாம் வாங்கி போன் பில், கிப்ட் எல்லாம் கொடுத்தேன் அவளும் என் மேல நல்ல நட்ப்போட இருந்தாங்க, இப்படியே இரண்டு வருஷம் முடிய வந்தது" என்று தொடர்ந்து கொண்டிருந்தான் சிவா.
"சார் அப்போ இரண்டு வருஷம் பசங்க கூட பேசாம கடல மட்டும் போட்டு இருக்கீங்க, கடைசியா லவ் சொன்னீங்களா இல்லையா ?" என்று ஆர்வமாய் வினவினான் ராம்.
"சார் சும்மா சொல்லுல லவ் ரொம்பவே பவர்புல் அந்த ரெண்டு வருஷம் நட்புனு சொல்லிட்டு காதல் மறச்சு வெச்சு நொந்து போனேன். ஒரு சமயத்துல பைத்தியம் பிடிப்பது போல் ஆனது. சரி, காதல் சொல்லிடலாம் நெனச்சு அவகிட்ட சொன்னா அவ என்னை ஒரு உண்மையான நண்பனா தான் நெனச்சு இருந்தா , என்னோட காதல சொல்லி என்னோட நட்பை கொச்சை படுத்தி விட்டேன்" என்று புலம்பினான் சிவா .
"சார் நீங்க உங்க லவ் சொன்னதுக்கு அவுங்க என்ன சொன்னாங்க" என்று ஆர்வமானான் ராம் .
"நான் முன்னாடி சொன்னது தான் சார் "
"தயவு செஞ்சு என்னை டிஷ்டர்ப் பண்ணாத சிவா ப்ளீஸ், என்னை மறக்க ட்ரை பண்ணு , இனிமேல் என் மூஞ்சில முழிக்காத" இது தாங்க என்று ராமிடம் விளக்கி கொண்டிருந்தான் சிவா.
"இப்படி அவ சொன்னதுக்கு நான் தான் காரணம்,"
"என்னால அவள நட்பாய் பாக்க முடியல, நான் திருந்திற மாறி இல்ல, அதான் இப்படி பதில் சொன்னா, அதுக்கு அப்புறம் என்னால படிக்க முடியல, யாரோடயும் சரியா பேச முடியல, தண்ணி, கஞ்சா இப்படி தப்பான வழில போயிட்டேன். ஒரு தடவ கஞ்சா வெச்சு போலீஸ்ல மாட்டிகிட்டேன், வாழ்க்கைய கெடுத்து உடம்ப கெடுத்து இங்க இப்படி சரிப்படுத்த முடியாத வியாதி வாங்கி இருக்கேன், இப்போ நான் இருக்க போறா டேஸ் எண்ணிகிட்டு இருக்கேன்" என்று விலகினான் சிவா .
"ரொம்ப சாரி சார் உங்களுக்கு பழச நினைக்க வெச்சுட்டேன் " என்று ராம் புலம்பும் போதே "ராம் உங்கள பார்க்க உங்க சிஸ்டர் ரோஷினி வந்து இருகாங்க" என்ற குரல் கேட்டது.
"எப்படிடா ராம் இருக்க என்று வந்த ரோஷினியை இது தான் என்னோட சிஸ்டர் ரோஷினி என்று சிவாவிற்கு அறிமுகபடுத்தினான், ராம்.
"ஹலோ", என்றதும் திகைத்தான் சிவா
ஆம், ரோஷினி அவனோட காலேஜ் கிளாஸ்மேட் "ஹே சிவா எப்படி இருக்க செகண்ட் இயர் அப்புறம் உன்ன பாக்க முடியல" என்று நலம் விசாரித்தாள் ரோஷினி.
"ஷாலினி எப்படி இருக்கா? ரோஷினி எங்க இருக்கா?" என்றான் சிவா.
"டேய், நீ இன்னும் அவள நெனச்சுகிட்டு இருக்கியா? அவளும் சென்னைல தான் இருக்கா, ரெண்டு வருஷம் முன்னாடி சந்தோஷ் கூட மேரேஜ் ஆச்சு, போன வருஷம் ஒரு ஆக்சிடென்ட்ல அவரோட பார்வை போயிடுச்சு" என்று விவரித்தாள் ரோஷினி .
"அட கடவுளே யார நான் வாழ்க்கை முழுசா பார்த்து ரசிகனும் இருந்தேன் அவள பாக்க அவனுக்கு கொடுத்து வைக்கல ஆனா நான் கொவ்டிங் மை டேஸ்" என்றான் சிவா விரக்தியுடன்.
கடவுளிடம் யாசித்தேன்;
"உன்னை எனக்கு தந்த பின்
என்ன வேண்டும்?", என்றார்
உன்னை காண
இரு கண்கள் போதாது,
இன்னும் கண்கள் வேண்டும்
என்றே யாசித்தேன்.
என்று ஷாலினியை பற்றி அவன் எழுதிய கவிதையே நினைவிற்கு வந்தது சிவாவிற்கு.
வார்ட் பாய் உள்ளே வந்ததும் இருவரிடமும் சொல்லி விட்டு ரோஷினி கிளம்பினாள்.
ஷாலினியை அவளோட வீட்டில் சந்தித்தாள் ரோஷினி.
"ஷாலினி, நேத்து நான் சிவா வை பார்த்தேன்"என்றாள் ரோஷினி உற்சாகமாய்.
அதிர்ச்சியுடன் ரோஷினியை பார்த்தாள் ஷாலினி.
சிவாவை பற்றி தெரிய சற்று அவலுடன் தான் பார்த்தாள்.
......தொடரும்.......