Monday, October 20, 2008

கதை கதையாம் காரணமாம் !!!

நான் கதை என்று உங்களை நோகடித்து சில நாட்கள் ஆகிவிட்டது. பின் வரும் வரிகள் எனது என்று சொந்தம் கொள்ள இயலாது... சிறு வயதினில் எனது செவிகளில் எனது பாட்டி சொல்லி சொல்லி எனது மூளையில் ஆழமாக பதிந்த வரிகளை உங்களுக்கு அளிக்கிறேன்...
இதோ ......

கதை கதையாம் காரணமாம் !
காரணத்தில் ஒரு தோரணமாம் !
தோரணத்தில் ஒரு வைக்கோலாம் !
வைக்கோல கொண்டு போய் மாட்டுக்கு போட ,
மாடு கொஞ்சம் பால் கொடுக்க ,
பால கொண்டு போய் சாமிக்கு ஊத்த ,
சாமி கொஞ்சம் காசு கொடுக்க ,
காச கொண்டு போய் கடைக்காரன் கிட்ட கொடுக்க ,
கடைக்காரன் ரெண்டு தேங்காய் கொடுக்க ,
தேங்காய் ஓடைக்க கல்லடிக்கு போக ,
கல்லுக்கு அடியில பாம்பு
பாம்பு அடிக்க தடிய தேட ,
தடி எல்லாம் அழுக்கு
அழுக்கு கழுவ ஆத்துக்கு போக ,
ஆறு எல்லாம் மீனு
மீன் பிடிக்க வலைய தேட ,
வலை எல்லாம் ஓட்ட
ஓட்ட தைக்க ஊசிக்கு போக ,
ஊசிகாரன் செத்து போய்ட்டான் !!!!!!!!

மேற்கூறிய வரிகள் மிகவும் சாதாரணமானவை .....
ஆனால் அதனை ஒரு பொழுதினை கழிக்க கேட்டிருந்தேன் .....
அதில் உள்ள ஆழமான கருத்தை அறிந்த பின் உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசை பட்டேன் . அதன் விளைவு இப்போ உங்களை வாசகன் ஆக்கி உள்ளேன் ....

ஆம் நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கிறது ..
இறுதில் அவனே முடிவும் எடுக்கிறான் .....
வாழ்க்கை கட்டுரையில் முன்னுரையுடன் அவனே துவக்கி வைக்கிறான் .. ஒரு பொருளை கொடுத்து நம்மை ஆண்டுவிட்டு ..
பின் முடிவுரையும் எழுதுகிறான் ...
எல்லாம் அவன் செயல் .... அவன் சொல்றான் நம்ம செய்யறோம் ....
கதம் கதம் ....
இதனை அக்காலத்தில் எவ்ளோ எளிதாக சொல்லி இருக்கிறார்கள் என்று எண்ணுகையில் வியக்கிறேன் .........