பூக்கள் மரத்தில் இருந்து உதிர்ந்து சாலையினை முத்தமிடும் மாலை நேரம் ....
ஆம் , சுமார் ஒரு 6.30. மணி இருக்கும் ....
ரகுவும், வந்தனாவும் சாலை ஓர பூங்காவின் புற்தரையில் நடந்து கொண்டிருந்தனர். அவர்கள் மனதில் பறந்து கொண்டிருந்தனர் .
அந்த நேரத்தில் நம்ம ரகுவுக்கு மனதில் அவன் கண்ணதாசன் என்று நினைப்பு வேறு . இதோ பாருங்க அவரோட வார்த்தை விளையாட்ட
"முதலில் உறவு கொண்டு உயிராக பலர் முயற்சித்த, போது
நீ என் உயிராகி உறவாக போறவள்"
என்று வந்தனாவின் கைகளை பற்றினான் ரகு. (இவனுக்கு உள்ள ஏதோ ஒன்று இருந்திருக்கு பாருங்க . வந்தனா ரகுவிற்காக அவன் வீட்டார் பார்த்த பெண் . அதை இப்படி கவிதை நடையில் சொல்றாருங்க .)
"நீ எனக்கு கிடைப்பாய் என்று சத்தியமாய் தெரியாது, ஆனால் ஏதோ ஒன்று சொல்லி கொண்டிருந்தது. அதனால் தானோ நான் யார் பின்பும் சுற்றித் திரிய வில்லை". ("சுற்றி இருந்தால் மட்டும் உன் அப்பா உன்னை விடுவாரா ?" என்று ரகுவின் மனசாட்சியின் உறுத்தல் வேறு .)
தானும் ரகு கிடைப்பதற்கே காத்து கொண்டிருந்தாள் என்பதை ஆமோதிப்பது போல் வெட்கத்தில் தலை குனிந்து, ஏற்கனவே ரகுவின் கையுடன் பிணைந்திருந்த தன் கையை இறுகி கொண்டாள்.
மேடை பேச்சு என்றாலே, பேசுகிறேன் என்று சொல்லி மேடையில் பேச்சை பிதற்றிவிட்டு நாட்டியம் ஆடும் ரகு இன்று சொற்பொழிவு ஆற்ற பிறந்தவன் போல் வீரனடையுடன் வந்தனாவின் கை பற்றி நடந்தான். (ஒரு பொண்ணு பக்கத்தில் இருந்தாலே நம்ம பயலுங்க ஹீரோ, கை வேற பிடிச்சு நடந்தா சூப்பர் ஸ்டார் தான் சொல்லவே வேண்டாம்.)
சற்றே இருந்த மௌனத்திற்கு பின் ரகு தொடர்ந்தான்.
"நாம் இது வரை உரையாடியதில் எல்லாவற்றையும் உன்னிடன் சொல்லவில்லை."
ஆனால், "இன்றே ! என் 27 வருட வாழ்க்கையை உன்னிடம் சமர்பித்துவிடுகிறேன்."
"என்னைப் பற்றி நல்ல விஷயங்களை என் அப்பாவும் அம்மாவும் உன்னிடன் சொல்லி இருப்பாங்க அதனால் என்னை பற்றி சில கெட்ட (நல்லவை இல்லாத) விஷயங்களை பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்", என்று ரகு சொல்லி முடிக்கும் முன்பே வந்தனாவின் முகம் சற்று வாடியது போல் ஆனது.
"பதறும் விஷயம் இல்லை அப்படி மோசமான விஷயங்களை இதுவரை நான் செய்ததும் இல்லை", என்றான் . சற்று மெல்லிய புன்னகை பூத்தாள். சரி வந்தனா, "நான் என்னை பற்றி சொல்றதுக்கு முன்னாடி இந்த செந்தமிழ் மொழில பேசுறத கொஞ்சம் நிறுத்திக்குறேன், என்னால முடியல", என்று அப்பாவி சிரிப்பு சிரிச்சான். வந்தனாவின் தலை அதை ஆமோதிப்பது போல் அசைந்தது ஆனால் அவள் கண்கள் அவனது அசட்டு சிரிப்பையும் முகத்தையும் ரசித்துக் கொண்டிருந்தது.
"காலேஜ் படிக்கும் போது பசங்க வற்புறுத்தி ஒரு இரண்டு தடவ தம் அடிச்சேன் எனக்கு பிடிக்காம தான். சத்தியமா அதுக்கு அப்புறம் அடிச்சது இல்ல இனிமேல் அடிக்கும் எண்ணமும் இல்ல" என்று சத்திய பிரமாணம் எடுத்தான் . ஐந்து நிமிடங்களுக்கு முன் பிரிந்த இருவர் கைகளும் சேர்ந்தது ஆம், "நீ செய்தது தப்பு இல்லை" என்று சொல்வது போல் வந்தனா ரகுவின் கை பற்றினாள்.
அப்புறம் என்று இழுத்தான் ரகு, சற்றே சந்தேக பார்வையுடன் பார்த்தாள். "பெருசா ஒன்னும் இல்ல, அப்போ அப்போ பசங்களோட பீர் அடிப்பேன். ஆனா எப்பவாவுது தான்", என்று தன் குற்றத்தை வாதாடினான்.
"நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் நீ வேண்டாம்னு சொன்ன அத தொட கூட மாட்டேன். நீ சரின்னு சொன்ன அப்போ அப்போ லைட்டா அடிசுக்குவேன்", என்ன சொல்ற ? என்று நீதிபதியின் தீர்ப்புக்கு காத்திருக்கும் கைதி போல் ஏங்கி நின்றான் .
"எப்பவாவது பார்ட்டி எதாவுது விசேஷம் இருந்தா லைட்டா சாப்பிடுங்க நான் எதுவும் சொல்லுல ஆனா லிமிட் தாண்ட கூடாது" என்று அன்புக் கட்டளையிட்டாள் . வெற்றி புன்னகை பூத்தான் ரகு. சேர்ந்து இருந்த இருவரது கையும் மீண்டும் இறுகியது.
"நீங்க இது வரைக்கும் யாரையும் லவ் பண்ணினதே இல்லையா?", என்று தன் கேள்வியை மென்று விழுங்கினாள்.
இதுக்கு ஏன் இவ்ளோ தயக்கம். "நான் சைட்டே அடிச்சது இல்ல, அப்படின்னு சொல்றதுக்கு நான் சாமியார் இல்ல". "சைட் அடிப்பேன் ஆனா யாரையும் காதலிக்குல", என்று வீர வசனம் உரைத்தான் .
ஏன்? என்று வந்தனா கேட்க நினைக்கும் முன்பே தான் யாரையும் காதலிக்காத காரணத்தை சொன்னான்.
"சைட் அடிக்க ஒரு பொண்ண கண்ணுக்கு பிடிக்கணும் ஆனா லவ் பண்ண மனசுக்கு பிடிக்கணும், அப்படி என்னோட மனசுக்கு பிடிச்சவ நீ மட்டும் தான்". (அடிச்சான் பாருங்க வசனத்தை நம்ம பயலுக கெட்டிகாரங்க ).
"இது சும்மா சொல்லல என் நெஞ்சத்தின் வார்த்தைகள்", என்று முடிப்பதற்குள் வெட்கத்துடன் குனிந்த வந்தனாவின் தலை , உலகை வென்றவன் போல் தலை நிமிர்ந்தான் ரகு .
"ஆமா, நீ என்ன பிடிச்சு தானா சம்மதம் சொன்ன?", என்று ரகு கேட்டு முடிக்கும் முன் ஆம் என்று தலை அசைத்தாள் வந்தனா . (இது தாங்க நம்ம தமிழ்நாட்டு பொண்ணுங்க உங்கள மிஞ்சிட யாரு )
இருவரும் சொர்கத்தை அப்பூங்காவில் உணர்ந்தனர் . கரங்கள் இணைந்தன , பாதகங்கள் உரசின, புன்னகை பூப்பது போல் அசடு வழிந்தனர் .
அப்படி மிதந்து கொண்டிருக்கும் போது ஒரு குரல் , "டேய் ரகு டைம் என்ன ஆச்சு தெரியுமா ஆபிசுக்கு போலியா உங்க அப்பா அனுபிச்ச ஈ-மெயில எவ்ளோ நேரம் தான் பார்த்துடே இருக்க போற " என்று ரகுவின் நண்பன் சிவா சொல்லிய பின்பே ரகு சுயநினைவிற்கு வந்தான். (ஆமா அவுங்க அப்பா எப்பவோ அனுபிச்ச ஈ-மெயில பார்த்து கனவு கண்டு கொண்டிருந்தான் ரகு, அதுல தான் வந்தனாவோட போட்டோ இருக்கு, நிச்சயம் முடிஞ்சு மூன்று மாசமா போன் மூலமா தான் பேசிட்டு இருக்காரு )
"மச்சி என்னமோ உலகின் மகிழ்ச்சியான மனுஷன் போல ஒரு உணர்வு டா." "இது தான் காதலா?" என்று வழிந்தான் ரகு .
சிவா அமைதியா, "மச்சி நான் ஒன்னு சொல்லட்டுமா?"
" என்னடா தத்துவமா?"
"அதே தான் டா."
"சரி சொல்லு."
"கிடைக்குறது கிடைக்காம இருக்காது; கிடைக்காம இருக்குறது கிடைக்காது" .
"சரி அதுனால என்ன சொல்ல வர ?"
"அவுங்க உனக்கு கிடைப்பாங்க", இதை சிவா சொல்லி முடிகுல ரகு தனது மேலதிகாரிக்கு போன் போட்டான் லீவு சொல்லிட்டு வந்தனாவை பார்க்க போக டிக்கெட் புக் பண்ணினான்.
இது தான் காதலா ? இதே தான் .
"காண்பவள் எல்லாம் காதலி இல்லை; உன்னை கவர்ந்தவளே காதலி "