நானும் பல தலைப்பை பற்றி விவாதித்து எழுத ஆசை ஆனால் அதற்கு ஏற்ற அறிவு நம்ம கிட்ட இல்லைங்க. இந்த போஸ்ட் முழுக்க நடைமுறை தமிழில்தான் இருக்கும். இது என்னோட வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சி. நிகழ்ச்சி னு சொல்றத விட விவாதம் என்றே சொல்லலாம்.
நான் விவாதித்த இரண்டு விஷயங்களை இங்க சொல்ல உள்ளேன்.
ஒன்று, சாப்ட்வேர் வேலை செய்யற மக்களை பத்தி,
இன்னொரு விஷயம் தமிழ் பாதுகாக்க பட்ட விதத்தை, நான் மத்தவங்க கிட்ட சொன்ன கருத்தை சொல்ல போறேன்.
அன்னைக்கு அரக்கோணம் லிருந்து ஈரோடு வரைக்கும் ரயில் பயணம். ஒரு 5 மணி நேர பயணம் என்னடா பண்றதுன்னு உக்காந்து இருந்தேன். எனக்கு பக்கத்துல ஒரு 60 வயசு பெரியவரு அவரோட கல்யாணம் ஆனா பொண்ணோட உக்காந்து இருந்தாரு. பக்கத்துல வயசான தம்பதி இருந்தாங்க.
முதல்ல பெரியவுங்க ரெண்டு பெரும் வழக்கம் போல கவர்மென்ட் பத்தி பேசிட்டு வந்தாங்க. அப்புறம் அப்படியே சாப்ட்வேர் பத்தி பேசு மாறிச்சு. ரெண்டு பெரும் சென்னை மக்கள்.
பெரியவர் 1: "இந்த சாப்ட்வேர் மக்கள் தொல்ல தாங்க முடியல. அவுங்க ஏதோ காசு வாங்குராங்கனு சென்னைல இருக்கிற வீட்டு வாடகையெல்லாம் ஏத்தி விட்டுடாங்க. அவுங்கனால தான் நம்ம ஊர்ல பாதி பிரச்சனை ", சொல்லி முடிச்சாரு.
பெரியவர் 2 : "ஆமாங்க அதே தான்" என்று ஆமாம் சாமி போட்டார்.
நான் : "சார், மன்னிச்சுக்கோங்க!, நீங்க பேசும் போது குறுக்க பேசுறதுக்கு. நானும் ஒத்துக்குறேன் சாப்ட்வேர் மக்கள் வாடகை ஏத்துனாங்க அதுக்கு காரணமே நீங்க எல்லாரும் தான்!" என்று மெதுவா சொன்னேன்.
பெரியவர் 2: "எப்படி தம்பி சொல்ற சும்மா சொல்லாத", என்றார் .
நான் : "சார், நான் ஏன் சொன்னேன் தெரியுமா? நாங்க எல்லாம் வேலைக்கு சிட்டிக்கு வந்த உடன ப்ரெண்ட்ஸ் ஓட தான் தங்கணும். பிரம்மச்சாரிய தான் இருப்போம். போய் வீடு கேட்டா யார் உடனே தருவா? உங்களுக்கெல்லாம் வீடு தர முடியாது. இது தான் பதில் வரும். அப்புறம் நாங்க வாடகை எவ்வளவு நாளும் சரி சொன்ன ஒத்துக்குவாங்க. இப்படி எல்லாரும் ஏத்துனாங்க. எங்களுக்கும் மட்டும் என்ன சம்பளத்தை எல்லாம் வாடகையா கொடுக்க அசையா " என்றேன்.
ரெண்டு பெரும் ஒரு நேரத்துல நீ சொல்றது சரி தம்பி என்றனர்.
இப்படி அவுங்க கூட நல்ல பேசவே அடுத்த விவாததுக்கு என்னையும் இழுத்தாங்க.
பெரியவர் 1 : "தம்பி இந்த தமிழ்நாட்டு பசங்க தான் வெளிய போய் கஷ்படுறாங்க ஹிந்தி தெரியாம கரெட்டா ", என்றார்.
நான் : "ஆமாம் சார் " என்றேன்.
பெரியவர் 2 : "எப்போ ஹிந்தி ரெண்டாவுது மொழியா எடுத்து படிக்கரமோ அப்போ தான் தமிழ்நாட்டு பசங்க உருபடுவாங்க" என்று ஏங்கினார்.
நான் : "சார் அப்படி இல்ல ஹிந்தி ரெண்டாவது மொழி எடுத்து படிச்சா தமிழ் தான் அழிஞ்சு போகும் டியுசன் போய் படிக்கலாம் சார் " என்றேன்.
பெரியவர் 1 : "நீ எப்படி தம்பி சொல்ற அதெல்லாம் ஒன்னும் இல்ல " என்றார் .
நான் : "சார் உங்க தாய் மொழி என்ன ?" என்றேன்.
பெரியவர் 1 : "சௌராஷ்ட்ரா " என்றார்.
நான் : "இப்போ பார்தீங்கனா வட நாட்ல என்ன மொழின்னு சொன்ன நமக்கு ஹிந்தி மட்டும் தான் நியாபகத்துக்கு வரும். ஆனா இந்தியா ல இருக்கிற 18 மொழில ஹிந்தி மட்டும் தான் தெருஞ்சு இருக்கு . உங்க மொழிய உங்க வீட்டுல பேசுறீங்க ஆனா ஒரு 4 தலைமுறை கழிச்சு அத பேசுறது கொஞ்சம் கஷ்டம் எல்லாரும் இரண்டாவுது மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்குறாங்க. இந்தியாவுக்கு தேசிய மொழி அப்படி ஒன்னும் இல்ல, ஆங்கிலம் மாதிரி தான் ஹிந்தி யும். ஏதோ ஒண்ணுமே தெரியாத கம்ப்யுட்டர் ல இருக்கிற மொழி படிக்குறோம் தேவை படும் போது ஹிந்தியும் படிச்சுகுறோம் சார் . இப்போ கத்துகாம எப்போ கத்துக்க போறோம். சும்மா இப்போ ஜாலியா இருக்க தமிழ் மறந்துட்டு. தமிழ் அழிக்குறது நியாயம் இல்லை" என்றேன் .
பெரியவர் 1: நான் சொல்வது சரி என்பது போல் தலை அசைத்தார்.
பெரியவர் 2: கண்டிப்பா தமிழை அழிய விடமாட்டேன் என்பது போல் பார்த்தார் .
எந்த ஒரு போராட்டமும் இல்லாமல் தமிழை வளர்த்துவிட்ட பெருமிதம் என்னுள் .
அது மட்டும் இல்ல சாப்ட்வேர் மக்கள் மேல் இருந்த களங்கம் துடைத்த மகிழ்ச்சி.