இத கொஞ்சம் லேட்டா பார்ப்போம்.
"அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சலை",
இந்த பாட்டு பாடியது அன்புவின் மொபைல் ஆமா அவரோட ரிங்க்டோன்.
"சொல்லுடா, அருள் நீ ரெடியா?" என்றான் பரபரப்புடன்.
"அன்பு, நான் இடத்துக்கு முன்னாடி தான் நிக்குறேன் ஸ்ரீகாந்தும் இளமாறனும் இன்னும் இரண்டு நிமிஷத்துல வந்துடுவாங்க நீயும் சீக்கிரம் வந்தா கரெக்டா இருக்கும்", அருள் அன்புவிடம் அவுங்க ப்ளான் பத்தி சொல்லிட்டு இருந்தான்.
"மச்சி நான் பக்கத்துல வந்துட்டேன் இப்போ வண்டில இருந்து இறங்குறேன்", என்று சொல்லிக் கொண்டே நடந்து வந்து அருள் முதுகை தட்டி,
"என்ன மச்சி எல்லாம் ரெடியா ?" என்று பரபரப்புடன் ராயல் பாரின் வாசல் முன்பு நின்றனர்.
ஆமாங்க, இவுங்கா நாலு பெரும் சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பாக்குறாங்க.
நாலு பேரையும் "வெட்டி பசங்கன்னு" அவுங்களே சொல்லிக்குவாங்க.
இன்னைக்கு சனிக்கிழமை அதான் பயலுங்க சரக்கு அடிக்க பிளான் போட்டு நடத்துறாங்க.
இளமாறனும் , ஸ்ரீகாந்தும் வந்ததும், "மச்சி, சரக்கு அடிக்க இவ்ளோ பில்ட் அப் தேவையா ?" என்றதும்.
"எதையுமே பிளான் பண்ணி பண்ணனும் தெருஞ்சுக்கோ" என்றான் அருள்.
"டேய் அடிக்குறதுக்கு முன்னாடி தத்துவமா வாங்கடா போலாம்" என்று எல்லாரையும் வழிநடத்தினான் அன்பு.
ஒரு டேபிள் பிடிச்சு நாலு பேரும் உக்காந்து ஆர்டர் ஸ்டார்ட் பண்ணிடாங்க.
"4 லார்ஜ் ராயல் சாலெஞ் வித் சோடா அப்புறம் 2 ப்ளேட் சிக்கன் மஞ்சுரியன் கொஞ்சம் சீக்கிரம் கொண்டுவாங்க " என்று முடித்தான் அன்பு.
சரக்கு வந்தது சோடா கலந்து சியர்ஸ் சொல்லி அடிக்க ஸ்டார்ட் பண்ணியாச்சு.
....
கிரிகெட் பத்தி பேச்சு நடந்தது . மச்சி இந்த தோனிக்கு செம லக் என்று ஸ்டார்ட் பண்ணி சென்னை சூப்பர் கிங்க்ஸ் செம டீம் இப்போ என்று சென்றது விவாதம்.
முதல் ரவுண்ட் முடிஞ்சது.
..........
இப்போ அருள் "ஆர்டர் ரிபிட் பண்ணுங்க டிரிங்க்ஸ் மட்டும் சிக்கன் வேண்டாம்" என்றான்.
..........
இப்போ ஆஸ்கர் பத்தி நடந்தது. மச்சி ரெஹ்மான் வாய்ப்பே இல்லடா சூப்பர் , ஆனா அவருக்கு இந்த அவார்ட் லேட்டு , அவராவுது சரி, நம்ம ராஜா சார் பாவம் என்று சென்றது .
..........
இரண்டாவது ரவுண்ட் முடிஞ்சது.
..........
"ஆர்டர் ரிபிட் பண்ணுங்க வித் 1 ப்ளேட் சிக்கன்" என்றான் இளமாறன்.
..........
"மச்சி , அந்த சுவாதி கிட்ட பேசுனியா? என்ன தான் சொல்றா உன்ன இப்படி சுத்த விடுறா ? என்ன நினைச்சுகிட்டு இருக்கா ? ரெண்டுல ஒன்னு கேட்டுடு , அன்பு" என்று மப்பில் பாச மழை பொழிந்தான் அருள் .
"ஆமாம்டா எதுக்கு டைம் வெஸ்ட் பண்ற பூவா தலையா போட்டு பார்த்துடுவோம் என்ன சொல்ற" ,
"யாருடா இது? என்று மப்பில் அன்பு தலை நிமிர்த்தி பார்த்தான்" வேற யாரு நம்ம இளமாறன் தான்.
"என்னடா ஸ்ரீகாந்த் நீ எதுவும் சொல்லுல " என்றதும் .
"ஆர்டர் ரிபிட் பண்ணுங்க டிரிங்க்ஸ் மட்டும் சிக்கன் வேண்டாம்" என்றான் அங்க சிரிப்பு வெடி தான் போங்க.
சரக்கு வந்து "இது தான் மச்சி லாஸ்ட் ரவுண்ட் ப்ராமிஸ் பண்ணிட்டு " அடிச்சாங்க .
"டேய் டேய் அன்பு மெதுவா குடிடா ஏன் அவசரம் "
"இத எப்படி ரசிச்சா குடிக்க முடியும் போடா"
"பில் கொடுவாங்கா ப்ளீஸ்", என்று கச்சேரி முடிய போறத சொன்னான் இளமாறன்.
"மச்சி நேத்து வரேன்னு சொல்லிட்டு அவ என்ன ஏமாத்திட்டா, அவல சும்மா விட கூடாது" என்று புலம்ப ஆரம்பிச்சான் அன்பு .
"அள்ளுங்கடா அவன", சொல்லிட்டு அப்படியே ரூமுக்கு தள்ளிட்டு வந்தாச்சு.
"மச்சி இப்பவாவுது பேசட்டுமா "
"அன்பு பேசு ஆனா அளவா பேசு ரொம்ப பேசி எங்க மப்ப இறக்காத" என்றான் அருள்.
"மச்சி போன மீட்டிங்ல பார்த்து பேசிட்டு மெசஞ்சர்ல சேர்த்தேன்"
"அப்புறம் அப்போ அப்போ காபி ஷாப் போவோம் , கிப்ட் கொடுத்தேன்"
"நாதேறி எனக்கு எதாவுது வாங்கி கொடுத்து இருக்கியா " என்றான் ஸ்ரீகாந்த்.
"மச்சி என்னடா இப்படி சொல்லிட்ட உன்ன பிரிச்சு பாக்க விரும்புல "
"டேய் ஸ்ரீகாந்த் கொஞ்சம் சைலெண்டா இரு நீ சொல்லுடா அன்பு " என்றான் இளமாறன்.
"அப்புறம் டா ஒரு நாள் நைட்டு சாப்பிட கூபிட்டா நான் அப்போ தான் இரண்டு சப்பாத்தி சாப்பிட்டு இருந்தேன் இவ கூப்பிடதுக்கு நான் போயி சாப்பிட்டேன் டா "
"இப்படியே சாபிடு 34 பேன்ட் 36 ஆயிடும் டா பாத்துக்கோ"
"நீ மேல சொல்லு அன்பு ", என்றான் அருள் .
"அவளுக்கு பல தடவ கோடிங் பண்ணி கொடுத்திருக்கேன் டா"
"சரி அதுக்கு இப்போ என்ன "
"இல்ல டா இப்படி அவளுக்கு தேவையானத பார்த்து பார்த்து செய்து இருக்கேன் டா "
"சரி அதுக்கு "
"போன வாரம் டா டிஸ்கொதே போலாம் வரியா கேட்டேன் டா அவளும் சரினு சொன்னா டா "
"அடபாவி அதான் போன வாரம் எங்க கூட வர மாட்டேன் சொன்னியா "
"இருடா புல்லா சொல்றேன் , சரி டிஸ்கோதே முன்னாடி வெய்ட் பண்ணிட்டு இருக்கேன் அவ அவளோட பாய் ப்ரெண்டோட வந்து இறங்கி ஷாக் கொடுத்தா மச்சி "
"ஷாலினி இப்படி பண்ணுவானு எதிர்பாகுல டா "
"டேய் அன்பு மப்புல ஒளராத அது ஷாலினி இல்ல சுவாதி டா "
"இல்ல மச்சி இது ஷாலினி தான் சுவாதி இல்ல "
"டேய் அப்போ சுவாதி "
"அது போன மாசம் இது இந்த மாசம் "
"டேய் நீ கலட்டிவிடுல அவுங்க தான் உன்ன கலட்டி விடுறாங்க"
"நம்ம எல்லாம் சிங்கம் டா",
"அதுக்கு",
"சிங்கிளா தான் இருப்போம்",
"எவ்ளோ நாள்?, ஆள் சிக்க வரைக்கும்", என்று சொல்லி கவலைகள் மறந்து சிரித்து, கவிழ்ந்தனர் நம் சிங்கங்கள்.
----------------சுபம் ------------------------------
இது சும்மா ஒரு ஜாலிக்காக சந்தோசமா இருக்க தான் போஸ்ட் பண்ணினேன் . இதில் வரும் அனைத்தும் கற்பனை தான். நீங்களே எதுவும் கற்பனை பண்ண வேண்டாம் . இந்த மொக்கைனு பீல் பண்ணினா நான் எதுவும் பண்ண முடியாது அதுக்கு தான் எழுதினேன்.