Sunday, August 31, 2008

அவளுக்காக!!!

நம்ம Sometimes friends ஓட Party போய் Beer அடிக்குறது Padmaja வுக்கு பிடிக்குமா ? என்ன சொல்லுவாளோ ? Problem இல்ல stop பண்ணிடுவோம் என்ன பிரச்சனை . அப்புறம் Padmaja Marriage கு அப்புறம் வேலைக்கு போறத பத்தி யோசிக்க வேண்டாமே, அது அவ இஷ்டம் . நம்ம Company ல Onsite போனா உடனே போலாமா இல்ல அவ Postpond பண்ண சொல்லிட்டா என்னடா கார்த்திக் பண்றது ? Problem இருக்காதே நம்ம தான் Company ல சொல்லி இருக்கோமே ......

Marriage கு அப்புறமா அவ transfer வாங்குவாளா இல்ல நம்ம transfer apply பண்றதா ? இதை better பேசியே clear பண்ணிப்போம் . நம்ம வீட்டுல problem இருக்காது நம்ம இஷ்டம் தான் சொல்லிடாங்க . நம்ம Night call பண்ணினா அவளுக்கு பிடிக்குமா ? இல்ல SMS ஓட stop பண்ணிடலாமா ? அவளோ கவிதை கதை எல்லாம் எழுதுவா கண்டிப்பா அதை படிக்க சொல்லி நம்ம comments கேட்டா தான் problem நம்ம எங்க இதெல்லாம் படிச்சு இருக்கோம், சரி இன்னும் ரெண்டு மாசம் கவிதை கதை மாதிரி பல books வாங்கி கத்துக்குவோம் . எவ்வளோ பண்றோம் இத பண்ண மாட்டமா !!! . என்னடா விஜய் படத்தோட வசனமெல்லாம் பேசுறேன்னு நினைக்காதீங்க காதல் வந்துட்டா இதை கூட பண்ணாம விட்டா எப்படி !

சேலையா ? சுடிதாரா ? அவளுக்கு எது பிடிக்கும் ? என்ன Gift கொடுக்கலாம் ? இப்படி யோசிச்சே Confuse ஆயிடுவேன் போல , சரி அவுங்க வீட்டுல எப்படி உடனே Accept பண்ணுவார்களா? என்ன பெருசா ஆகிடும் பேசி சமாளிப்போம். இதை கூட சமாளிக்காம என்ன காதல் கத்திரிக்கனு பண்ணிட்டு .

Shalini நம்மள பத்தி எதாவுது Padmaja கிட்ட Complaint பண்ணுவாளா ? அவளோட proposal நம்ம accept பண்ணுல அதனால எதாவுது குண்டக்க மண்டக்க பண்ணிட்டா என்ன பண்றது ? Decent Girl da அவ அப்படி பண்ண மாட்டா So அதை பத்தி ரொம்ப think பண்ண வேண்டாம் .

Marriage Date பத்தி நம்ம think பண்ண வேண்டாம் அதை பெரியவுங்க பார்த்துப்பாங்க . Place அதுவும் நம்ம Decide பண்ற அளவுக்கு பெருசு இல்ல flexible place ல வெச்சுப்போம் . Relatives யாரவுது caste பத்தி பேச்சு எடுப்பாங்களா? நம்ம சொந்தமானாலும் சரி padmaja சொந்தமானாலும் சரி இப்போ கொஞ்சம் தெளிவு ஆகிடாங்க இப்போ inter caste marriage எல்லாம் common அப்படி ஒரு Mentality வந்துட்டாங்க . So நம்ம safe da கார்த்திக் .

இப்படி அனைத்தையும் கார்த்திக் அவனுக்கு உள்ளேயே பேசிக்கிட்டு இருந்தான் ஆனா இதை எப்போ பேசினான் சொல்றது தான் Highlight ஆமா Padmaja வுக்கு ORKUT Friend request அனுப்பிவிட்டு தான் ! ஏனென்றால் Padmaja வுக்கு கார்த்திக்கை தெரியுமானே அவனுக்கே தெரியாது ! அதான் இப்படி பேசிகிட்டு sorry புலம்பிக் கொண்டிருந்தான் .

Tuesday, August 26, 2008

காற்றுள்ள போதே தூற்றிக்கொள் !!!

மக்கள் கூட்டம் என்றும் நடமாடும் Bus stop ல் Stylish மற்றும் Homely சுவாதி நின்று கொண்டிருந்தாள், அவள் வழக்கமாக அணியும் Fast Track கண்ணாடியுடன். தினமும் அவ்வழியில் தனது Office போகும் அர்ஜுன் அன்று சட்டென்று சுவாதியை பார்த்தான் . அர்ஜுன் எப்பொழுதும் பைக்கில் செல்பவன் , அவளது அழகினில் மயங்கி அவனை மறந்து அவளை பார்த்துக் கொண்டிருந்தான். சுவாதி எந்த எதிர்ப்பும் தரவில்லை அவள் அழகே தோற்கும் ஓர் புன்னகை பூத்தாள். அர்ஜுனால் இதனை நம்ப முடியவில்லை , சற்றே கனவில் மிதந்து அலுவலகம் சென்று பணியை முடித்து வீடு திரும்பி கனவை தொடர்ந்தான் .



அடுத்த நாளும் பிறந்தது அடடே! என்ன ஆச்சர்யம்! சுவாதி நிற்கும் Bus stop ல் நம்ம அர்ஜுன் ஆம் இன்று அவனோட bike repair இது அவன் அம்மா விடம் சொன்ன பொய் அப்புறம் Bus stop ல சுவாதியை எப்படி பார்ப்பான். கொஞ்சம் Smart Dressing உடன் நின்று கொண்டிருந்தான். சுவாதி சற்றும் தயங்காமல் மலர்ந்த புன்னகையில் நின்று கொண்டிருந்தாள்.



எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்ன சொல்வது என்று அர்ஜுன் அவன் உள்ளே பல ஆயிரம் கேள்வி எழுப்பி நின்று கொண்டிருந்தான் சற்று தயக்கத்துடன் . அழகிய மகன் ஆனாலும் அவனும் தமிழ் மகனே தயக்கம் இருக்க தானே செய்யும். சற்றும் எதிர்பாராத வகையில் சுவாதி அவனது அருகே வந்தாள் "Excuse me Could you please help me to cross the road " "கொஞ்சம் road cross பண்ண help பண்ண முடியுமா " என்றாள் தன் காதை நம்ப முடியவில்லை . அர்ஜுன் சொன்ன பதில் சுவாதிக்கு கேள்வி ஆனது அவன் கேட்டதோ "ஏன் " என்று .



அவள் சற்று பலத்த சிரிப்பொலியுடன் புன்னகைத்து தனக்கு "கண்களால் இவ்வுலகை காண முடியாது " என்பதை கூறினாள் இதனை அவனது காதுகள் கேட்க மறுத்தன தலை குனிந்தான் .



தலை நிமிர்ந்து பதில் கூற முற்பட்டான் சுவாதி அவன் முன் இல்லை ஆம் அவள் சென்று விட்டாள் road யை கடந்து வேறொருவர் உதவியுடன் .



காற்றுள்ள போதே தூற்ற வேண்டும் !!!

Sunday, August 24, 2008

என்று தான் சங்கமம் ???

எல்லா நாளும் என்னால் கடற்கரையில் சுற்றித் திரிய இயலாது , ஆம் நான் கடற்கரை நகரில் இல்லை ஆனால் அன்றொரு நாள் கடற்கரையில் மெல்ல நடந்து சற்று இளைப்பாற சந்தர்ப்பம் கிடைத்தது . ஆம் கடற்கரையில் மெல்ல நடக்கும் சுகமே சுகம்.

அலைகள் என் கால்களில் முத்தமிட்டு சென்று கொண்டிருந்தன. அப்பொழுது அலைகள் ஏதோ சொல்லு துடிப்பது போல் ஓர் உணர்ச்சி. என்னதான் சொல்கிறது என்று சற்று கவனித்தேன் . மனிதர்கள் நாம் நம் உறவினர்களை சந்தித்து கொள்ள பல நூறு பண்டிகைகளை வைத்து அவர்களை கண்டு உறவாடி குதூகலிக்கிறோம். உறவுமுரைகளோடு சங்கமிக்கிறோம். என்னுள் சங்கமிக்கும் ஆறுகளோ என்று தான் சங்கமிக்கும் ? அனைத்து ஆறுகளும் என்று தான் சங்கமிக்கும் . ஆறுகளின் ஏக்கம் என்று தான் தீரும் ?...

ஒரு முறை உபயோகித்த காகிதத்தை கூட வீணாக்காமல் உபயோக்கிக்கும் மனிதர்கள் என்று தான் ஆறுகள் என்னுள் வீணாக கலப்பதை தடுப்பார்கள் ??? .....

என்ன தோழர்களே!!! நாம் ஒன்றாக இணைந்து ஆறுகளை இணைப்போம் வாருங்கள் வளமுடன் வாழ்வோம் ..........

Thursday, August 14, 2008

சில்லறை சிந்தனைகள் !!!

நேற்று மிகுந்த வேலை இருந்தது அதனால் இரவு 11.30 ஆகிவிட்டது என் வேலைகளை முடிக்க, ஒரு வழியாக வீட்டுக்கு கிளம்பினேன். அந்நேரத்துக்கு office பக்கதுல ஆட்டோ எல்லாம் flight rate சொல்லுவாங்க என்பதனால் சற்று தூரம் நடந்து வந்தா bus or auto கிடைக்குமென்று நடந்து வந்தேன்.
என்னோட purse சில 100 ரூபாய் நோட்டுகள் மற்றும் சில கூப்பன்கள் இருந்தன . சில்லறைகள் சுத்தமாக இல்லை . சமாளித்து விடலாம் யாரவது சில்லறை மாற்றி தரமாட்டார்களா என்ற ஒரு நம்பிக்கையில் நடந்து வந்து கொண்டிருக்கிறேன் . Software employee என்று நிரூபித்து விட்டேன் சில்லறை இல்லாமல் ஏனெனில் எங்களிடம் உள்ள காசு தேவை உள்ள போது உதவாது, ஆம் இப்பொழுது என்னிடம் உள்ள பணம் எனக்கு உதவாது .
நாம் பொதுவாக நம் நண்பர்கள் எதாவது தேவை இல்லாத கேள்வி கேட்கும் போது ஏன் சில்லறை தனமா கேக்குற என்று சில்லறை என்பதை சற்று குறைந்து மதிப்பிட்டு இருந்தோம், ஆனால் நான் இப்பொழுது தான் சில்லறையின் மதிப்பை உணர்ந்தேன் ஆம் ஒருவன் என்னிடம் சில்லறை இல்லை என்று என்னை ஏற்றி செல்லவில்லை . நடப்பதற்கு சளைக்கவில்லை அதற்கான வயதும் இல்ல எனக்கு . எனவே நடக்க ஆரம்பித்தேன் வெறும் 2 Km தான் இருந்தும் நடக்கும் போது எனக்கு நினைவிற்கு வந்தது இது தான் ஒவ்வொருவருக்கும் ஓர் மதிப்பு உண்டு அது அவருக்கு ஏற்ற நேரத்தில் வெளிப்படும் .

எனவே எதனையும் எவரையும் குறைத்து மதிப்பிட வேண்டாம் . Dont Under estimate anyone. சில்லறை சிதறாத போது சிதறிய சிந்தனைகள் .

Sunday, August 10, 2008

சம்பாத்தியம்

எனக்கு எப்பவும் சாலை விதிகளை மதிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும் . ஏனெனில் நம் நாட்டில் உயிர் வாழ விதிகளை மதித்தாக வேண்டும். ஒரு முறை விதிகளை மதித்து எனது வண்டியை நிறுத்தினேன். பிள்ளையுடன் வந்து பிச்சை எடுத்தான் , நானும் ஒரு ருபாய் செலவு செய்தேன் தர்மம் என்ற பெயரில் புண்ணியம் சம்பாதிக்க தான் ஆசை . ஏனெனில் எனக்கு சம்பாதிக்கும் வயசு , சற்று புண்ணியம் சம்பாதிக்க வேண்டுமே . இருந்தாலும் , நான் சற்று சிந்திக்கவும் செய்தேன் குடிமகன் அல்லவா . அவன் ஏன் பிச்சை எடுத்தான் வாழ இயலாமையா? இல்லை முயல இயலாமையா ? வாழ கற்று கொடுத்து, வறுமையினை ஒழிப்போம் . சிந்தித்து செயல்படுவோம்.

Friday, August 8, 2008

மனிதா உன் நிலை தான் என்ன ?

இது hyderabad தானா ? ஒரு doubt தான் அப்படி ஒரு கன மழை கடும் குளிர் . இப்படி busy ah இருப்பேன்னு நான் நெனச்சது கூட இல்ல. கொஞ்சம் வேலை அதிகம் தான் . Late ah கிளம்பினேன் மழை வேகமா வந்து கொண்டிருந்தது. எனக்கு வேற வழி இல்லை ஒன்று auto இல்லையென்றால் software ஓட எக்ஸ்பிரஸ் என்கிற cab தான் எனக்கு இருந்த choice அன்று எதுவும் கிடைக்கவில்லை , கொஞ்சம் தூரம் நடந்து வந்து ஓடும் பஸ்சில் ஏற வேண்டியது ஆனது . கைல laptop வேற காலேஜ் நியாபகத்தில் ஏறிவிட்டேன். சற்று தொலைவில் எனது stop வந்தது driver கு ஏனோ அவசரம் போல பஸ்ஸை நிறுத்தாமல் சற்று slow பண்ணினார். ஓடும் பஸ்ஸில் இருந்து இறங்கினேன். கையில் குடை இருந்தும் பயனில்லை தலை சற்று நனைந்து விட்டது. 2 நிமிட நேரம் நடந்து சென்றால் எனது வீடு வந்துவிடும் அதற்குள் எனது laptop நனைந்து விட்டது என்று அதனை பார்க்க பதறிய நெஞ்சம் என்ன மறந்தது . அந்த மிஷன் மேல் உள்ள அக்கறை என்மீது எனக்கில்லை . மனிதா உன் நிலை தான் என்ன ? உன்னையே நீ கண்டுக்கவில்லை என்றால் எப்படி ?. இப்படி நான் மட்டும் இல்லை என்னை போல் பலர் என்று நினைக்கையில் வியந்தேன் .

Thursday, August 7, 2008

விவாதம் - மனதில்

தமிழ் அமுதினை அகமகிழ அள்ளி தெளித்து

கயல்விழிகள் கரையும் அளவில் ஆராய்ந்து

கவிதையினை பாடலாக அளிப்போர் பலர் ;

சிலரே வசனமளிப்பர் ; சிலருள் ஒருவனாக

உரையாடலை விவாதம் ஆக்க முயற்சிக்கிறேன் ;

தோழன்:

உயிரினை காதலில் கரைத்து கடிதத்தில்

மடித்து வைத்துள்ளேன் . என் காதலியின்

காது பட என் காதலை பாடிவிட்டு வருவாயா நீ?

தோழி:

உனக்கு காதலியாக காட்சியளிப்பேன் என்றிருந்தேன் ,

தோழியாக உனக்கு உதவ சொல்கிறாய் ! என்ன செய்வேன் ?

தோழியாக அறிமுகமானது என் தவறே !

தோழன் :

கரு கொண்டவள் கருவில் கொண்டால் ,

நீ எனக்கு வழி காட்டடி ! உன் தவறை மன்னித்து

மறந்துவிட்டால் நட்பு நனைந்து கரைந்துவிட்டாலும் விடும் ;

மன்னிக்க மறந்து நினைப்பினை மறந்துவிட்டேனடி தோழி என்றென்றும் !

தோழி :

புருஷன் புரிந்து கொண்டாலே பெண்களின்

வாழ்வுதனில் சொர்க்கம் ; மனமறிந்த நீ கிடைத்தால்

அச்சொர்க்கத்தை தேடி செல்வது

போல என்று தான் ஒரு சுயநலம் ;

தோழன் :

அடி மதி இல்லாதவளே ! என் இதயத்தில்

இருப்பது தான் உன் ஆசை ! என் இதயமே நீ என்கிறேன் ;

தோழி என்பதால் என் ஜீவனாக ;

ஜீவிக்க ஆசையா ? என் ஜீவனை காத்தருளும் சுவாசம்

நீயடி! என் தோழி ஆனதால் .

தோழி :

நீ சொல்வது சரிதானடா ஆனால் உன் காதலி மீது

பொறாமை தான் நானும் பெண் அல்லவா !

இருக்கத்தானே செய்யும் ; உன் காதல் தோல்வியுற்றால்

உயிரை விடும் முதல் ஆள் நான் தான் நினைவில் இருக்கட்டும்.

தோழன் :

சரி நில்லடி ஒன்றை கவனித்தாயா ? சில காதல்

தோல்வியுறும் ஆனால் அனைத்து நட்பும் சில சமயத்தில்

பிரிவு தான் அடையும் ; பிரிவு ஈருயிர்க்கு ; நாம் ஓருயிர்

அல்லவா ! நமக்கு பிரிவேது ;

தோழி :

நீ சொல்வது சரி தான் என்னை தேவதையாக எண்ணினாய்

சராசரி பெண்ணாக காட்டிவிட்டேன் ; மன்னிப்பு கேட்க

மாட்டேன் உன்னிடம் ; உனக்கு அறவே பிடிக்காது என்பதை

அறிந்தவள் உன் தோழி ! சரி உன் காதலை மட்டும் அல்லாமல்

உன்னை பற்றியும் சொல்லி பிரிவில்லா நம் நட்பு போல தோல்வி

அடையாது உன் காதல் என்பதை உறுதி செய்கிறேன் ;சரியா ?

தோழன் :

ஆண்களின் வெற்றிக்கு பின்னால் பெண் இருப்பதில்லை ;

பெண்கள் இருகிறார்கள் ! பூமியை ஆழ்வது பஞ்ச பூதங்கள்

எனக்கு மனிதனை ஆழ்வது ஐந்து விரலாக இருக்கும் ,

மாதா, பிதா , குரு, தெய்வம் , நட்பு ஆகியவையே , இவை அனைத்தையும்

சொல்லிவிட்டு அவளைப் பற்றி சொல்லவில்லை என்று நினைப்பால்

பெண்ணல்லவா ! என் கையே அவள் தான் என்று சொல்லிவிடு ;

தோழி :

தந்திரக்காரன் ! கொடுத்து வைத்தவள் உன் காதலி ;

நல்ல காதலன் கிடைத்தால் ; பெருமையடைகிறேன் !

என் உயிர் தோழன் நல்ல காதலனாக இருப்பதை கண்டு !

குசேலன் தருணங்கள்

தனது குருநாதர் குசேலனாக கஷ்டப்படுவதால் அவரை குபேரனாக்க முடியா விட்டாலும் தன்னால் முடிந்த வரை உதவி செய்ய எண்ணி மலையாளம் மொழியில் ஹிட் ஆன ஒரு படத்தை நமது சூப்பர் ஸ்டார் தேர்ந்து எடுத்தார் என்பது நான் கேட்ட செய்தி.

குசேலன் ஷூட்டிங் ஆரம்பித்ததிலிருந்து சில உண்மைகளும் பல புரளிகளும் கிளம்பிய வண்ணம் இருந்தது அதில் மிகப் பெரியவை இது Its Complete Rajnikanth's Movie என்று வாசு கிளப்பிய புரளியில் மிதந்த ஒரு சாதாரண ரஜினி ரசிகன் என்ற முறையில் காத்திருந்து First Day First Show Ticket book பண்ணி theatre க்கு சென்றேன்.

படம் ஆரம்பித்து 16 வது நிமிடத்தில் தலைவர் entry என்பது நான் அறிந்து இருந்தேன் இருந்தும் ஒரு ஆர்வம். அது மட்டும் இன்றி வாசு மீது இருந்த ஒரு வித பயமும் தான்.

குதிரையில் வந்து Superstar என்று எழுதிய போது theatre la விசில் கிளம்பியது. ரஜினி ரசிகர்கள் சும்மாவா :-) .

ரசிகர்கள் நாங்க அப்போ அப்போ சொல்லுவோம் ரஜினி போஸ்ட்ரே 100 நாட்கள் ஓடும் என்று சொன்னதை உண்மையாக்க வாசு இந்த படத்தை எடுத்தாரோ ? ரஜினியை சில நொடிகள் கண்ணில் காண்பித்தார் . வடிவேலுவின் நகைச்சுவை என்ன செய்தும் தலைவரை தான் தேடியது கண்கள். பசுபதியின் சோகமான முகமும் மீனாவின் makeup நிறைந்த முகமும் மனதில் நிற்கவில்லை.

நயன் தாரா இருந்தார் என்பதற்கு title, ஒரு song, வடிவேலு வுடன் ஒரு காட்சி தவறு வடிவேலு இருக்கும் ஒரு காட்சி . Guest role என்ற பிரபுவுக்கு கூட வசனம் இருந்தது நயன்தாரா வுக்கு இல்லை. வாசுவின் சொல் படி அவர் கதையின் நாயகி . என்ன கொடுமை சரவணன் இது ?

Superstar சுந்தர்ராஜன் (RS) உடன் பேசும் காட்சி பிராமாதம், 'வாழ வைக்கும் பூமி தான் வாழ சிறந்த இடம்' என்று ரஜினி சொன்னது சரியான அழுத்தம் தரப்படவில்லை, ஏன் ? சிலர் அதனை கவனிக்கவில்லை.

இறுதியில் school function இல் ரஜினி பேசும் காட்சி பலர் இதற்கு தான் படத்தில் இறுதி வரை இருந்தது போல் ஒரு உணர்வை காண்பித்தனர். Superstar சொல்லவே தேவை இல்லை style ஆகா பேச வந்தார். வார்த்தைகள் முத்துக்களாய் வெளிவந்தது. சிலரது கண்களில் கண்ணீரும் தான் வந்தது அவரவர் நண்பர்களை நினைத்து, தவறில்லை! superstar இன் நடிப்பு அப்படி இருந்தது.
நம்மை நமக்கே உணர்த்தியது. நண்பர்கள் தினம் நெருங்கி கொண்டிருப்பதை நினைவு படுத்தியது என்ற திருப்தியில் தலைவர் நடிப்பை பார்த்த மகிழ்ச்சியில் வெளிவந்தோம் ரசிகர்கள் .

வாசு ஏன் அசோக் குமாருக்கு பதிலாக ரஜினி என்ற பெயரை பயன்படுத்தவில்லை . அதனுடைய சக்தி உங்களுக்கு தெரியாதா ?
இதனால் பாலச்சந்தருக்கு லாபம் Superstar ரசிகர்கள் ஆகிய நமக்கும் தான் இனி தலைவர் வாசு படத்தில் நடிக்க மாட்டார் என்ன நம்பிக்கை வந்தது.
இதில் நான் சொன்னவை, Rajni ரசிகனாக இல்லாமல் சொல்ல கடமைபட்டேன். என்ன இருந்தாலும் குசேலன் miss பண்ண வேண்டிய படம் இல்லை.

நட்புக்காக பார்க்க வேண்டிய படம்.