தனது குருநாதர் குசேலனாக கஷ்டப்படுவதால் அவரை குபேரனாக்க முடியா விட்டாலும் தன்னால் முடிந்த வரை உதவி செய்ய எண்ணி மலையாளம் மொழியில் ஹிட் ஆன ஒரு படத்தை நமது சூப்பர் ஸ்டார் தேர்ந்து எடுத்தார் என்பது நான் கேட்ட செய்தி.
குசேலன் ஷூட்டிங் ஆரம்பித்ததிலிருந்து சில உண்மைகளும் பல புரளிகளும் கிளம்பிய வண்ணம் இருந்தது அதில் மிகப் பெரியவை இது Its Complete Rajnikanth's Movie என்று வாசு கிளப்பிய புரளியில் மிதந்த ஒரு சாதாரண ரஜினி ரசிகன் என்ற முறையில் காத்திருந்து First Day First Show Ticket book பண்ணி theatre க்கு சென்றேன்.
படம் ஆரம்பித்து 16 வது நிமிடத்தில் தலைவர் entry என்பது நான் அறிந்து இருந்தேன் இருந்தும் ஒரு ஆர்வம். அது மட்டும் இன்றி வாசு மீது இருந்த ஒரு வித பயமும் தான்.
குதிரையில் வந்து Superstar என்று எழுதிய போது theatre la விசில் கிளம்பியது. ரஜினி ரசிகர்கள் சும்மாவா :-) .
ரசிகர்கள் நாங்க அப்போ அப்போ சொல்லுவோம் ரஜினி போஸ்ட்ரே 100 நாட்கள் ஓடும் என்று சொன்னதை உண்மையாக்க வாசு இந்த படத்தை எடுத்தாரோ ? ரஜினியை சில நொடிகள் கண்ணில் காண்பித்தார் . வடிவேலுவின் நகைச்சுவை என்ன செய்தும் தலைவரை தான் தேடியது கண்கள். பசுபதியின் சோகமான முகமும் மீனாவின் makeup நிறைந்த முகமும் மனதில் நிற்கவில்லை.
நயன் தாரா இருந்தார் என்பதற்கு title, ஒரு song, வடிவேலு வுடன் ஒரு காட்சி தவறு வடிவேலு இருக்கும் ஒரு காட்சி . Guest role என்ற பிரபுவுக்கு கூட வசனம் இருந்தது நயன்தாரா வுக்கு இல்லை. வாசுவின் சொல் படி அவர் கதையின் நாயகி . என்ன கொடுமை சரவணன் இது ?
Superstar சுந்தர்ராஜன் (RS) உடன் பேசும் காட்சி பிராமாதம், 'வாழ வைக்கும் பூமி தான் வாழ சிறந்த இடம்' என்று ரஜினி சொன்னது சரியான அழுத்தம் தரப்படவில்லை, ஏன் ? சிலர் அதனை கவனிக்கவில்லை.
இறுதியில் school function இல் ரஜினி பேசும் காட்சி பலர் இதற்கு தான் படத்தில் இறுதி வரை இருந்தது போல் ஒரு உணர்வை காண்பித்தனர். Superstar சொல்லவே தேவை இல்லை style ஆகா பேச வந்தார். வார்த்தைகள் முத்துக்களாய் வெளிவந்தது. சிலரது கண்களில் கண்ணீரும் தான் வந்தது அவரவர் நண்பர்களை நினைத்து, தவறில்லை! superstar இன் நடிப்பு அப்படி இருந்தது.
நம்மை நமக்கே உணர்த்தியது. நண்பர்கள் தினம் நெருங்கி கொண்டிருப்பதை நினைவு படுத்தியது என்ற திருப்தியில் தலைவர் நடிப்பை பார்த்த மகிழ்ச்சியில் வெளிவந்தோம் ரசிகர்கள் .
வாசு ஏன் அசோக் குமாருக்கு பதிலாக ரஜினி என்ற பெயரை பயன்படுத்தவில்லை . அதனுடைய சக்தி உங்களுக்கு தெரியாதா ?
இதனால் பாலச்சந்தருக்கு லாபம் Superstar ரசிகர்கள் ஆகிய நமக்கும் தான் இனி தலைவர் வாசு படத்தில் நடிக்க மாட்டார் என்ன நம்பிக்கை வந்தது.
இதில் நான் சொன்னவை, Rajni ரசிகனாக இல்லாமல் சொல்ல கடமைபட்டேன். என்ன இருந்தாலும் குசேலன் miss பண்ண வேண்டிய படம் இல்லை.
நட்புக்காக பார்க்க வேண்டிய படம்.
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
தனது குருநாதரை காப்பாற்றுவதற்காக ரஜினி ஒரு படம் எடுக்க விருப்பப்பட்டிருந்தால் 'முத்து' வை போல் ஒரு படம் எடுத்திருக்க வேண்டும்....ஆம் ஒரு வகையில் பார்த்தல் குசேலனும் ஒரு முத்து தான்.....இரண்டுமே தரமான அழகான மலையாள படங்களின் தரக்குறைவான COPY தான்.....( FYI, முத்து என்பது தேன்மாவின் கொம்பத்து என்ற மோகன்லால் படத்தை base செய்து எடுத்த படம்....ஒரே வித்யாசம், தமிழில் சூப்பர் ஸ்டார் முடிவில் அந்த மாளிகையின் முதலாளி ஆகி விடுவார்...மலையாளத்தில் அது ஒரு சாதரண மனிதனின் கதை.....) அதையே தான் குசேலனிலும் ரஜினி செய்துள்ளார்.....
அடுத்தபடியாக கத பறையும்போள் என்ற மலையாள படத்தை தேர்ந்தெடுத்து ரஜினி அல்ல வாசு.....ஒரு முழு நீள ரஜினி படத்தை குடுக்க இல்ல எடுக்க விரும்பிய வாசுவுக்கு ரஜினி Dates இல்லை என்று சொன்னதின் விளைவு தான் இந்த குசேலன் எனும் தவறு.....தனது குருநாதருக்காக ரஜினியும் இந்த படத்தை ஒத்துக்கொண்டார்.....
வாசு கிளப்பிய புரளியை ரஜினி கடைசி நிமிஷத்தில் அல்லாது எப்போதும் எதிர்க்கவும் இல்லை என்பது என் கருத்து....படத்தின் இசை வெளியீடு....இசை தட்டு முழுவதிலும் ரஜினி தான் இருந்தார்.....பாவம் பசுபதி....
அனால் படம் வெளிவருவதற்கு சில நாள் முன்னர் ரஜினி நான் படத்தின் 25 % இல் மட்டுமே உள்ளதாக சொன்னது வரவேற்க தகுந்தது....அப்போழுதாவுது சொல்ல மனது வந்ததே..... ;)
எந்தவித ஏழ்மையில் இருந்தாலும் heroine make-up, lip-stick இல்லாமல் screen இல் வரக்கூடாது என்பது தமிழ் திரையுலகில் மிக சில நேரம் மட்டும் மீறப்படும் ஒரு எழுதப்படாத சட்டம்.....
ஒரு சூப்பர் ஸ்டார் படத்தில் முகம் சுளிக்கக்கூடிய விதத்தில் scenes மற்றும் dialouges இருந்து நான் பார்த்த முதல் படம் வாசுவின் சந்திரமுகி....அதில் சில dialouges mute செய்யபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.....இப்பொழுது ஒரு படி மேலே போய் நயன் தாராவின் Body show பண்ணியிருக்கிறார் வாசு.....
வாழ வைத்த பூமி தான் வாழ சிறந்த இடம் என்பதற்கு அழுத்தம் தராததற்கு காரணம் ஒரு வேளை ரஜினியிம் தீர்க்க தரிசனமோ....?????
அசோக் குமாருக்கு பதிலாக ரஜினி என்ற பேரை என் வாசு பயன்படுத்தவில்லை....பதில் மிக எளிது....மலையாளத்தில் மம்மூட்டி நடித்த character இன் பேர் அசோக் குமார்.....ஒரு விதத்தில் இது கூட நன்மைக்கே.....மலையாளத்தில் மம்மூட்டி என்ற பேரை ஸ்ரீனிவாசன் பயன்படுத்தியிருந்தால் ரஜினிக்கும் மம்மூட்டி என்றே வாசு பேர் வைத்திருப்பார்.....அவ்வளவு தான் வாசுவுக்கு அறிவு.....
Verdict: பாலச்சந்தருக்கு லாபம்.....Distributor's க்கு நஷ்டம்.....ரஜினி ரசிகர்களுக்கு சிறிய சோகம்.....படம் flop....மன்னிக்கவும் உங்கள் பாஷையில் Average Grosser.....ஆனால் அவர்களுக்கு அதுவே பெரிய சந்தோசம்.....ரஜினி இனிமேல் வாசு படத்தில் நடிக்க மாட்டார்.....படம் நண்பர்கள்ளுகாக பார்க்கலாமா என்று எனக்கு தெரியாது....ஆனால் நண்பர்களுக்கு reccomend செய்யாதே என்று தான் தோனுகிறது....
Thanks for very long comment vignesh....
JS - U need to be a bit more honest about the movie ! You are too polite to be a good reviewer :)
@AMM na let me try out next time ;-)
JS,Its a Shocking Review from your end. I can very well understand that u r an Ardent fan of Rajini. Adhukunu ippadiyaa.. :(
Post a Comment