நான் கதை என்று உங்களை நோகடித்து சில நாட்கள் ஆகிவிட்டது. பின் வரும் வரிகள் எனது என்று சொந்தம் கொள்ள இயலாது... சிறு வயதினில் எனது செவிகளில் எனது பாட்டி சொல்லி சொல்லி எனது மூளையில் ஆழமாக பதிந்த வரிகளை உங்களுக்கு அளிக்கிறேன்...
இதோ ......
கதை கதையாம் காரணமாம் !
காரணத்தில் ஒரு தோரணமாம் !
தோரணத்தில் ஒரு வைக்கோலாம் !
வைக்கோல கொண்டு போய் மாட்டுக்கு போட ,
மாடு கொஞ்சம் பால் கொடுக்க ,
பால கொண்டு போய் சாமிக்கு ஊத்த ,
சாமி கொஞ்சம் காசு கொடுக்க ,
காச கொண்டு போய் கடைக்காரன் கிட்ட கொடுக்க ,
கடைக்காரன் ரெண்டு தேங்காய் கொடுக்க ,
தேங்காய் ஓடைக்க கல்லடிக்கு போக ,
கல்லுக்கு அடியில பாம்பு
பாம்பு அடிக்க தடிய தேட ,
தடி எல்லாம் அழுக்கு
அழுக்கு கழுவ ஆத்துக்கு போக ,
ஆறு எல்லாம் மீனு
மீன் பிடிக்க வலைய தேட ,
வலை எல்லாம் ஓட்ட
ஓட்ட தைக்க ஊசிக்கு போக ,
ஊசிகாரன் செத்து போய்ட்டான் !!!!!!!!
மேற்கூறிய வரிகள் மிகவும் சாதாரணமானவை .....
ஆனால் அதனை ஒரு பொழுதினை கழிக்க கேட்டிருந்தேன் .....
அதில் உள்ள ஆழமான கருத்தை அறிந்த பின் உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசை பட்டேன் . அதன் விளைவு இப்போ உங்களை வாசகன் ஆக்கி உள்ளேன் ....
ஆம் நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கிறது ..
இதோ ......
கதை கதையாம் காரணமாம் !
காரணத்தில் ஒரு தோரணமாம் !
தோரணத்தில் ஒரு வைக்கோலாம் !
வைக்கோல கொண்டு போய் மாட்டுக்கு போட ,
மாடு கொஞ்சம் பால் கொடுக்க ,
பால கொண்டு போய் சாமிக்கு ஊத்த ,
சாமி கொஞ்சம் காசு கொடுக்க ,
காச கொண்டு போய் கடைக்காரன் கிட்ட கொடுக்க ,
கடைக்காரன் ரெண்டு தேங்காய் கொடுக்க ,
தேங்காய் ஓடைக்க கல்லடிக்கு போக ,
கல்லுக்கு அடியில பாம்பு
பாம்பு அடிக்க தடிய தேட ,
தடி எல்லாம் அழுக்கு
அழுக்கு கழுவ ஆத்துக்கு போக ,
ஆறு எல்லாம் மீனு
மீன் பிடிக்க வலைய தேட ,
வலை எல்லாம் ஓட்ட
ஓட்ட தைக்க ஊசிக்கு போக ,
ஊசிகாரன் செத்து போய்ட்டான் !!!!!!!!
மேற்கூறிய வரிகள் மிகவும் சாதாரணமானவை .....
ஆனால் அதனை ஒரு பொழுதினை கழிக்க கேட்டிருந்தேன் .....
அதில் உள்ள ஆழமான கருத்தை அறிந்த பின் உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசை பட்டேன் . அதன் விளைவு இப்போ உங்களை வாசகன் ஆக்கி உள்ளேன் ....
ஆம் நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கிறது ..
இறுதில் அவனே முடிவும் எடுக்கிறான் .....
வாழ்க்கை கட்டுரையில் முன்னுரையுடன் அவனே துவக்கி வைக்கிறான் .. ஒரு பொருளை கொடுத்து நம்மை ஆண்டுவிட்டு ..
பின் முடிவுரையும் எழுதுகிறான் ...
எல்லாம் அவன் செயல் .... அவன் சொல்றான் நம்ம செய்யறோம் ....
கதம் கதம் ....
இதனை அக்காலத்தில் எவ்ளோ எளிதாக சொல்லி இருக்கிறார்கள் என்று எண்ணுகையில் வியக்கிறேன் .........
இதனை அக்காலத்தில் எவ்ளோ எளிதாக சொல்லி இருக்கிறார்கள் என்று எண்ணுகையில் வியக்கிறேன் .........
9 comments:
Cool machi...
Man Proposes God disposes-ங்கற கருத்தை நல்ல ஒரு அழகான குட்டி கதையாக உன் பாட்டி சொன்னதை நினைவு கூர்ந்து, எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு ஒரு Thanks...
நீ சொன்னதில் ஒரு பெரிய உண்மை உள்ளதை என்னால் ஏற்காமல் இருக்க முடியாது... அந்த காலத்தில் பெரியவர்கள் சொன்ன வார்த்தைகளிலும், செய்த செயல்களிலும் பெரிய பெரிய அர்த்தங்கள் ஒளிந்துள்ளன... உண்மையை சொல்லப்போனால், அதை புரிந்துகொள்ள நமக்குத்தான் அறிவு போதாது...
ஒன்றரை வரி கவிதைகளில் உலகை பூட்டிய தெய்வக்கவிஞர் வள்ளுவரில் துவங்கி, நம் முன்னோர்கள் நமக்காக பல பொக்கிஷங்களை விட்டுவைத்துள்ளர்கள், அதில் ஒன்று தான் நீ சொன்ன கதையும்...
மீண்டும் என் வாழ்த்துக்கள்...
J,
Made me to remember this wonderful childhood story. Cool stuff.
'கதை கதையாம் காரணமாம்!
காரணத்தில் ஒரு தோரணமாம்!'
My interpretation is, this is very similar to what comes in kungfu panda 'There are no accidents'.
Nothing happens just like that or nothing is decided by others (God too). Everything happens by our actions.
Sorry that i couldn't make this comment in tamil.
Nice compilation of kathai kathaiyam karanamam!!!
js nice one...
js nice one really...i dont know about tat god ting.. but wat ive got is lifes full of hurdles n solutions but goes on...
ரொம்ப நல்லா யோசிச்சு பதிவை போட்டிருக்கீங்க :)... அருமை
நான் கேட்டது இப்படி... சித்தியிடம்...
கதையாம் கதையாம் காரணமாம்,
காரணத்திலொரு தோரணமாம்,
தோரணத்திலொரு தொக்கடாவாம்,
தொக்கடாவிலொரு வைக்கப் புல்லாம்..
வைக்கப்புல்லெடுத்து மாட்டுக்குப் போட,
மாடொருபடி பாலக்கறக்க,
பாலக்கொண்டி பாப்பானுக்கூத்த,
பாப்பானொரு காசக்கொடுக்க,
காசக்கோண்டுக்கிட்டு கடைக்குப் போனா,
கடக்காரனொரு தேங்காயக்கொடுக்க,
தேங்காயொடைக்க பாறைக்குப் போனா,
பாற பூராம் பாம்பு..
பாம்படிக்க தடிக்கு போனா,
தடியெல்லாம் ஊத்த..
ஊத்த கழுவ ஆத்துக்கு போனா,
ஆறெல்லாம் மீனு..
மீன் பிடிக்க வலைக்கு போனா,
வலையெல்லா ஓட்ட..
ஒட்ட தெய்க்க ஊசிக்கு போனா,
ஊசிக்காரன் உருண்டு போனான்..
பாசிக்காரன் பறந்து போனான்...
தொக்கடா - ஒரு வகை கல் அமைப்பு(structure).
வைக்கப்புல் - வைக்கோல்
பாப்பானுக்கு - பார்ப்பனனுக்கு
ஊத்த - அழுக்கு
இதில் ஒரு சிதைந்த எதுகை மோனை அமைப்பையும், சீரான அசையையும் உணர முடியும். அந்த அசையே, இன்றளவும் இது வார்த்தை தவராமல் நினைவில் நிற்க காரணம்..
@Ponmaran... enga paatti ippadi machan sonnanga i accept ur point... edhuvaa irundhalum i remem those words..but only after many yrs i research on the words...
so nice i too remember this da anna
Post a Comment