Sunday, November 16, 2008

சோதனை , வேதனை , சாதனை !!!

சூர்யா!, சாகும் வரை அவன் சுவாசம், நேசம், அனைத்தும் சாதனாவுக்கே ! என்று வாழ்வை நேசித்து கொண்டிருந்தான் . ஆம்!, காதலிக்க நேரிட்ட பல பேர் சொல்லும் அந்த வரியை தான் இவனும் சொல்லிக் கொண்டு அலைகிறான் வேற என்ன "Love at first sight".


அவன் கல்லூரியில் சாதனாவை பார்த்த முதல் நாளே காதல் வயப்பட்டு அவளை நன்கு அறியாமல் அவளிடம் காதலை சொல்லி, அவளை வற்புறுத்தி ஒரு வழியாக சம்மதம் பெற்று விட்டான் . அவளும் சற்று தயக்கதுடனும் பழக ஆரம்பித்தாள் . ஆனால், சாதனா ஒரு "Practical Girl" எளிதில் யாரையும் நம்பும் பெண் அல்ல .


சாதனாவுக்கு தோழிகள் மிகவும் சிலரே இருந்தனர் . அவள் அனைத்தையும் பகிரும் நபர் என்றால் அது அவளது தங்கை ஆராதனா தான் சாதனாவை விட ஒரு வருடம் சிறியவள் . இருவருக்குள் ரகசியம் என்பதே இருக்க முடியாது . சூர்யாவின் பழக்கத்தை பற்றியும் சாதனாவின் எச்சரிக்கை நட்பும் ஆராதனாவுக்கு தெரியும் அவளும் சில சமயம் சாதனாவுக்கு ஆலோசனை வழங்குவாள் .


ஆராதனா, மிகவும் பொறுமைசாலி எதையும் ஆராய்ந்து செய்யும் பழக்கம் கொண்டவள். மற்றவர் மனதிற்கு மரியாதை தருபவள் இதற்கு நேர் எதிர் சாதனா .


சாதனா , ஆராதனாவை பற்றியே வார்த்தைகள் இருக்கே. நம்ம சூர்யா என்ன ஆனார் ? என்பதை பலரும் நினைக்கலாம் .

அவனோ காதல் என்ற நிழல் உலகில் இருப்பதால், அவனை பற்றி அவனுக்கே அக்கறை இல்லை பிறகு நமக்கு எதற்கு ? அப்படியும் விட முடியாது சாதனாவை கண்டது முதல் அவன் கனவுலகில், வாழ்க்கை வாழ்வதே அவளுக்கு என்று இருக்கிறான் . இவனுக்கு சாதனா உயிர் என்றால் ஆராதனா மூளை ஆம் நல்ல தோழி.

என்னடா ! சூர்யாவும் ஆராதனாவும் நண்பர்கள் என்று கூறுகிறேன் என்று குழம்ப வேண்டாம் . சாதனா அறிமுகமான அடுத்த நாளே ஆராதனா அறிமுகம் ஆனாள். அன்று முதல் சூர்யாவின் குணம் பிடித்து நெருங்கிய நண்பர்கள் ஆயினர் .

மிகவும் மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்தது. அப்போது சாதனாவின் தோழியின் காதல் கதையின் சோக முடிவு இவள் காதுக்கு எட்டியது ஆம் அவளது காதலன் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டான், சாதனாவுக்கு சந்தேக பேய் தொற்றிக் கொண்டது. சூர்யாவின் காதலை சந்தேகபட அவளுக்கு பல கோணங்கள் சிக்கியது.

காதலை சோதனை செய்ய முடிவு எடுத்தாள். வழக்கம் போல இதனை ஆராதனாவுடன் ஆலோசித்தாள் , இதில் இவளுக்கு உடன் பாடு இல்லை ஏனென்றால் சூர்யாவை நன்கு தெரிந்ததால் இதனை தடுத்தாள். சாதனாவோ " என் வாழ்க்கை அதனால் நான் சோதிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்" வற்புறுத்தாதே !, என்று சொல்லி விட்டாள். இறுதியில் இவளும் அதற்கு உடன் பட்டு சாதனாவின் திட்டத்தை கேட்டாள். அதிர்ந்தாள் ஆராதனா , இவள் சூர்யாவை காதலிப்பது போல் நடித்து சோதிக்க வேண்டுமாம் , இது தான் சாதனாவின் திட்டம் . அக்கா என்பதால் வேறு வழி இல்லாமல் தலை அசைத்தாள்.



மயக்கும் மாலை பொழுதில் கடற்கரை ஓரம் சாலையில் அவன் வண்டியில் பயணித்தாள், ஆராதனா .



" சூர்யா கொஞ்சம் Beach ல walk பண்ணலாமா ?" என்று தயக்கத்துடன் கேட்டாள். சற்றும் தயக்கம் இல்லாமல் சரி என்றான் சூர்யா . ஆராதனா சற்று மௌனமாக நேரம் கடத்தினாள்.



" என்ன ஆராதனா இப்படி அமைதியா இருந்தா என்ன அர்த்தம் என்ன ஆச்சு , any problem? " என்று மௌனம் கலைத்தான் .



" எப்படி சொல்றது என்று எனக்கு தெரியல " என்று இழுத்தாள்.



" நமக்குள் என்ன ரகசியம் தயங்காம சொல்லு " என்று தைரியம் ஊட்டினான்.



தயக்கத்துடன் ," நான் காதலிக்கிறேன் " என்றாள்.



"சபாஷ் ! யார் அந்த அதிர்ஷ்டசாலி சொல்லு சொல்லு ..அவன் ரொம்ப கொடுத்து வெச்சவன் சொல்லு யாரு அது ?" என்று பரபரப்பானான்.



"வேறு யாரும் இல்லை அது நீ தான் சூர்யா உன்னை தான் நான் காதலிக்கிறேன் " என்றாள் ஆராதனா . என்ன சொல்வது என்று புரியாமல் விழித்தான் சூர்யா.



"என்ன ஆச்சு ஆராதனா? நீ ! எப்படி என் மேல, நான் உன்னோட அக்காவை காதலிக்கிறேன், இதை தெரிஞ்சும் என்ன ஆச்சு டா உனக்கு ?" .



காதல் யாருக்கும் வரலாம் தவறு இல்லை , ஆனால் எப்போது யார் மீது வருது அது தான் முக்கியம். நீ என் தோழி, நீ தான் எனக்கு முக்கியம், ஆனால்! ஏற்கனவே காதலால் மிதந்து கொண்டிருக்கிறேன் . நான் எப்படி உன்னை , என்னையும் அறியாமல் உன் மனதில் இப்படி ஒரு எண்ணம் வர நான் காரணம் என்றால் மன்னித்து விடு என்று சொல்லி ஆராதனாவை வண்டியில் ஏற்றி வீட்டில் விட்டு விட்டான் .



மறுநாள் முதல் எப்பவும் போல பழகி வந்தான். ஆராதனா கிடைக்கும் சந்தர்ப்பத்தில் அவள் காதலை சொல்லி கொண்டிருந்தால். இவனும் நண்பனாக புரியவைத்தான் .



அவன் சாதனாவின் மேல் உள்ள காதலை ஆராதனாவிடம் புரியவைத்தான் . அவளை ஒரு மஹாராணியாக வைத்துள்ளான். அதுவரை நாடகமாக சூர்யாவின் மேல் இருந்த ஆராதனாவின் காதல் உண்மையாக மலர்ந்து விட்டது. காதலி மேல் இப்படியும் உயிராக இருக்க முடியுமா என்று வியந்து அந்த நொடி முதல் உண்மையாக காதலிக்க தொடங்கிவிட்டாள்.



அன்று சாதனாவின் பிறந்த நாள் சூர்யா மீது ஆராதனா கொடுத்த நல்ல சான்றிதழால் அவனை நம்பினாள். வாழ்த்து சொல்ல வந்து இருந்தான் சூர்யா. சாதனாவுக்கு அதிர்ச்சி தர மறைந்து இருந்தான் . அதனை அறியாத இருவரும் சில தினமாக நடந்ததை விவாதித்தனர் . அதனை முழுவதும் கேட்டு நொந்து விட்டான் சூர்யா .



ஆனால் இறுதியில் அவன் காதில் விழுந்த வார்த்தைகள் அவனை குழப்பியது. "அக்கா ! நான் சூர்யாவை காதலிப்பது போல் நடிக்கவில்லை, நானும் அவரை காதலிக்க தொடங்கிவிட்டேன் ". ஆம் அவரை போல் வேறொருவரை பார்த்தது இல்லை என்று உருகினாள், ஆராதனா . இதனை சற்றும் மதிக்காமல் சாதனா மகிழ்ச்சியுடன் தங்கைக்கு நன்றி தெரிவித்தாள் . ஆம் அவளுக்கு உண்மையானவன் கிடைத்ததை சோதிக்க உதவியதற்கு.



சற்றும் சிந்தனையுடனே வீட்டிற்கு வந்தான் சூர்யா. சாதனா அவன் காதல் சோதித்தது அவனுக்கு சற்றும் பிடிக்கவில்லை . மிகவும் நொந்து என்ன செய்வது என்று அறியாமல் குழம்பினான் . அப்பொழுது ஆராதனா அவன் வாழ்வில் இருந்த நிமிடங்கள் அவன் மனதில் ஓட துவங்கின.



பல நேர சிந்தனைக்கு பின் உணர்ந்தான் , ஆராதனாவின் மேல் அவனுக்கு இப்போ ஏற்பட்டு இருப்பது தான் காதல் , சாதனாவின் மேல் இருந்தது இயற்பு தான் என்பதை உணரத்தான் . அவன் தாய் , தந்தையிடம் காதலை சொல்லி பெண் பார்க்க வருவதாக சாதனாவின் வீட்டில் அறிவித்தான் .



சூர்யாவின் பெற்றோர்கள் ஆராதனாவை பெண் தருமாறு கேட்டவுடன் சாதனா அதிர்ந்தாள் . ஆராதனா செய்வது அறியாது திகைத்தாள். மௌனமே அவள் பதில் , தனது சோதனையே வேதனையை சேர்த்து விட்டதே என்று புலம்பி அவளது தவறை உணர்ந்து பிறரை மதிக்க கற்றுக்கொண்டாள்.



ஆராதனாவின் உண்மை காதலும் , அவள் மற்றவர் மேல் கொண்ட மதிப்பும் அவள் காதலை சாதிக்க செய்தது.



சூர்யாவும் , ஆராதனாவும் சுகமான இல்லறம் ஆரம்பித்தனர் .....



சுபம் .....

......



" நாம் மற்றவர்களை நம்புவது கடினம் ....

நாம் மற்றவர் நம்பும் படி நடப்பது மிகவும் கடினம் ........"





3 comments:

Prasanna said...

அவனோ காதல் என்ற நிழல் உலகில் இருப்பதால், அவனை பற்றி அவனுக்கே அக்கறை இல்லை பிறகு நமக்கு எதற்கு ?

Superb lines.....

Eaapdi ungallaala ippadi elam? really superb narration. keep going :-)

Ashok said...

boss kathai dialogues and sonna vithaam ellam super.. ana kathai karuu thaan konja idikuthu.. kathai la kaathaal miss aguthu boss.. also konjaa kathaiyum miss aguthu.. innu konjaa aalama kaathalai solli irukalaam.. kadasi varaikum unga kathaila iruntha sokathaium,kaathalaiyum,santhosathaium.. naan fulla feel pannanavae illa.. if u got an opportunity pls read sevvaalai siru kathai written by varatharajanar.. gud work keep trying..

JSTHEONE said...

@prasanna thanks for appreciation..

@ ashok.iaccpet tat i didnt get tis story in depth will try to improve in teh next one