வெற்றிவேல் , வாழ்க்கையில் தன்னம்பிக்கையே தோழன் என்று வாழ்கிறவன். ஆம், பள்ளிப் பருவத்தில் தனது தந்தையை இழந்து தனது விளையாட்டு திறமை (Sport Quota) மூலம் கலைக் கல்லூரியில் (Arts college) முதலாம் ஆண்டு சேர்ந்துள்ளான். அந்த கல்லூரியின் விளையாட்டு துறை ஆசிரியர் (PT Master) சின்னசாமி வேலுவின் திறமையை கண்டு அவனை விளையாட்டு துறையில் சிறந்த வீரனாக உருவாக்க ஆசை பட்டார். அதற்கு தினமும் 2 மணி நேரம் பயிற்சிக்கு (Practice) வர வேண்டும் என கூறி இருந்தார். விளையாட்டு வீரன் ஆக வேலுக்கு ஆசை தான் இருந்தாலும் தன் தந்தையை இழந்த குடும்பத்தில் அவன் தான் தினமும் கல்லூரி முடித்து விட்டு வேலைக்கு சென்று காப்பாற்றி வருகிறான். எனவே தினமும் பயிற்சி என்பது சாத்தியம் இல்லை என்று ஆசிரியர் சின்னசாமியிடன் சொல்லிவிட்டான். சின்னசாமி எவ்வளவு முயன்று பார்த்தார், வாதிட்டார் அரசாங்கம் ஊக்கக்தொகை தருகிறதே நீ, வந்தால் என்ன? என்றார். யானை பசிக்கு சோளப்பொறி ஆகாது!, நான் எனது தாயை பட்டினி போட்டு வீரனாக விருப்பம் இல்லை. நான் யுகபுதல்வன் இல்லை, சாதரண மாணவன் என்று அமைதியாக பதில் தந்தான். சின்னசாமி வேலுவை விடவில்லை இப்படி பார்த்து தான் 100 கோடி பேர் மேல் இருக்கும் நாட்டில் ஒரு பதக்கத்துக்கு ஏங்குகிறோம். உன்னை மாதிரி துடிப்பு மிக்க இளைஞர்கள் தேவை என்றார். வேலு தனது பதிலை மென்மையாக சொன்னான் தங்களுக்கு எனது நாடு என்று சுயநலம் எனக்கோ எனது வீடு என்ற சுயநலம். ஆம் நாட்டிற்கு அபினவ் பிந்த்ராவாக இருப்பதை விட என் வீட்டிற்கு வேலுவாக இருக்க ஆசை. இதில் நான் சுயநலமாக இருப்பதில் தவறு ஒன்றும் இல்லை. ஆம், திறமை அரசியலால் அடிபடும் நாட்டில் தனது வீட்டை முன்னேற்றி விட்டால் நாடு முன்னேறும். சின்னசாமி வாய் அடைத்து போனார் .
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
Thannambikkai Vs Suyanalam patti manram parthu irupom, mattrum nariyaa neja ethukaatu allathu neja nigazhuvagal kelvi pattu irupom... antha varisaiyil intha siru kathai thunukku amarnthullathu... - jagath( Sorry for my Tamil transalation if any)
dude are u writing in tamil cos u dont want me comment on it ? :p
@Jagath thansk for ur appreaciation thala...its a real encouragement....
@Reality..
Machan i love writing in tamil... also i tryuing to put some english blogs..i cant put freq da...
Good one J! Romba nalla short story with a beautiful msg...Keep writing...
Good one..
Veedu munnerinal naadum munnerum enbatharkku ithu miga sirantha utharanam..
Post a Comment