Friday, April 17, 2009

யாசகம் பலவிதம் - பகுதி 2


ரோஷினி சிவாவை சந்தித்ததை கேட்டு சற்று அதிர்ச்சியும் ஆர்வமும் கொண்டாள் ஷாலினி.

பின்ன இருக்காதா? இரண்டு வருட தூய நட்பு. சிவா தான் நடப்பை கொச்சை படுத்தி விட்டதாக உள்ள குற்ற உணர்வை போக்கவே பேச வேண்டாம் என்றாள். சிவா மீது எந்த ஒரு வருத்தமும் இல்லை.

அதன் பிறகு அவளுக்கு சிவாவை பற்றி எந்த ஒரு தகவலும் இல்லை.

ஆம், சந்தோஷத்துடன் திருமணம், பிறகு ஆக்சிடென்ட், சந்தோஷிற்கு கண் பார்வை போனது, இப்படி பல திருப்பங்களுடன் சற்றே சோகத்துடன் நகர்ந்தது.

"ரோஷி, சிவா எப்படி பா இருக்கான் எங்க பார்த்த அவனை ?", என்றாள் ஷாலினி ஆவலுடன்.

சற்றே மௌனம் காத்தாள் ரோஷினி.

"ஹே கேக்குறேன் ல சொல்லுபா ஏன் இப்படி சைலெண்டா இருக்க சொல்லுடி ?" என்று ஆர்வத்தை கூட்டினாள் ஷாலினி.

சிவாவை ஹாஸ்பிடலில் பார்த்ததையும் அதன் காரணத்தையும் ஷாலினி கிட்ட விளக்கி சொன்னாள் ரோஷினி.

"இப்படி நடக்கும்னு நெனச்சு கூட பாக்குலபா , அவன் வேற காலேஜ் போய் படிக்குறான் அப்படி தானே நெனச்சேன் ஆனா இப்படி போய்ட்டான் , கேட்கவே கஷ்டமா இருக்கு பா " என்று ஏங்கினாள் ஷாலினி.

"இதுக்கு தான்டி உன்கிட்ட சொல்ல வேண்டாம்னு நெனச்சேன் நான் ஒரு ஓட்ட வாய் சாரி டி " என்றால் ரோஷினி.

"ஹே ரோஷி நீ என்ன பண்ணின, இதுல என்ன இருக்கு அவன் என்ன சொன்னான் ? அவன் என்ன பத்தி கேட்டானா ?" என்றாள் ஷாலினி.

"ஒருத்தன் உங்கள பத்தி நெனச்சா பறக்க ஆரம்பிச்சுடுவீங்களே !" என்று சற்றே கிண்டல் அடித்தாள் ரோஷினி.

"ஹே அப்படி இல்லபா ஸ்டில் ஹி இஸ் மை ப்ரெண்ட் அதான் கேட்டேன்" என்றாள் ஷாலினி.

"ஹே கூல் டவுன் பேபி", "ஐ ம் கெளன்டிங் மை டேஸ்" என்றான் சிவா இத தான்டி அவன் என்கிட்டே சொன்னான் என்றாள் ரோஷினி.

இதை கேட்டதும் ஷாலினி சற்றே வாடினாள். "எவ்ளோ நாள் இருப்பான்?", என்றாள் ஷாலினி அக்கறையுடன்.

"இன்னும் ஒரு வாரம் இருந்தாலே பெருசு பா கொஞ்சம் நிலைமை மோசம் தான் ", என்றாள் ரோஷினி.

அவ‌ளால் கண்ணுல வர தண்ணி நிறுத்த முடியல ஏன்னா சிவா எல்லாரோடையும் அன்பா தான பழகினான். கொஞ்ச நாள் பழகினாலும் யார்கிட்டயும் கெட்ட பேர் இல்ல.

ஷாலினியும் அழ தொடங்கினாள்.

ரோஷினி பேச்சை தொட‌ர்ந்தாள்.

"நான் உன்கிட்ட சொன்னதுக்கு முக்கிய காரணம் நான் அவன பார்த்துட்டு வெளிய வரும் போது வார்ட் பாய் அவனோட கண் டொனேட் சர்டிபிகேட் கொடுத்தான் சோ ஹி இஸ் ரெடி டு டொனேட் ஹிஸ் ஐஸ் , நீ ஏன் அத சந்தோஷ்க்கு கேட்க கூடாது ?" என்று வினா வைத்தாள் ரோஷினி.

"நான் எப்படி டி இதன வருஷம் பாக்காம இப்ப மட்டும் எப்படி போய் கேக்குறது ? எனக்கு அந்த தைரியம் இல்ல அதுவும் சாகுறதுக்கு முன்னாடியே எப்படி என்னால முடியாதுபா ?" என்று தயங்கினாள் ஷாலினி.

"இங்க பாரு ஷாலு ஒருத்தன் செத்ததுக்கு அப்புறம் தன் கண் உயிரோட இருக்க போகுதுனா சந்தோச படுவாங்கடா நீ கேக்குறதுல தப்பு இல்ல " என்று தேற்றினாள் ரோஷினி.

சுமார் ஒரு முப்பது நிமிஷம் பேசி ஷாலினி சிவாவை பார்க்க சம்மதிக்க வைத்தாள் ரோஷினி.

சிவாவை பார்க்க ஹாஸ்பிடலுக்கு சென்றனர் ஷாலினியும் ரோஷினியும்.

ஷாலினி வந்ததும் சிவா சற்றே பரபரப்பானான். இன்னும் ஒரு வாரத்தில் உயிர் பிரிய போவதை மறந்தான். ஆம் அதை நினைத்து இந்த நிமிசத்தை அவன் வேஸ்ட் பண்ண விரும்புல.

ஷாலினியும் சிவாவும் மனம் விட்ட பேச கால் வராத அவளோட போன் எடுத்துட்டு வெளியே போய்ட்ட ரோஷினி. 15 நிமிஷம் கழிச்சு உள்ள வந்து, "என்ன சிவா என்ன முடிவு சொல்ல போற? டெசிஷன் உன்னோடது" என்றாள் ரோஷினி.

டென்ஷன் ஆ பார்த்தான் சிவா அவனுக்கு ஒன்னும் புரியல.

"நான் சிவா கிட்ட‌ அத பத்தி கேக்கவே இல்ல கேட்குற‌ தைரிய‌ம் இல்ல‌" என்று சொல்லி அழுது கொண்டே வெளியே சென்றாள்", ஷாலினி.

என்ன ஆச்சு ரோஷினி ?" என்று திகைப்புடன் கேட்டான் சிவா.

"சிவா என்னை தப்பா நினைக்காத ஷாலினி வேண்டாம்னு சொன்ன நான் தான் இத கேட்க சொன்னேன் ஆனா இப்போ அவளால முடியல", என்று இழுத்தாள் ரோஷினி .

"ரோஷினி என்னனு தெளிவா சொல்லு என்ன கொளப்பாத யோசிகுற நிலைமைல நான் இல்ல " என்றான் சிவா.

"உன்னோட டெத்க்கு அப்புறம் அப்புறம் "

"அப்புறம் என்ன ரோஷினி ?"

"உன்னோட கண்ண சந்தோஷுக்கு டொனேட் பண்ணனும் " என்று முடித்தாள் ரோஷினி.

சொல்லி முடித்ததும் சிவா மூஞ்சில அப்படி ஒரு சந்தோஷம், பேரானந்தம் , மகிழ்ச்சி . இத்தனை வார்த்தை சொல்லியும் அவனோட ஆனந்ததை வெளிப்படுத்த முடியல.

ஏதோ இத்தன நாள் வாழ்ந்து காணாத சுகம் அடைந்த மகிழ்ச்சி . ஆம் அவன் "இன்னும் முப்பது வருஷம் வாழ போற " இப்படி சொன்ன கூட அவனோட முகத்தில அவ்ளோ சந்தோஷம் பாக்க முடியாது.

சந்தோசத்தில் ரோஷினி கிட்ட ஷாலினிய பத்தி சொல்ல ஆரம்பித்தான்,

உன்னை ம‌ட்டுமே க‌ண்டிருந்தேன்;
க‌ண்டிருக்க‌ ஆசை கொண்டேன்;
முடிய‌வில்லை;

நான் பூமியில் வாழ
கொடுத்து வைக்க‌வில்லை;
நீ என்னுட‌ன் இல்லாத‌ போது
நான் வாழ்ந்து என்ன‌ ப‌ய‌ன்?

உன் க‌ண‌வ‌னுக்கு என் க‌ண்ணை
யாசிக்க‌ வ‌ந்தாய்
கேட்க‌ உன்னால் முடிய‌வில்லை;

யாச‌க‌ங்க‌ள் ப‌ல‌வித‌ம்
நீ கேட்ட‌து அதுவ‌ல்ல‌,
என் நெஞ்சில் நிறைந்த‌ நீ
என் க‌ண்ணில் நிறைய‌ போகிறாய்
உன் க‌ண‌வ‌ன் உன்னை காண்ப‌தால்;

யாச‌க‌ங்க‌ள் ப‌ல‌விதத்தில்
நானும் யாசிக்கிறேன் ஆண்ட‌வ‌னிட‌ம்
என் உயிரை சீக்கிர‌ம் ப‌றிக்குமாறு!
இனி ஒரு போதும் பொறுக்க‌ மாட்டேன்
உன்னை காணாம‌ல்;

சொல்லி முடித்ததும் அதிக சந்தோஷத்தை தாங்க முடியாத சிவாவின் இதயம் நின்றது.

சந்தோஷிற்கு கண்கள் பொருத்தப்பட்டது.

ஷாலினி சந்தோஷ் இல்லறம் நல்லறம் ஆனது.

ஷாலினியும் சந்தோஷும் சிவாவின் முதல் பிறந்த நாளை தடபுடலாய் கொண்டாடினர்.

இந்த சிவா வேற யாரும் இல்ல ஷாலினி சந்தோஷின் மகன்.

இனி இவனுக்கு தோல்வி இல்லை.

பலவித பலரது யாசகத்தில் வந்தவன்.

------------------- முற்றும் --------------------------------

கண் தானம் செய்வோம்; உலகின் அழகை என்றென்றும் ரசிப்போம்;
நன்றி :)

18 comments:

Fahad Y Mohammed said...

You have an extraordinary language machi.. and the story is amazing.. and as usual pasanga thaan bali aadu ingeyum.. he he.. a good initiative for eye donation da.. I have already registered for donating my eyes.. :)

Prasanna said...

யாச‌க‌ங்க‌ள் ப‌ல‌வித‌ம்
நீ கேட்ட‌து அதுவ‌ல்ல‌,
என் நெஞ்சில் நிறைந்த‌ நீ
என் க‌ண்ணில் நிறைய‌ போகிறாய்
உன் க‌ண‌வ‌ன் உன்னை காண்ப‌தால்;

wonderfull lines. Really excellent flow. very nice one.

JSTHEONE said...

@fahad,

Thanks da... hats off for donating the eyes...

thanks a lot for the comment :)

JSTHEONE said...

@Prasanna,

Thanks a lot for the comment :)

Ganesh K Kumar said...

expected climax but initiative for eye donation is a grt job..

ippadi pala matterukku story ezuthuina nalla irukkum..

JSTHEONE said...

@Ganesh,

Thanks a lot for the comment machi...

ya exactly lets try to portray the story in tat way

Glory said...

this nice nice yaar....

but real lifela konjam kastam...

but ok...

JSTHEONE said...

ya somethings shld be accpeted for story ...btw thanks for the comment

Raj said...

நானும் யாசிக்கிறேன் ஆண்ட‌வ‌னிட‌ம்
என் உயிரை சீக்கிர‌ம் ப‌றிக்குமாறு!
இனி ஒரு போதும் பொறுக்க‌ மாட்டேன்
உன்னை காணாம‌ல்;

Superb lines JS ..Keep it up..

JSTHEONE said...

@Raj,
Thanks a lot for ur comments...

Raj said...

First....

---Very good flow in the story....

---Written in the way we speak which is really good....

---A different thought to initiate eye donation....

---and lots of good things.. i think many have said...


Some things what i felt could be improved.....

*** "யாச‌க‌ங்க‌ள் ப‌ல‌வித‌ம்
நீ கேட்ட‌து அதுவ‌ல்ல‌,
என் நெஞ்சில் நிறைந்த‌ நீ
என் க‌ண்ணில் நிறைய‌ போகிறாய்"

really superb lines... wat i think is tat the nxt line

"உன் க‌ண‌வ‌ன் உன்னை காண்ப‌தால்;"

could be avoided or replaced with something else...

***I know tat u r not so much experienced in writing stories or books.... But u r doin it gud.. One more improvement tat u can do is try to build up some thrill or some "expect the unexpected" mathiri... :)

***U r writing lots of love stories... So i jus suggest u to xpress the feeling and the pain durin it (not in jus one or two lines).. i think it can itself be made a full story.. i'll try out somethin....

***One more suggestion frm my side... i think i have not read all ur stories... Let the nxt one be a love tat ended with a gud note lik marraige...

:) :)

JSTHEONE said...

@Rajesh,,

Thanks a lot for ur comments and the suggestions u hav given to me.. i will try to implement and i will give my best i hpe.... in the forthcoming stories....

Unknown said...

Really very very nice thinking. It is touching heart and good message for EYE Donation. In real life people are doing EYE and all organ Donation. Now a days these r possible. Good message.........

JSTHEONE said...

@ Satheesh,

Thanks a lot for the comment... :) exactly wat u said is correct

Divya said...

நல்ல கருத்துள்ள கதை,

கவிதை வரிகள் மிக அருமை,

வாழ்த்துக்கள்!

JSTHEONE said...

@Divya,

Thanks a lot for the comment and encouragement... mikka nanri... :)

sri said...

Very good message . Good writing style

JSTHEONE said...

@ Srivats,

Thanks for the comment and encouragement..

i thought of giving twist but i want ppl to njoy the screen play and dialogue rather than twist anyway i will try to give my best ..