Friday, March 13, 2009

பயணத்தின் பயன்

ஜெய், ரொம்ப ஜாலியான பையன். அவனுக்கு, எது சரின்னு படுதோ அத செய்ய ஆசைப்படுற டைப். அடிக்கடி ரயில்ல பயணம் பண்ணுவான். அந்த அசதி தெரியாம இருக்க சரக்கு அடிச்சுபான்.

அப்ப‌டி தான் ஒரு நாள் அவனோட ஊர்ல இருந்து அவன் வேலை பாக்குற ஊருக்கு புறப்பட்டான். காலைல டிராவல், அதுனால சரக்கு அடிகுல. ஆனா பெப்சி பாட்டில்ல மிக்ஸ் பண்ணி வெச்சுகிட்டான்.

ஸ்டேஷன் வந்தவுடனே ரிசர்வேஷன் சார்ட்ல எதாவுது தேறுமான்னு பார்த்துகிட்டு இருகாரு. அதாங்க F20 ல இருந்து F26 வரைக்கும், பயபுள்ள சைட் அடிக்க தான். அவனுக்கு ராசி சரி இல்லை சார், அப்படி ஒண்ணுமே இல்ல.

அவனோட ராசி அவனோட கம்பர்ட்மென்ட்ல ஒரு கை குழந்தையோட ஒரு தம்பதி இருந்தாங்க. ஆனா குழந்தையோட அழகு ஜெய் நல்ல கவர்ந்துடுச்சு.

அந்த குழந்தை பண்ற சேட்டையெல்லாம் பார்த்து ரசிச்சுகிட்டு இருந்தான். அப்போ கணவன் மனைவி ரெண்டு பேரும் ஜன்னல் ஓர சீட்ல இருந்தாங்க. ஜெய் வெளில உள்ள அழக ரசிக்க கொஞ்சம் நேரம் கதவு பக்கம் போயிட்டு அங்க நின்னு ஒரு பத்து நிமிஷம் ரசிச்சுகிட்டு இருந்தான்.

அவனோட சீட்டுக்கு போகும் போது அங்க பக்கத்துல ஒருத்தர் தம் அடிச்சுட்டு இருந்தாரு, "யாருங்க ரூல்ஸ் கேக்குறா". அந்த நாத்தம் அவன் மேலையும் இருந்துச்சு. அதுனால அந்த தம்பதி நம்ம ஜெய்ய‌ ரொம்ப கேவலமா பார்த்தாங்க. ஜெய் கொஞ்ச யோசிச்சான், அப்புறம் அத பெருசா எடுதுகுல. அவனுக்கு எதுவும் புரியல.


அப்போ அந்த கை குழந்தை அழுதது அந்த அம்மாவுக்கு வேற வழி இல்ல . ஆம் ஒரு குட்டி கவிதை நியாபகம் வந்தது. "அழும் குழந்தைக்கு தெரியாது தன் தாய் படு சங்கடம், தான் அழும் போது". ஆம் தன் குழந்தைக்கு தாய் பால் கொடுக்க சங்கடத்துடன் திரும்பினாள்.


அப்போது ஜெய் ஒன்னும் தெரியாதவன் போல் அவன் வைத்து இருந்த புக் எடுத்துக் கொண்டு கதவின் பக்கம் சென்றான். ஒரு 20 நிமிஷன் கழிச்சு அவன் இருக்கைக்கு வந்தான்.நல்ல வேலை இப்போ யாரும் தம் அடிகுல.


அந்த தம்பதி இவனை ஒரு நன்றியுடன் பார்த்தனர். ஆனால் அதை ஜெய் கண்டுகொள்ளவில்லை. அவனது புக்கை புரட்டி கொண்டிருந்தான். அவனது பயணம் சுமார் பத்து மணி நேரம் தொடர்ந்தது. குழந்தை சுமார் இரண்டு மூன்று முறை இடம் தெரியாது அழுதது. ஜெய் சிறிதும் சங்கடப்படாமல் குழந்தை அழுகும் போது கதவின் பக்கம் சென்று விட்டான்.


அந்த தம்பதி ஜெய் இறங்கும் ஸ்டேஷனுக்கு முந்தைய ஸ்டேஷன்ல இறங்கினர். வண்டி நின்றதும் அவர்கள் இறங்கும் முன் அக்குழந்தையின் தாயும் தந்தையும் ஜெய்யின் முகம் பார்த்து நன்றி சொன்னார்கள். அவனுக்கு என்ன சொல்றது தெரியாம கொஞ்சம் நேர யோசனைக்கு சென்றான். வண்டி புறப்பட்டது சன்னல் வழியாக அக்குழந்தைக்கு கை அசைத்தான்.

அவன் அடுத்த ஸ்டேஷன்ல இறங்கி வேறொரு வண்டி பிடிக்கணும் அதில் அடிப்பதற்கு பெப்சி பாட்டில்ல வைத்திருந்த சரக்கை சன்னல் வழியாக வீசி எறிந்தான் சற்று தெளிவு பெற்ற மனநிலையுடன் இறங்கி அடுத்த வண்டி ஏறினான்.


இவனை அறியாமலே இவன் அறிவு பெற்றான். ப‌ய‌ண‌த்தில் ப‌ய‌ன் அடைந்தான்.

4 comments:

Giri said...

whats the topic da.. it says use of travelling what is the use i dont get it.. story was coool was no fun this time... un jokes ethuvume illa. avanoda feelings illa... but philosphical da.. diff variety:D good

JSTHEONE said...

Thanks machi.... ya jus want to get into different way...adhaan ippadi try panninen..hope u liked it... :)

Divya said...

நல்ல கருத்துள்ள கதை, நல்லா எழுதியிருக்கிறீங்க:))

தொடர்ந்து இது மாதிரி எழுதுங்க, வாழ்த்துக்கள்!

JSTHEONE said...

@Divya,

Thanks alot for ur comment and the encouragement.. i will try my best..

mikka nanri :)