Wednesday, December 17, 2008

The Real Hero

Its the 15th of December, 2008 Monday, no way is this an important date. But the day eventually will become an important one for cricket worshippers. Final day of the 1st test of RBS Trophy test series between India and England at Chennai. After an unmerciful disaster by terrorists at Mumbai, the venue for test had been shifted to Chennai. At a very short notice, arrangements were made and a huge security had been put up at the ground, so that players and spectators feel they are pretty safe.

Indian fans and cricket lovers all over the world were very nervous and were keeping their fingers crossed, Will Indians chase 387 runs ? Sehwag gave an awesome start with a furious innings of 83(of 68 balls). This made the Indians chase 256 runs on the final day. Indian fans all over world prayed that India should get to the target and Tendulkar's fanatics prayed that their God of Cricket should make it happen.

Gambhir(on 41) and Dravid(on 2) started the final day. But Dravid's poor run continued and he went very soon. That brings in the Saviour, and Tendulkar is at the crease. Will he take India into Victory? Not only Tendulkar but all Cricket fans still remember the 1999 Chennai test against Pakistan. Tendulkar scored Century in spite of having a back injury. He returned to pavilion with India needing just 14 odd runs with 4 wickets in hand but still India lost. He looked sure that it should not be repeated this time. Same venue, but more enthusiasm because of the 20 years of experience at the international cricket. We can find that our saviour's (Sachin) enthusiasm has always been increasing. He is playing a steady innings to reach the target.

Gambhir and Laxman are also gone after some responsible innings. Now its the turn of Yuvraj at the crease. He was very confident against the English after some wonderful knocks in the One day series. But palying against spinners is still matter of concern for Yuvi. Sachin is boosting the confidence of Yuvi at the crease, so he is looking more comfortable in handling the English spinners. In spite of taking 40 tons in the test arena and 80 international tons Sachin is still hungry to get more. That's why, he is the Hero.

Sachin is playing a steady innings maintaining a strike rate around 50. By the time Sachin reaches 88, Yuvi got some quick runs and got to 81 with India needing just 19 runs with sufficient overs left out. Here comes 2 consecutive boundaries from Sachin and taking him into nineties. Now everyone started praying for India's victory and Sachin's Ton. Now Sachin is at 99 India still needing 4 runs to the victory. This time Sachin is sure that he wont reach the pavilion without achieving the target. Swann, the debutant bowling to the legend who is one run away from his 41st ton but the legend actually looking for 4 runs to make his country victorious. Sachin used to say in all his speeches, when his century makes India to victorious he would be more happy. So he want 4 runs more than taking the single.

Sachin just sweeps around the corner and what a wonderful shot it is. Even it reads the Sachin's mind it reaches the boundary, and here comes India's highest run chasing victory in India. Sachin gets his 41st test ton. Its the fourth highest run chase and the highest ever in sub continent. What a legendary match saving innings from Sachin Tendulkar. Chennai audience are very lucky to watch this superb innings. Everyone are enjoying, spectators in the ground are jumping over the sky. England players shaking hands with Yuvi and Sachin.

All over India people occupying in front of the TV show rooms, the people in front of their Television, professionals who halted their client work to see the little master's ton, students who bunked the classes to watch the match, all were cherishing on the victory. In the ground while Players exchanging hand shakes, even pitch workers came and gave a warm congrats to Sachin. On seeing this in his television, a boy from a place which you cant find even in a google map is flying towards the sky as he is seeing his real hero (his father) on the television. Ya, the guy who is wishing Sachin is his father who is working in the ground as a staff.

The guy who is cheering for his Hero's innings got more happy to see his real hero on the screen. That's it. For him his satisfaction is glowing like a flame after India's victory and Sachin's ton but his happiness is just like a spark, ya he was able to see this father for a second. But will never leave of from his heart. Because he can see Sachin scoring centuries in many future occasions but he may not see his father congratulating Sachin again. The boy himself says thousand thanks to Sachin not only for getting victory to India but also for accepting the wishes from his father. Else he wouldn't have been shown by the camera man. Now Sachin looks like a God to that boy for showing his real hero on TV. Because for everyone of us our Father is our first hero.

Hats off to Sachin and Men in blue for achieving a huge victory. You make us proud. Now winning became our habit. Let it continue. All the very best.

I just tried to present this blog in a different perspective.
Thanks for reading my blog.

Tuesday, December 9, 2008

சுயநலம்!!!

வெற்றிவேல் , வாழ்க்கையில் தன்னம்பிக்கையே தோழன் என்று வாழ்கிறவன். ஆம், பள்ளிப் பருவத்தில் தனது தந்தையை இழந்து தனது விளையாட்டு திறமை (Sport Quota) மூலம் கலைக் கல்லூரியில் (Arts college) முதலாம் ஆண்டு சேர்ந்துள்ளான். அந்த கல்லூரியின் விளையாட்டு துறை ஆசிரியர் (PT Master) சின்னசாமி வேலுவின் திறமையை கண்டு அவனை விளையாட்டு துறையில் சிறந்த வீரனாக உருவாக்க ஆசை பட்டார். அதற்கு தினமும் 2 மணி நேரம் பயிற்சிக்கு (Practice) வர வேண்டும் என கூறி இருந்தார். விளையாட்டு வீரன் ஆக வேலுக்கு ஆசை தான் இருந்தாலும் தன் தந்தையை இழந்த குடும்பத்தில் அவன் தான் தினமும் கல்லூரி முடித்து விட்டு வேலைக்கு சென்று காப்பாற்றி வருகிறான். எனவே தினமும் பயிற்சி என்பது சாத்தியம் இல்லை என்று ஆசிரியர் சின்னசாமியிடன் சொல்லிவிட்டான். சின்னசாமி எவ்வளவு முயன்று பார்த்தார், வாதிட்டார் அரசாங்கம் ஊக்கக்தொகை தருகிறதே நீ, வந்தால் என்ன? என்றார். யானை பசிக்கு சோளப்பொறி ஆகாது!, நான் எனது தாயை பட்டினி போட்டு வீரனாக விருப்பம் இல்லை. நான் யுகபுதல்வன் இல்லை, சாதரண மாணவன் என்று அமைதியாக பதில் தந்தான். சின்னசாமி வேலுவை விடவில்லை இப்படி பார்த்து தான் 100 கோடி பேர் மேல் இருக்கும் நாட்டில் ஒரு பதக்கத்துக்கு ஏங்குகிறோம். உன்னை மாதிரி துடிப்பு மிக்க இளைஞர்கள் தேவை என்றார். வேலு தனது பதிலை மென்மையாக சொன்னான் தங்களுக்கு எனது நாடு என்று சுயநலம் எனக்கோ எனது வீடு என்ற சுயநலம். ஆம் நாட்டிற்கு அபினவ் பிந்த்ராவாக இருப்பதை விட என் வீட்டிற்கு வேலுவாக இருக்க ஆசை. இதில் நான் சுயநலமாக இருப்பதில் தவறு ஒன்றும் இல்லை. ஆம், திறமை அரசியலால் அடிபடும் நாட்டில் தனது வீட்டை முன்னேற்றி விட்டால் நாடு முன்னேறும். சின்னசாமி வாய் அடைத்து போனார் .

Wednesday, December 3, 2008

Love: What is it? Where is it?

Friends, dont think that i have chosen this topic to make people look at my blog. For quite some time this topic was in my mind but I did'nt find time to put up all my thoughts as words. Finally I found some time to do so. Points put up in this post are about certain people and not about everyone.

Through this post i am trying to nourish some thoughts about love in your mind. Some of our folks have some confusion about love and infatuation. If a guy saw a pretty girl and if he liked her. Suddenly he calls that as 'love' and start saying that he fell in love with her and vice versa. I dont understand the concept of love here. This attraction is purely due to the infatuation.

Love, its for the life time, not for time pass. Because 'Love is Divine'. People who are in love used to confess that, through love they got the best person in the earth to whom they can share their life. I think they didnt get the best, they just get the better person in the lot available for them. Love is certainly meant to understand the person whom we really think he/she is perfect match and also to get the perfect match.

According to me, love is a kind of sharing or the adjustment, also the feel in life experienced by the lovers. If a girl comes late by an hour to the meeting point for unwanted reason to meet her lover, then he will warn her not to repeat then she will adjust herself to maintain punctuality. If a guy used to booze when ever he is partying with friends, but if his lover doesnt like that. If he is a true lover he will quit drinking, this is also a kind of adjustment. If he cant quit because of the society that girl can accept him as a social drinker. Its a other kind of adjustment. Either of them should adjust because "Nobody is Perfect".

Its 100% true that love helps to eliminate castes and religions from the society. But "Every coin has two sides", so when we put up the points about love certainly we should discuss about arranged marriages also. Some people may even say that arranged marriages are crap and also they cant get the right life partner. They cant understand the person completely blah blah blah. I dont accept this point.

Right from our childhood our parents knew what is best for us. How will they do a mistake in choosing our life partner. I accept in some cases arranged marriage also fail. Also not all the love marriages are successful. You may think that searching a life partner for us may increase the burden on them but its a pleasure for them. If u choose a life partner you will look only one factor whether he/she suits you. But if your parents find for you they will look whether he/she suits your family and your life. Here comes the difference.

People who are in love can claim that, in arranged marriage we cant get to know the person very well. Who says so. Plan your marriage 5 - 6 months after the engagement and start to know the person. Love is not simply roaming and dating with the person whom we like. Its art of sharing and adjusting for them in our life. Even moulding according to them is also a part and parcel of love. Moreover its a feel on the person whome we love. Certainly its there in arranged marriage.
We came to know about the person for the first time. Obviously we liked that person thats why engagement happens also we are not forced to accept. Once we start our interaction we will come to know about the character, likes and dislikes of the particular person. If u start loving the person, sure you will start moulding ourself to suit their character and imaginations he/she have about the life partner.

I am not claiming that love is a not real. Really those who got to know their life partners and who are in love are lucky also those who didnt get anyone yet are very lucky. They are still a free bird. They can live their life in their own way and for their family. So if you didnt get any such person yet dont feel or dont waste your time in searching. Just wait, a wonderful arranged marriage is awaiting for you.

Those who are in love please proceed your marriage with your parents' permission. If they dont agree please convince them that you have found the right person.

Live and let live. Thanks for your patience in reading my blog. Your comments about the post are most welcome.

Tuesday, November 25, 2008

Why not Gautham?

Gautam Menon, one of the rising star - directors in the tamil film industry according to journalist's rating. For me, he is one of the most stylish film makers.I have a small doubt if Gautham is really giving his best, he can actually but he is just trying to make a mark in the Kollywood.

When I was a school student, I watched the movie 'Minnale', awesome love story explained with the college masala. The way he portrayed love was awesome. During the time of Minnale i was a sincere school student but I knew something about love thats it. I think I was in higher secondary grade and dreaming about my future college days after watching Minnale. I dreamt in my own way about my college life.

My expectations for Gautham's next venture rised to its peak. His next venture was Kaakha Kaakha, Surya and Jyothika combination's best ever hit. " An episode in policeman life" was the tagline of the movie, a racy action movie Surya playing the cop role. But even in that action movie gautham portrayed the love between Maya(Jyothika), a school teacher and Anbuselvam (Surya) ,policeman in a superb manner. It had really powerful dialogues for love, Believe me!.

Vettaiyaadu Vilaiyaadu, his 3rd venture with the tagline " An another episode in policeman's life" , its again a racy action thriller with Kamal playing the cop, Jyothika and Kamalini Mukherjee playing the female leads. Even in that thriller movie he showcased the love between Kamal and Kamalini, Kamal and Jyothikha as a poem. The dialogue when Kamal expresses his love to Kamilini and to Jyothika after Kamilini's death were splendid and wonderfully delivered.

His next venture Pachaikili Muthu Charam had Sarath kumar playing protagonist. Its a different kind of thriller movie. In this movie he tells about the love and affection showed by a wife even after her husband betrayed.

In all his 4 ventures he explained the love between protagonist and his female lead as a wonderful poem. He never failed in expressing love on the screen. But in all in his ventures expect Minnale, love was overshadowed by action.

In his latest venture Vaaranam Aayeram, he was saying that he expressed the father-son relationship in great manner. Its a splendid performance from Surya, no one will have second thought on it. I watched the movie twice in a span of one week in theatre. Rather than expressing the Dad- Son relationship, once again he gave his mark in expressing love between Surya and other female leads ( Simran. Sameera and Divya). Simran is female lead to father Surya and other 2 were love girls to son Surya. The story revolves around the son. But the way Gautham handled love in that movie was splendid.

When Surya expresses his love to Simran in auditorium , expressing his love to sameera in train, and to divya in military academy.... We have no words to explain. Its all the performance from surya but its Gautham who brought it from him. Actually the movie have mixed reviews from all section of people but everyone is praising the movie for those romantic scenes.

All my readers may be wondering why i explained the gautham's filmography simply. Ya you are right, nothing big, I just discussed about his filmography to one of my friend sometimes back. At that time, I thought of posting a blog, why not Gautham Menon go for directing few romantic movies since he portrays love in excellent manner. Why he is not giving his best which comes naturally from him? this kind of question arised in my mind. Just thought of sharing with you. Please give your comments on this. Why not gautham go for romantic movies?

Because recently gautham commented few Stars' movies and Star directors' products. Before commenting others and thier products he should be clear in his point. Its jus my opinion. No offense post you review on the theme.

Thanks for your patience in reading my blog...............

Friday, November 21, 2008

10.30 AM



Hi friends, After reading out the title you might expect some thriller or comedy story from my end. So far i was posting my stories in this blog, but this time i'm not gonna tell any stories. I jus want to share my experience which we njoyed at 10.30 am in our final semester of the college. This time i would like to share it through english, as many of my friends complaint that they cant understand tamil.


So i m gonna share my memories which never go from my mind. This is about one part of my friends gang, others- dont mind- will get u into the blog very soon... Its jus a starting... Idhu chumma trailer thaan....



Our dept (EEE) is kind of the foundation jus a min i'm not getting into technical side. Its located at ground floor of the wonderful EB block in our college. U can refer to the attached pic @ top right. More over i can call that place as "Vedanthaangal". Becoz friends from various dept. and various years will gather there and hav a short chat and long pulling session about each other.



Our final sem is actually meant for doing project. Thats why they didnt put up any subject in the curriculum. Luckily, in my final sem, i got a wonderful gang like my all other gangs. Gang comprises of Sambath, Vijay, Ganesh, Bharath, Ashok, Robo, Matter, Kalai, Sathish, Johnson, Ravi, Nachi, Karthi, Somu, Manesh, Sathyan, Gokul, Sami etc (sorry i miss out some names) and ofcourse me. As per a wonderful saying "Friendship should jus happen" even our friendship happened naturally.


I can even mention our dept entrance as "Heaven". Yup since its a wonderful place. Ya, if you stand at the entrance you can look at al the people roaming in the college. By now you should understand, its such a good place buddies (nalla sight adikalaam). In our final sem we should put our attendance before 9.30 am. obviously we all will rush at 9.30.


As a hostel culture we wont hav anything for breakfast :-). After registering our attendance. Myself and Sambath will check our mails in the dept lab. Then around 10 am, we used to stand at the entrance and will wait for our gang members. Actually we wont wait for our gang. We jus watch out the people by standing there (sight adippom :-)). Myself and sambath had great pulling session while standing out there. Will tell you the experience at the entrance in other post.


We used to njoy the scenenary of the college at that time. Around 10.15 am, other members join our gang's spot (dept entrance). Before narrating the 10.30 am moments its my time to inform you. Out of 10 semesters in my college life, till end of my 9th sem i can count the no. of time i visited our college canteen. I hate canteen for no reason. Rarely i used to visit to have snacks that to after some official meetings.


Now back to the flow, by 10.20 am all our team members will gather at the entrance. Usually bharath, nachi and robo will be the late comer. Bharath and nachi (sincere guys) will be busy in the project work we cant scold them. Around 10.30 am siren for the first break for the people in the college will be heard. Breaks are to cherish i don't know abt the others, for us its true cherishing moment. A larger number of person will gather at the canteen for their snacks.


Some how we used to spent our time and if our clock ticked 10.30 AM we all reached out to the canteen. Our college days are not like corporate days we used to struggle for the money flow. Some how daily we will have money for our snacks. Most of the time, we used to hav TEA and some bhajji. We will get a big table and will get ready for our conference. We start our long never ending pulling session.



Till 10.45am we used to be in canteen. Those 15 minutes we wont think abt anything ( project, classes, seminaar, coding, submission etc etc) Anyways, we never thought about it other times too. Those are minutes of njoyment. We watch out the persons whom we like. I m sure they wont hav any clue abt us. Few might know but its jus a part of njoyment.




Sometimes the ppl whom we are looking for will sit table next to ours. Here comes the beauty. They may be a fav person for a member in our gang. That particular time, he will try to look very different to try impress her, but, what are friends for????! we wont allow him to . By that time, we will start our chatting a bit louder. Those moments are unforgettable throughout the life time.



At that time , only very few member in our gang have gals as their friends and none of us hav any gfs. Our pulling session will be around this. In the canteen, few gals will see their friend(member of our gang) sitting near us will try to speak to him. Till she speaks we will be like dont care. Once she leaves the place, the guy who spoke with the gal will be target. He cant do anything else. I really pity him. But, few of our friends will avoid talking to the gal, who are supposed to be their friends truly, becoz of the pulling session after that chat. Truly speaking we never crossed our limit. Becoz of those sessions neither our friendship got spoiled nor we got hurt. Truly rememberable and funny incidents.



Even in our slam books that we wrote in our final days we never forgot to mention those 10.30 AM moments. Actually this 10.30 am didnt had g8 impact in any our life but its was g8 moments.



10.30 Am ends here and still memory continuesssssssssssssssssssssss..................

Sunday, November 16, 2008

சோதனை , வேதனை , சாதனை !!!

சூர்யா!, சாகும் வரை அவன் சுவாசம், நேசம், அனைத்தும் சாதனாவுக்கே ! என்று வாழ்வை நேசித்து கொண்டிருந்தான் . ஆம்!, காதலிக்க நேரிட்ட பல பேர் சொல்லும் அந்த வரியை தான் இவனும் சொல்லிக் கொண்டு அலைகிறான் வேற என்ன "Love at first sight".


அவன் கல்லூரியில் சாதனாவை பார்த்த முதல் நாளே காதல் வயப்பட்டு அவளை நன்கு அறியாமல் அவளிடம் காதலை சொல்லி, அவளை வற்புறுத்தி ஒரு வழியாக சம்மதம் பெற்று விட்டான் . அவளும் சற்று தயக்கதுடனும் பழக ஆரம்பித்தாள் . ஆனால், சாதனா ஒரு "Practical Girl" எளிதில் யாரையும் நம்பும் பெண் அல்ல .


சாதனாவுக்கு தோழிகள் மிகவும் சிலரே இருந்தனர் . அவள் அனைத்தையும் பகிரும் நபர் என்றால் அது அவளது தங்கை ஆராதனா தான் சாதனாவை விட ஒரு வருடம் சிறியவள் . இருவருக்குள் ரகசியம் என்பதே இருக்க முடியாது . சூர்யாவின் பழக்கத்தை பற்றியும் சாதனாவின் எச்சரிக்கை நட்பும் ஆராதனாவுக்கு தெரியும் அவளும் சில சமயம் சாதனாவுக்கு ஆலோசனை வழங்குவாள் .


ஆராதனா, மிகவும் பொறுமைசாலி எதையும் ஆராய்ந்து செய்யும் பழக்கம் கொண்டவள். மற்றவர் மனதிற்கு மரியாதை தருபவள் இதற்கு நேர் எதிர் சாதனா .


சாதனா , ஆராதனாவை பற்றியே வார்த்தைகள் இருக்கே. நம்ம சூர்யா என்ன ஆனார் ? என்பதை பலரும் நினைக்கலாம் .

அவனோ காதல் என்ற நிழல் உலகில் இருப்பதால், அவனை பற்றி அவனுக்கே அக்கறை இல்லை பிறகு நமக்கு எதற்கு ? அப்படியும் விட முடியாது சாதனாவை கண்டது முதல் அவன் கனவுலகில், வாழ்க்கை வாழ்வதே அவளுக்கு என்று இருக்கிறான் . இவனுக்கு சாதனா உயிர் என்றால் ஆராதனா மூளை ஆம் நல்ல தோழி.

என்னடா ! சூர்யாவும் ஆராதனாவும் நண்பர்கள் என்று கூறுகிறேன் என்று குழம்ப வேண்டாம் . சாதனா அறிமுகமான அடுத்த நாளே ஆராதனா அறிமுகம் ஆனாள். அன்று முதல் சூர்யாவின் குணம் பிடித்து நெருங்கிய நண்பர்கள் ஆயினர் .

மிகவும் மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்தது. அப்போது சாதனாவின் தோழியின் காதல் கதையின் சோக முடிவு இவள் காதுக்கு எட்டியது ஆம் அவளது காதலன் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டான், சாதனாவுக்கு சந்தேக பேய் தொற்றிக் கொண்டது. சூர்யாவின் காதலை சந்தேகபட அவளுக்கு பல கோணங்கள் சிக்கியது.

காதலை சோதனை செய்ய முடிவு எடுத்தாள். வழக்கம் போல இதனை ஆராதனாவுடன் ஆலோசித்தாள் , இதில் இவளுக்கு உடன் பாடு இல்லை ஏனென்றால் சூர்யாவை நன்கு தெரிந்ததால் இதனை தடுத்தாள். சாதனாவோ " என் வாழ்க்கை அதனால் நான் சோதிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்" வற்புறுத்தாதே !, என்று சொல்லி விட்டாள். இறுதியில் இவளும் அதற்கு உடன் பட்டு சாதனாவின் திட்டத்தை கேட்டாள். அதிர்ந்தாள் ஆராதனா , இவள் சூர்யாவை காதலிப்பது போல் நடித்து சோதிக்க வேண்டுமாம் , இது தான் சாதனாவின் திட்டம் . அக்கா என்பதால் வேறு வழி இல்லாமல் தலை அசைத்தாள்.



மயக்கும் மாலை பொழுதில் கடற்கரை ஓரம் சாலையில் அவன் வண்டியில் பயணித்தாள், ஆராதனா .



" சூர்யா கொஞ்சம் Beach ல walk பண்ணலாமா ?" என்று தயக்கத்துடன் கேட்டாள். சற்றும் தயக்கம் இல்லாமல் சரி என்றான் சூர்யா . ஆராதனா சற்று மௌனமாக நேரம் கடத்தினாள்.



" என்ன ஆராதனா இப்படி அமைதியா இருந்தா என்ன அர்த்தம் என்ன ஆச்சு , any problem? " என்று மௌனம் கலைத்தான் .



" எப்படி சொல்றது என்று எனக்கு தெரியல " என்று இழுத்தாள்.



" நமக்குள் என்ன ரகசியம் தயங்காம சொல்லு " என்று தைரியம் ஊட்டினான்.



தயக்கத்துடன் ," நான் காதலிக்கிறேன் " என்றாள்.



"சபாஷ் ! யார் அந்த அதிர்ஷ்டசாலி சொல்லு சொல்லு ..அவன் ரொம்ப கொடுத்து வெச்சவன் சொல்லு யாரு அது ?" என்று பரபரப்பானான்.



"வேறு யாரும் இல்லை அது நீ தான் சூர்யா உன்னை தான் நான் காதலிக்கிறேன் " என்றாள் ஆராதனா . என்ன சொல்வது என்று புரியாமல் விழித்தான் சூர்யா.



"என்ன ஆச்சு ஆராதனா? நீ ! எப்படி என் மேல, நான் உன்னோட அக்காவை காதலிக்கிறேன், இதை தெரிஞ்சும் என்ன ஆச்சு டா உனக்கு ?" .



காதல் யாருக்கும் வரலாம் தவறு இல்லை , ஆனால் எப்போது யார் மீது வருது அது தான் முக்கியம். நீ என் தோழி, நீ தான் எனக்கு முக்கியம், ஆனால்! ஏற்கனவே காதலால் மிதந்து கொண்டிருக்கிறேன் . நான் எப்படி உன்னை , என்னையும் அறியாமல் உன் மனதில் இப்படி ஒரு எண்ணம் வர நான் காரணம் என்றால் மன்னித்து விடு என்று சொல்லி ஆராதனாவை வண்டியில் ஏற்றி வீட்டில் விட்டு விட்டான் .



மறுநாள் முதல் எப்பவும் போல பழகி வந்தான். ஆராதனா கிடைக்கும் சந்தர்ப்பத்தில் அவள் காதலை சொல்லி கொண்டிருந்தால். இவனும் நண்பனாக புரியவைத்தான் .



அவன் சாதனாவின் மேல் உள்ள காதலை ஆராதனாவிடம் புரியவைத்தான் . அவளை ஒரு மஹாராணியாக வைத்துள்ளான். அதுவரை நாடகமாக சூர்யாவின் மேல் இருந்த ஆராதனாவின் காதல் உண்மையாக மலர்ந்து விட்டது. காதலி மேல் இப்படியும் உயிராக இருக்க முடியுமா என்று வியந்து அந்த நொடி முதல் உண்மையாக காதலிக்க தொடங்கிவிட்டாள்.



அன்று சாதனாவின் பிறந்த நாள் சூர்யா மீது ஆராதனா கொடுத்த நல்ல சான்றிதழால் அவனை நம்பினாள். வாழ்த்து சொல்ல வந்து இருந்தான் சூர்யா. சாதனாவுக்கு அதிர்ச்சி தர மறைந்து இருந்தான் . அதனை அறியாத இருவரும் சில தினமாக நடந்ததை விவாதித்தனர் . அதனை முழுவதும் கேட்டு நொந்து விட்டான் சூர்யா .



ஆனால் இறுதியில் அவன் காதில் விழுந்த வார்த்தைகள் அவனை குழப்பியது. "அக்கா ! நான் சூர்யாவை காதலிப்பது போல் நடிக்கவில்லை, நானும் அவரை காதலிக்க தொடங்கிவிட்டேன் ". ஆம் அவரை போல் வேறொருவரை பார்த்தது இல்லை என்று உருகினாள், ஆராதனா . இதனை சற்றும் மதிக்காமல் சாதனா மகிழ்ச்சியுடன் தங்கைக்கு நன்றி தெரிவித்தாள் . ஆம் அவளுக்கு உண்மையானவன் கிடைத்ததை சோதிக்க உதவியதற்கு.



சற்றும் சிந்தனையுடனே வீட்டிற்கு வந்தான் சூர்யா. சாதனா அவன் காதல் சோதித்தது அவனுக்கு சற்றும் பிடிக்கவில்லை . மிகவும் நொந்து என்ன செய்வது என்று அறியாமல் குழம்பினான் . அப்பொழுது ஆராதனா அவன் வாழ்வில் இருந்த நிமிடங்கள் அவன் மனதில் ஓட துவங்கின.



பல நேர சிந்தனைக்கு பின் உணர்ந்தான் , ஆராதனாவின் மேல் அவனுக்கு இப்போ ஏற்பட்டு இருப்பது தான் காதல் , சாதனாவின் மேல் இருந்தது இயற்பு தான் என்பதை உணரத்தான் . அவன் தாய் , தந்தையிடம் காதலை சொல்லி பெண் பார்க்க வருவதாக சாதனாவின் வீட்டில் அறிவித்தான் .



சூர்யாவின் பெற்றோர்கள் ஆராதனாவை பெண் தருமாறு கேட்டவுடன் சாதனா அதிர்ந்தாள் . ஆராதனா செய்வது அறியாது திகைத்தாள். மௌனமே அவள் பதில் , தனது சோதனையே வேதனையை சேர்த்து விட்டதே என்று புலம்பி அவளது தவறை உணர்ந்து பிறரை மதிக்க கற்றுக்கொண்டாள்.



ஆராதனாவின் உண்மை காதலும் , அவள் மற்றவர் மேல் கொண்ட மதிப்பும் அவள் காதலை சாதிக்க செய்தது.



சூர்யாவும் , ஆராதனாவும் சுகமான இல்லறம் ஆரம்பித்தனர் .....



சுபம் .....

......



" நாம் மற்றவர்களை நம்புவது கடினம் ....

நாம் மற்றவர் நம்பும் படி நடப்பது மிகவும் கடினம் ........"





Monday, October 20, 2008

கதை கதையாம் காரணமாம் !!!

நான் கதை என்று உங்களை நோகடித்து சில நாட்கள் ஆகிவிட்டது. பின் வரும் வரிகள் எனது என்று சொந்தம் கொள்ள இயலாது... சிறு வயதினில் எனது செவிகளில் எனது பாட்டி சொல்லி சொல்லி எனது மூளையில் ஆழமாக பதிந்த வரிகளை உங்களுக்கு அளிக்கிறேன்...
இதோ ......

கதை கதையாம் காரணமாம் !
காரணத்தில் ஒரு தோரணமாம் !
தோரணத்தில் ஒரு வைக்கோலாம் !
வைக்கோல கொண்டு போய் மாட்டுக்கு போட ,
மாடு கொஞ்சம் பால் கொடுக்க ,
பால கொண்டு போய் சாமிக்கு ஊத்த ,
சாமி கொஞ்சம் காசு கொடுக்க ,
காச கொண்டு போய் கடைக்காரன் கிட்ட கொடுக்க ,
கடைக்காரன் ரெண்டு தேங்காய் கொடுக்க ,
தேங்காய் ஓடைக்க கல்லடிக்கு போக ,
கல்லுக்கு அடியில பாம்பு
பாம்பு அடிக்க தடிய தேட ,
தடி எல்லாம் அழுக்கு
அழுக்கு கழுவ ஆத்துக்கு போக ,
ஆறு எல்லாம் மீனு
மீன் பிடிக்க வலைய தேட ,
வலை எல்லாம் ஓட்ட
ஓட்ட தைக்க ஊசிக்கு போக ,
ஊசிகாரன் செத்து போய்ட்டான் !!!!!!!!

மேற்கூறிய வரிகள் மிகவும் சாதாரணமானவை .....
ஆனால் அதனை ஒரு பொழுதினை கழிக்க கேட்டிருந்தேன் .....
அதில் உள்ள ஆழமான கருத்தை அறிந்த பின் உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசை பட்டேன் . அதன் விளைவு இப்போ உங்களை வாசகன் ஆக்கி உள்ளேன் ....

ஆம் நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கிறது ..
இறுதில் அவனே முடிவும் எடுக்கிறான் .....
வாழ்க்கை கட்டுரையில் முன்னுரையுடன் அவனே துவக்கி வைக்கிறான் .. ஒரு பொருளை கொடுத்து நம்மை ஆண்டுவிட்டு ..
பின் முடிவுரையும் எழுதுகிறான் ...
எல்லாம் அவன் செயல் .... அவன் சொல்றான் நம்ம செய்யறோம் ....
கதம் கதம் ....
இதனை அக்காலத்தில் எவ்ளோ எளிதாக சொல்லி இருக்கிறார்கள் என்று எண்ணுகையில் வியக்கிறேன் .........

Wednesday, September 24, 2008

லாபம் !!!

As usual இந்த Post சும்மா வெட்டியா time pass கு தான் எழுதுறேன் . இந்த time சும்மா college வெச்சு deal பண்ண போறேன் . சத்தியமா இது எனக்கோ இல்ல என் friends கு நடந்ததோ இல்ல . சரி நம்ம கதை போலாமா ....... நம்ம கதையின் நாயகன் பேரு ? ஆமா இது என்ன காவியமா "But Heroism இருந்தா நல்லா இருக்கும்" அப்படி தான் நான் feel பண்றேன் சரி அப்போ Hero னு சொல்லிகுறேன் ok. நம்ம Hero தான் அர்ஜுன்.

இங்க பாருங்க Action King அர்ஜுனுக்கும் இதுக்கும் எந்த தொடர்பும் இல்ல புரிஞ்சுகோங்க .

Hero பேரு சொல்லிட்டேன் அப்போ ஒரு Heroine வேணுமே அவுங்க பேரு ஷாலினி . பாருங்க introduction part சொல்ற ஆர்வத்துல கதை சொல்ல மறந்துட்டேன் என்ன பண்றது என்ன தான் படதுல கதை இருந்தாலும் நமக்கு introduction scene இல்லன Something Missing தான் .

அது தான் இப்படி ஒரு introduction சரி இதுக்கு மேல கதை சொல்லாட்டி நீங்க இதை இவ்ளோ படிச்சது waste ஆயிடும். Start Camera Action... Story Start ஆகுது.............

நம்ம Hero அர்ஜுன் இப்போ தாங்க +2 முடிச்சிட்டு, நம்ம நாட்டுல 80% மக்கள் பண்ற மாதிரி Engineering காலேஜ்ல படிக்க போறான் . அட! பாருங்க, First Day Induction Program எல்லா First year students function ல இருக்காங்க. நம்ம Hero friend ஆகுறதுல கெட்டிகாரர், Induction program ல friends கூட தான் உட்கார்ந்து இருக்கார். அவ்வளவு தான் அவரு கவனம் எல்லாம் வேற ஒருத்தர் மேல நீங்க Judge பண்ணினது Correct, நம்ம Heroine ஷாலினி அவுங்க Parents கூட Function பார்த்துகிட்டு இருந்தாங்க. நம்ம Hero கொஞ்சம் dream அடிச்சுட்டு இருந்தார்.

சரி Induction Program எல்லாம் over first day class.

நம்ம அர்ஜுன் தான் ஹீரோவே Last bench புடிச்சு கிட்டார் இனிமேல் ஒரு வருஷம் bench மாற கூடாது என்று கூட்டமா சத்திய பிரமாணம் வேற . ஷாலினி Herione ல late entry கொடுத்தாங்க, அர்ஜுன் "நேத்து அவன் பார்த்த அதே Figure !". Listen பண்றாங்களோ இல்லையோ as usual first bench தான் ஷாலினி. நம்ம ஹீரோ last bench ல இருந்து அவரு கவனிக்குறது ஷாலினியை மட்டும் தான்.

அப்படியே June, July என்று 2 months over. இனிமேல் என்ன உடனே August என்று நீங்க யோசிக்காதீங்க but அதான் correct August 1st week friendship week நம்ம ஹீரோ எப்படியாவுது ஷாலினி கிட்ட intro ஆகணும், அதுக்காக perfect planning போட்டு வெச்சு இருந்தான் .

வீட்டுல mess bill கட்ட கொடுத்த பணம் College பக்கத்துல இருக்குற Gift shop ல இருந்த gift ஆயிடுச்சு . Gift Shop Owner செம குஷி ஆகிட்டார் அவ்வளவு Costly price ல யாரும் gift வாங்கினது இல்ல. அந்த வாரம் அந்த கடைக்கு நல்ல லாபம் அதில் பெரும் பங்கு நம்ம ஹீரோ Sir Contribution தான்.

அப்படியே சும்மா ராயல் Heroism ஓட Gift கொடுத்து Friend ஆகிட்டார். Daily canteen , assignment exchange, internal combined study, last minute semester preparation, extended night calls, untimed SMS chat, mostly இது தாங்க அவுங்க activities but அவுங்க friendship 24 carot gold அவ்ளோ புனிதம் அப்படி தான் சொல்லணும்.

College campus, IV, tour இந்த மாதிரி எங்க போனாலும் அர்ஜுன் ஷாலினி thick friends always சேர்ந்துதான் இருப்பாங்க . ஆனா class room னா நம்ம அர்ஜுன் ஹீரோ தாங்க ஆமா last bench தான் அதான் சொல்லி கொடுக்க ஷாலினி இருக்காங்களே. அப்புறம் என்ன பேசுறதுக்கு Topic கிடைச்சாச்சு . "Ph.D வாங்குன Professor சொல்லி கொடுத்த listen பண்ண மாட்டான்", சொல்லி திருத முடியாதுங்க இது கூட இல்லன College life satisfy ஆகாதே நம்ம ஹீரோவுக்கு வயசு கோளாறு விடுங்க.

இப்படியே 2 years முடிஞ்சது. இந்த 2 years நம்ம ஹீரோ ஷாலினிக்கு கொடுத்த gifts கணக்கே இல்ல. வீட்டுல tour , IV, books, tuition, extra class fees, இப்படி எல்லாம் college management கூட தெரியாத fees வீட்டுல சொல்லி gift கொடுத்தான். அதுவும் variety gifts தான் so ஒவ்வொரு தடவையும் கடைக்காரங்க குஷி தான் செம லாபம் ஆமா gift வாங்குறப்ப Bargain பண்ண மாட்டாரு பாரி வள்ளல் பரம்பரை ஆச்சே.

3rd year semester leave start ஆயிடுச்சு, வேற என்ன Placement start ஆயிடும் அதான் serious preparation. சொல்லவே வேண்டாம் பாதி நேரம் அர்ஜுனும் ஷாலினியும் college campus group study தான். "Night அர்ஜுன் free", அப்படி மட்டும் நினைக்காதீங்க Full time mobile தான் Airtel Campus plan இருக்கே. அர்ஜுன் ஒரு நாள் தூங்கிட்டானா அவ்வளவு தான் ஷாலினி கிட்ட இருந்து next day ஒரே திட்டு தான் பார்த்துகோங்க பாவம் அர்ஜுன் அப்படி மட்டும் நினைக்காதீங்க.

நம்ம ஹீரோவுக்கு இப்போ புது கனவு start ஆகுது வேற என்ன பெருசா இருக்க போகுது Love (காதல்) தான். ஷாலினி கிட்ட இருந்து "அன்பு, பாசம், நட்பு மட்டும் போதாது!" நம்ம ஹீரோ சாருக்கு காதலும் வேணுமாம். இனிமேல் ஷாலினி காட்டுல மழை தான் பல gifts நிறையா treats தான் . அட! ஒன்னும் இல்ல, ஷாலினி புது dress போட்டதுக்கு treat அப்படினா பாத்துகோங்க, மக்களே! நம்ம பசங்க தெளிவா இருகாங்க .

நம்ம ஹீரோ அர்ஜுன் இருக்கிறான், அதுனால பல கடை முதலாளிக்கு லாபம் தாங்க.

Final year வந்தாச்சு placement start ஆகிடுச்சு ஷாலினி தயவுல அப்படின அவுங்க சொல்லி கொடுத்ததுனால நம்ம அர்ஜுன் நல்ல Company கிடைச்சது . எல்லாரும் happy but அர்ஜுன் மட்டும் ஷாலினி place ஆகுல அப்படி ஒரே feelings ஷாலினி higher studies படிக்க போற அவளுக்கு எதுக்கு placement.

College final days பக்கதுல வந்துகிட்டு இருக்கு நம்ம ஹீரோ அவரோட காதல் சொல்ற மாதிரி இல்ல. Friends இப்போ timing entry கொடுத்து advice பண்றாங்க "மச்சான்! நீ நினைக்கிற மாதிரி ஷாலினி நினைக்குறது கஷ்டம் first propose பண்ணு result என்ன தான் பார்ப்போமே?" இப்படி கிளப்பி விட்டுடாங்க. நம்ம ஹீரோ சும்மா இருப்பாரா propose பண்றதுக்கு ready ஆகிட்டாரு. But அர்ஜுன் choose பண்ணின day, "last day of college".

Late ஆ சொன்னாலும் latest ஆ சொல்லுவாராமா ...திருந்த மாட்டாங்க இவுங்க .

அப்படியே தமிழ் மொழியை கவிதை மழையாக்கி ஒரு greeting card வெச்சு, ஷாலினி present பண்ணின shirt போட்டு, because ஷாலினி பல தடவை 'அர்ஜுன் ஸ்மார்ட்' சொன்னது இந்த shirt பார்த்துதான். ஷாலினி கிட்ட போய் கொடுக்க போறான்.

ஷாலினி கொஞ்சம் செல்ல கோபத்துடன் "ஏன்டா இவ்ளோ Late எவ்வளவு நேரம் wait பண்றது Do you have any sense ? " கேட்க நம்ம ஹீரோ அப்படியே சிரிச்சுகிட்டு,sorry இளித்து கொண்டு Card கொடுக்க போறான். அப்படியே, ஷாலினி அவளோட hand bag உள்ள இருந்து card எடுத்து "இந்த இத வாங்கிக்கோ " அப்படி ஒரு card கொடுக்கிறாள். ரெண்டு பெரும் thick friends ஒரே மாதிரி think பண்றாங்க அப்படி மட்டும் நினைக்காதீங்க, ஷாலினி கொடுத்தது அவளோட wedding invitation !.Oh my god

என்ன பண்றது ....... "டேய் அர்ஜுன் yesterday i told you na i will give a surprise for you today அது இது தான் உன்னை தான் first invite பண்றேன் சரியா", நம்ம அர்ஜுன் அப்படியே shock ஆகி நின்று விட்டான் . "என்ன ஷாலினி higher studies இல்லையா" அப்படி ரொம்ப பொறுப்பா கேட்டான் பாருங்க நம்ம ஹீரோ. ஷாலினி சிரிச்சுகிட்டே "after marriage, studies continue பண்ண போறேன்", அவ்ளோ தான் நம்ம ஹீரோ கொஞ்சம் இல்ல ரொம்பவே வருத்தபட்டான்.

ஷாலினி கல்யாணத்துக்கு wish பண்ணிட்டு வந்துட்டான். அவ்ளோ தான் அவனால பண்ண முடிஞ்சது...

அதுக்கு அப்புறம் என்ன ஆச்சு என்ன பெருசா ஆகிடும் climax தான்.

நம்ம ஹீரோ "friendship, love" அப்படி இருக்கிறப்போ நிறையா கடைகாரர்கள் லாபம் பார்த்தாங்க. இதோ இப்ப கூட ஒரு கடைகாரர் நல்ல லாபம் பார்க்கிறார்.
அவர் வெச்சு இருக்குறது.........
..............
.............
............
...........
..........
.........
........
.......
......
.....
....
...
..
.
?
!
?
!
?
!
வேற ஒன்னும் இல்ல.............
?
?
?
?
?
?
?
?
TASMAC.......
Thanks for reading my story patiently
if u find bored free ah vidunga wat else u can do.....
நன்றி மீண்டும் சந்திப்போம் .........

Sunday, August 31, 2008

அவளுக்காக!!!

நம்ம Sometimes friends ஓட Party போய் Beer அடிக்குறது Padmaja வுக்கு பிடிக்குமா ? என்ன சொல்லுவாளோ ? Problem இல்ல stop பண்ணிடுவோம் என்ன பிரச்சனை . அப்புறம் Padmaja Marriage கு அப்புறம் வேலைக்கு போறத பத்தி யோசிக்க வேண்டாமே, அது அவ இஷ்டம் . நம்ம Company ல Onsite போனா உடனே போலாமா இல்ல அவ Postpond பண்ண சொல்லிட்டா என்னடா கார்த்திக் பண்றது ? Problem இருக்காதே நம்ம தான் Company ல சொல்லி இருக்கோமே ......

Marriage கு அப்புறமா அவ transfer வாங்குவாளா இல்ல நம்ம transfer apply பண்றதா ? இதை better பேசியே clear பண்ணிப்போம் . நம்ம வீட்டுல problem இருக்காது நம்ம இஷ்டம் தான் சொல்லிடாங்க . நம்ம Night call பண்ணினா அவளுக்கு பிடிக்குமா ? இல்ல SMS ஓட stop பண்ணிடலாமா ? அவளோ கவிதை கதை எல்லாம் எழுதுவா கண்டிப்பா அதை படிக்க சொல்லி நம்ம comments கேட்டா தான் problem நம்ம எங்க இதெல்லாம் படிச்சு இருக்கோம், சரி இன்னும் ரெண்டு மாசம் கவிதை கதை மாதிரி பல books வாங்கி கத்துக்குவோம் . எவ்வளோ பண்றோம் இத பண்ண மாட்டமா !!! . என்னடா விஜய் படத்தோட வசனமெல்லாம் பேசுறேன்னு நினைக்காதீங்க காதல் வந்துட்டா இதை கூட பண்ணாம விட்டா எப்படி !

சேலையா ? சுடிதாரா ? அவளுக்கு எது பிடிக்கும் ? என்ன Gift கொடுக்கலாம் ? இப்படி யோசிச்சே Confuse ஆயிடுவேன் போல , சரி அவுங்க வீட்டுல எப்படி உடனே Accept பண்ணுவார்களா? என்ன பெருசா ஆகிடும் பேசி சமாளிப்போம். இதை கூட சமாளிக்காம என்ன காதல் கத்திரிக்கனு பண்ணிட்டு .

Shalini நம்மள பத்தி எதாவுது Padmaja கிட்ட Complaint பண்ணுவாளா ? அவளோட proposal நம்ம accept பண்ணுல அதனால எதாவுது குண்டக்க மண்டக்க பண்ணிட்டா என்ன பண்றது ? Decent Girl da அவ அப்படி பண்ண மாட்டா So அதை பத்தி ரொம்ப think பண்ண வேண்டாம் .

Marriage Date பத்தி நம்ம think பண்ண வேண்டாம் அதை பெரியவுங்க பார்த்துப்பாங்க . Place அதுவும் நம்ம Decide பண்ற அளவுக்கு பெருசு இல்ல flexible place ல வெச்சுப்போம் . Relatives யாரவுது caste பத்தி பேச்சு எடுப்பாங்களா? நம்ம சொந்தமானாலும் சரி padmaja சொந்தமானாலும் சரி இப்போ கொஞ்சம் தெளிவு ஆகிடாங்க இப்போ inter caste marriage எல்லாம் common அப்படி ஒரு Mentality வந்துட்டாங்க . So நம்ம safe da கார்த்திக் .

இப்படி அனைத்தையும் கார்த்திக் அவனுக்கு உள்ளேயே பேசிக்கிட்டு இருந்தான் ஆனா இதை எப்போ பேசினான் சொல்றது தான் Highlight ஆமா Padmaja வுக்கு ORKUT Friend request அனுப்பிவிட்டு தான் ! ஏனென்றால் Padmaja வுக்கு கார்த்திக்கை தெரியுமானே அவனுக்கே தெரியாது ! அதான் இப்படி பேசிகிட்டு sorry புலம்பிக் கொண்டிருந்தான் .

Tuesday, August 26, 2008

காற்றுள்ள போதே தூற்றிக்கொள் !!!

மக்கள் கூட்டம் என்றும் நடமாடும் Bus stop ல் Stylish மற்றும் Homely சுவாதி நின்று கொண்டிருந்தாள், அவள் வழக்கமாக அணியும் Fast Track கண்ணாடியுடன். தினமும் அவ்வழியில் தனது Office போகும் அர்ஜுன் அன்று சட்டென்று சுவாதியை பார்த்தான் . அர்ஜுன் எப்பொழுதும் பைக்கில் செல்பவன் , அவளது அழகினில் மயங்கி அவனை மறந்து அவளை பார்த்துக் கொண்டிருந்தான். சுவாதி எந்த எதிர்ப்பும் தரவில்லை அவள் அழகே தோற்கும் ஓர் புன்னகை பூத்தாள். அர்ஜுனால் இதனை நம்ப முடியவில்லை , சற்றே கனவில் மிதந்து அலுவலகம் சென்று பணியை முடித்து வீடு திரும்பி கனவை தொடர்ந்தான் .



அடுத்த நாளும் பிறந்தது அடடே! என்ன ஆச்சர்யம்! சுவாதி நிற்கும் Bus stop ல் நம்ம அர்ஜுன் ஆம் இன்று அவனோட bike repair இது அவன் அம்மா விடம் சொன்ன பொய் அப்புறம் Bus stop ல சுவாதியை எப்படி பார்ப்பான். கொஞ்சம் Smart Dressing உடன் நின்று கொண்டிருந்தான். சுவாதி சற்றும் தயங்காமல் மலர்ந்த புன்னகையில் நின்று கொண்டிருந்தாள்.



எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்ன சொல்வது என்று அர்ஜுன் அவன் உள்ளே பல ஆயிரம் கேள்வி எழுப்பி நின்று கொண்டிருந்தான் சற்று தயக்கத்துடன் . அழகிய மகன் ஆனாலும் அவனும் தமிழ் மகனே தயக்கம் இருக்க தானே செய்யும். சற்றும் எதிர்பாராத வகையில் சுவாதி அவனது அருகே வந்தாள் "Excuse me Could you please help me to cross the road " "கொஞ்சம் road cross பண்ண help பண்ண முடியுமா " என்றாள் தன் காதை நம்ப முடியவில்லை . அர்ஜுன் சொன்ன பதில் சுவாதிக்கு கேள்வி ஆனது அவன் கேட்டதோ "ஏன் " என்று .



அவள் சற்று பலத்த சிரிப்பொலியுடன் புன்னகைத்து தனக்கு "கண்களால் இவ்வுலகை காண முடியாது " என்பதை கூறினாள் இதனை அவனது காதுகள் கேட்க மறுத்தன தலை குனிந்தான் .



தலை நிமிர்ந்து பதில் கூற முற்பட்டான் சுவாதி அவன் முன் இல்லை ஆம் அவள் சென்று விட்டாள் road யை கடந்து வேறொருவர் உதவியுடன் .



காற்றுள்ள போதே தூற்ற வேண்டும் !!!

Sunday, August 24, 2008

என்று தான் சங்கமம் ???

எல்லா நாளும் என்னால் கடற்கரையில் சுற்றித் திரிய இயலாது , ஆம் நான் கடற்கரை நகரில் இல்லை ஆனால் அன்றொரு நாள் கடற்கரையில் மெல்ல நடந்து சற்று இளைப்பாற சந்தர்ப்பம் கிடைத்தது . ஆம் கடற்கரையில் மெல்ல நடக்கும் சுகமே சுகம்.

அலைகள் என் கால்களில் முத்தமிட்டு சென்று கொண்டிருந்தன. அப்பொழுது அலைகள் ஏதோ சொல்லு துடிப்பது போல் ஓர் உணர்ச்சி. என்னதான் சொல்கிறது என்று சற்று கவனித்தேன் . மனிதர்கள் நாம் நம் உறவினர்களை சந்தித்து கொள்ள பல நூறு பண்டிகைகளை வைத்து அவர்களை கண்டு உறவாடி குதூகலிக்கிறோம். உறவுமுரைகளோடு சங்கமிக்கிறோம். என்னுள் சங்கமிக்கும் ஆறுகளோ என்று தான் சங்கமிக்கும் ? அனைத்து ஆறுகளும் என்று தான் சங்கமிக்கும் . ஆறுகளின் ஏக்கம் என்று தான் தீரும் ?...

ஒரு முறை உபயோகித்த காகிதத்தை கூட வீணாக்காமல் உபயோக்கிக்கும் மனிதர்கள் என்று தான் ஆறுகள் என்னுள் வீணாக கலப்பதை தடுப்பார்கள் ??? .....

என்ன தோழர்களே!!! நாம் ஒன்றாக இணைந்து ஆறுகளை இணைப்போம் வாருங்கள் வளமுடன் வாழ்வோம் ..........

Thursday, August 14, 2008

சில்லறை சிந்தனைகள் !!!

நேற்று மிகுந்த வேலை இருந்தது அதனால் இரவு 11.30 ஆகிவிட்டது என் வேலைகளை முடிக்க, ஒரு வழியாக வீட்டுக்கு கிளம்பினேன். அந்நேரத்துக்கு office பக்கதுல ஆட்டோ எல்லாம் flight rate சொல்லுவாங்க என்பதனால் சற்று தூரம் நடந்து வந்தா bus or auto கிடைக்குமென்று நடந்து வந்தேன்.
என்னோட purse சில 100 ரூபாய் நோட்டுகள் மற்றும் சில கூப்பன்கள் இருந்தன . சில்லறைகள் சுத்தமாக இல்லை . சமாளித்து விடலாம் யாரவது சில்லறை மாற்றி தரமாட்டார்களா என்ற ஒரு நம்பிக்கையில் நடந்து வந்து கொண்டிருக்கிறேன் . Software employee என்று நிரூபித்து விட்டேன் சில்லறை இல்லாமல் ஏனெனில் எங்களிடம் உள்ள காசு தேவை உள்ள போது உதவாது, ஆம் இப்பொழுது என்னிடம் உள்ள பணம் எனக்கு உதவாது .
நாம் பொதுவாக நம் நண்பர்கள் எதாவது தேவை இல்லாத கேள்வி கேட்கும் போது ஏன் சில்லறை தனமா கேக்குற என்று சில்லறை என்பதை சற்று குறைந்து மதிப்பிட்டு இருந்தோம், ஆனால் நான் இப்பொழுது தான் சில்லறையின் மதிப்பை உணர்ந்தேன் ஆம் ஒருவன் என்னிடம் சில்லறை இல்லை என்று என்னை ஏற்றி செல்லவில்லை . நடப்பதற்கு சளைக்கவில்லை அதற்கான வயதும் இல்ல எனக்கு . எனவே நடக்க ஆரம்பித்தேன் வெறும் 2 Km தான் இருந்தும் நடக்கும் போது எனக்கு நினைவிற்கு வந்தது இது தான் ஒவ்வொருவருக்கும் ஓர் மதிப்பு உண்டு அது அவருக்கு ஏற்ற நேரத்தில் வெளிப்படும் .

எனவே எதனையும் எவரையும் குறைத்து மதிப்பிட வேண்டாம் . Dont Under estimate anyone. சில்லறை சிதறாத போது சிதறிய சிந்தனைகள் .

Sunday, August 10, 2008

சம்பாத்தியம்

எனக்கு எப்பவும் சாலை விதிகளை மதிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும் . ஏனெனில் நம் நாட்டில் உயிர் வாழ விதிகளை மதித்தாக வேண்டும். ஒரு முறை விதிகளை மதித்து எனது வண்டியை நிறுத்தினேன். பிள்ளையுடன் வந்து பிச்சை எடுத்தான் , நானும் ஒரு ருபாய் செலவு செய்தேன் தர்மம் என்ற பெயரில் புண்ணியம் சம்பாதிக்க தான் ஆசை . ஏனெனில் எனக்கு சம்பாதிக்கும் வயசு , சற்று புண்ணியம் சம்பாதிக்க வேண்டுமே . இருந்தாலும் , நான் சற்று சிந்திக்கவும் செய்தேன் குடிமகன் அல்லவா . அவன் ஏன் பிச்சை எடுத்தான் வாழ இயலாமையா? இல்லை முயல இயலாமையா ? வாழ கற்று கொடுத்து, வறுமையினை ஒழிப்போம் . சிந்தித்து செயல்படுவோம்.

Friday, August 8, 2008

மனிதா உன் நிலை தான் என்ன ?

இது hyderabad தானா ? ஒரு doubt தான் அப்படி ஒரு கன மழை கடும் குளிர் . இப்படி busy ah இருப்பேன்னு நான் நெனச்சது கூட இல்ல. கொஞ்சம் வேலை அதிகம் தான் . Late ah கிளம்பினேன் மழை வேகமா வந்து கொண்டிருந்தது. எனக்கு வேற வழி இல்லை ஒன்று auto இல்லையென்றால் software ஓட எக்ஸ்பிரஸ் என்கிற cab தான் எனக்கு இருந்த choice அன்று எதுவும் கிடைக்கவில்லை , கொஞ்சம் தூரம் நடந்து வந்து ஓடும் பஸ்சில் ஏற வேண்டியது ஆனது . கைல laptop வேற காலேஜ் நியாபகத்தில் ஏறிவிட்டேன். சற்று தொலைவில் எனது stop வந்தது driver கு ஏனோ அவசரம் போல பஸ்ஸை நிறுத்தாமல் சற்று slow பண்ணினார். ஓடும் பஸ்ஸில் இருந்து இறங்கினேன். கையில் குடை இருந்தும் பயனில்லை தலை சற்று நனைந்து விட்டது. 2 நிமிட நேரம் நடந்து சென்றால் எனது வீடு வந்துவிடும் அதற்குள் எனது laptop நனைந்து விட்டது என்று அதனை பார்க்க பதறிய நெஞ்சம் என்ன மறந்தது . அந்த மிஷன் மேல் உள்ள அக்கறை என்மீது எனக்கில்லை . மனிதா உன் நிலை தான் என்ன ? உன்னையே நீ கண்டுக்கவில்லை என்றால் எப்படி ?. இப்படி நான் மட்டும் இல்லை என்னை போல் பலர் என்று நினைக்கையில் வியந்தேன் .

Thursday, August 7, 2008

விவாதம் - மனதில்

தமிழ் அமுதினை அகமகிழ அள்ளி தெளித்து

கயல்விழிகள் கரையும் அளவில் ஆராய்ந்து

கவிதையினை பாடலாக அளிப்போர் பலர் ;

சிலரே வசனமளிப்பர் ; சிலருள் ஒருவனாக

உரையாடலை விவாதம் ஆக்க முயற்சிக்கிறேன் ;

தோழன்:

உயிரினை காதலில் கரைத்து கடிதத்தில்

மடித்து வைத்துள்ளேன் . என் காதலியின்

காது பட என் காதலை பாடிவிட்டு வருவாயா நீ?

தோழி:

உனக்கு காதலியாக காட்சியளிப்பேன் என்றிருந்தேன் ,

தோழியாக உனக்கு உதவ சொல்கிறாய் ! என்ன செய்வேன் ?

தோழியாக அறிமுகமானது என் தவறே !

தோழன் :

கரு கொண்டவள் கருவில் கொண்டால் ,

நீ எனக்கு வழி காட்டடி ! உன் தவறை மன்னித்து

மறந்துவிட்டால் நட்பு நனைந்து கரைந்துவிட்டாலும் விடும் ;

மன்னிக்க மறந்து நினைப்பினை மறந்துவிட்டேனடி தோழி என்றென்றும் !

தோழி :

புருஷன் புரிந்து கொண்டாலே பெண்களின்

வாழ்வுதனில் சொர்க்கம் ; மனமறிந்த நீ கிடைத்தால்

அச்சொர்க்கத்தை தேடி செல்வது

போல என்று தான் ஒரு சுயநலம் ;

தோழன் :

அடி மதி இல்லாதவளே ! என் இதயத்தில்

இருப்பது தான் உன் ஆசை ! என் இதயமே நீ என்கிறேன் ;

தோழி என்பதால் என் ஜீவனாக ;

ஜீவிக்க ஆசையா ? என் ஜீவனை காத்தருளும் சுவாசம்

நீயடி! என் தோழி ஆனதால் .

தோழி :

நீ சொல்வது சரிதானடா ஆனால் உன் காதலி மீது

பொறாமை தான் நானும் பெண் அல்லவா !

இருக்கத்தானே செய்யும் ; உன் காதல் தோல்வியுற்றால்

உயிரை விடும் முதல் ஆள் நான் தான் நினைவில் இருக்கட்டும்.

தோழன் :

சரி நில்லடி ஒன்றை கவனித்தாயா ? சில காதல்

தோல்வியுறும் ஆனால் அனைத்து நட்பும் சில சமயத்தில்

பிரிவு தான் அடையும் ; பிரிவு ஈருயிர்க்கு ; நாம் ஓருயிர்

அல்லவா ! நமக்கு பிரிவேது ;

தோழி :

நீ சொல்வது சரி தான் என்னை தேவதையாக எண்ணினாய்

சராசரி பெண்ணாக காட்டிவிட்டேன் ; மன்னிப்பு கேட்க

மாட்டேன் உன்னிடம் ; உனக்கு அறவே பிடிக்காது என்பதை

அறிந்தவள் உன் தோழி ! சரி உன் காதலை மட்டும் அல்லாமல்

உன்னை பற்றியும் சொல்லி பிரிவில்லா நம் நட்பு போல தோல்வி

அடையாது உன் காதல் என்பதை உறுதி செய்கிறேன் ;சரியா ?

தோழன் :

ஆண்களின் வெற்றிக்கு பின்னால் பெண் இருப்பதில்லை ;

பெண்கள் இருகிறார்கள் ! பூமியை ஆழ்வது பஞ்ச பூதங்கள்

எனக்கு மனிதனை ஆழ்வது ஐந்து விரலாக இருக்கும் ,

மாதா, பிதா , குரு, தெய்வம் , நட்பு ஆகியவையே , இவை அனைத்தையும்

சொல்லிவிட்டு அவளைப் பற்றி சொல்லவில்லை என்று நினைப்பால்

பெண்ணல்லவா ! என் கையே அவள் தான் என்று சொல்லிவிடு ;

தோழி :

தந்திரக்காரன் ! கொடுத்து வைத்தவள் உன் காதலி ;

நல்ல காதலன் கிடைத்தால் ; பெருமையடைகிறேன் !

என் உயிர் தோழன் நல்ல காதலனாக இருப்பதை கண்டு !

குசேலன் தருணங்கள்

தனது குருநாதர் குசேலனாக கஷ்டப்படுவதால் அவரை குபேரனாக்க முடியா விட்டாலும் தன்னால் முடிந்த வரை உதவி செய்ய எண்ணி மலையாளம் மொழியில் ஹிட் ஆன ஒரு படத்தை நமது சூப்பர் ஸ்டார் தேர்ந்து எடுத்தார் என்பது நான் கேட்ட செய்தி.

குசேலன் ஷூட்டிங் ஆரம்பித்ததிலிருந்து சில உண்மைகளும் பல புரளிகளும் கிளம்பிய வண்ணம் இருந்தது அதில் மிகப் பெரியவை இது Its Complete Rajnikanth's Movie என்று வாசு கிளப்பிய புரளியில் மிதந்த ஒரு சாதாரண ரஜினி ரசிகன் என்ற முறையில் காத்திருந்து First Day First Show Ticket book பண்ணி theatre க்கு சென்றேன்.

படம் ஆரம்பித்து 16 வது நிமிடத்தில் தலைவர் entry என்பது நான் அறிந்து இருந்தேன் இருந்தும் ஒரு ஆர்வம். அது மட்டும் இன்றி வாசு மீது இருந்த ஒரு வித பயமும் தான்.

குதிரையில் வந்து Superstar என்று எழுதிய போது theatre la விசில் கிளம்பியது. ரஜினி ரசிகர்கள் சும்மாவா :-) .

ரசிகர்கள் நாங்க அப்போ அப்போ சொல்லுவோம் ரஜினி போஸ்ட்ரே 100 நாட்கள் ஓடும் என்று சொன்னதை உண்மையாக்க வாசு இந்த படத்தை எடுத்தாரோ ? ரஜினியை சில நொடிகள் கண்ணில் காண்பித்தார் . வடிவேலுவின் நகைச்சுவை என்ன செய்தும் தலைவரை தான் தேடியது கண்கள். பசுபதியின் சோகமான முகமும் மீனாவின் makeup நிறைந்த முகமும் மனதில் நிற்கவில்லை.

நயன் தாரா இருந்தார் என்பதற்கு title, ஒரு song, வடிவேலு வுடன் ஒரு காட்சி தவறு வடிவேலு இருக்கும் ஒரு காட்சி . Guest role என்ற பிரபுவுக்கு கூட வசனம் இருந்தது நயன்தாரா வுக்கு இல்லை. வாசுவின் சொல் படி அவர் கதையின் நாயகி . என்ன கொடுமை சரவணன் இது ?

Superstar சுந்தர்ராஜன் (RS) உடன் பேசும் காட்சி பிராமாதம், 'வாழ வைக்கும் பூமி தான் வாழ சிறந்த இடம்' என்று ரஜினி சொன்னது சரியான அழுத்தம் தரப்படவில்லை, ஏன் ? சிலர் அதனை கவனிக்கவில்லை.

இறுதியில் school function இல் ரஜினி பேசும் காட்சி பலர் இதற்கு தான் படத்தில் இறுதி வரை இருந்தது போல் ஒரு உணர்வை காண்பித்தனர். Superstar சொல்லவே தேவை இல்லை style ஆகா பேச வந்தார். வார்த்தைகள் முத்துக்களாய் வெளிவந்தது. சிலரது கண்களில் கண்ணீரும் தான் வந்தது அவரவர் நண்பர்களை நினைத்து, தவறில்லை! superstar இன் நடிப்பு அப்படி இருந்தது.
நம்மை நமக்கே உணர்த்தியது. நண்பர்கள் தினம் நெருங்கி கொண்டிருப்பதை நினைவு படுத்தியது என்ற திருப்தியில் தலைவர் நடிப்பை பார்த்த மகிழ்ச்சியில் வெளிவந்தோம் ரசிகர்கள் .

வாசு ஏன் அசோக் குமாருக்கு பதிலாக ரஜினி என்ற பெயரை பயன்படுத்தவில்லை . அதனுடைய சக்தி உங்களுக்கு தெரியாதா ?
இதனால் பாலச்சந்தருக்கு லாபம் Superstar ரசிகர்கள் ஆகிய நமக்கும் தான் இனி தலைவர் வாசு படத்தில் நடிக்க மாட்டார் என்ன நம்பிக்கை வந்தது.
இதில் நான் சொன்னவை, Rajni ரசிகனாக இல்லாமல் சொல்ல கடமைபட்டேன். என்ன இருந்தாலும் குசேலன் miss பண்ண வேண்டிய படம் இல்லை.

நட்புக்காக பார்க்க வேண்டிய படம்.