Saturday, February 28, 2009

இது தான் காதலா ?

பூக்கள் மரத்தில் இருந்து உதிர்ந்து சாலையினை முத்தமிடும் மாலை நேரம் ....


ஆம் , சுமார் ஒரு 6.30. மணி இருக்கும் ....

ரகுவும், வந்தனாவும் சாலை ஓர பூங்காவின் புற்தரையில் நடந்து கொண்டிருந்தனர். அவர்கள் மனதில் பறந்து கொண்டிருந்தனர் .

அந்த நேரத்தில் நம்ம ரகுவுக்கு மனதில் அவன் கண்ணதாசன் என்று நினைப்பு வேறு . இதோ பாருங்க அவரோட வார்த்தை விளையாட்ட
"முதலில் உறவு கொண்டு உயிராக பலர் முயற்சித்த, போது
நீ என் உயிராகி உறவாக போறவள்"
என்று வந்தனாவின் கைகளை பற்றினான் ரகு. (இவனுக்கு உள்ள ஏதோ ஒன்று இருந்திருக்கு பாருங்க . வந்தனா ரகுவிற்காக அவ‌ன் வீட்டார் பார்த்த பெண் . அதை இப்படி கவிதை நடையில் சொல்றாருங்க .)


"நீ எனக்கு கிடைப்பாய் என்று சத்தியமாய் தெரியாது, ஆனால் ஏதோ ஒன்று சொல்லி கொண்டிருந்தது. அதனால் தானோ நான் யார் பின்பும் சுற்றித் திரிய வில்லை". ("சுற்றி இருந்தால் மட்டும் உன் அப்பா உன்னை விடுவாரா ?" என்று ரகுவின் மனசாட்சியின் உறுத்தல் வேறு .)

தானும் ரகு கிடைப்பதற்கே காத்து கொண்டிருந்தாள் என்பதை ஆமோதிப்பது போல் வெட்கத்தில் தலை குனிந்து, ஏற்கனவே ரகுவின் கையுடன் பிணைந்திருந்த தன் கையை இறுகி கொண்டாள்.

மேடை பேச்சு என்றாலே, பேசுகிறேன் என்று சொல்லி மேடையில் பேச்சை பிதற்றிவிட்டு நாட்டியம் ஆடும் ரகு இன்று சொற்பொழிவு ஆற்ற பிறந்தவன் போல் வீரனடையுடன் வந்தனாவின் கை பற்றி நடந்தான். (ஒரு பொண்ணு பக்கத்தில் இருந்தாலே நம்ம பயலுங்க ஹீரோ, கை வேற பிடிச்சு நடந்தா சூப்பர் ஸ்டார் தான் சொல்லவே வேண்டாம்.)


சற்றே இருந்த மௌனத்திற்கு பின் ரகு தொடர்ந்தான்.

"நாம் இது வரை உரையாடியதில் எல்லாவற்றையும் உன்னிடன் சொல்லவில்லை."

ஆனால், "இன்றே ! என் 27 வருட வாழ்க்கையை உன்னிடம் ச‌ம‌ர்பித்துவிடுகிறேன்."

"என்னைப் பற்றி நல்ல விஷயங்களை என் அப்பாவும் அம்மாவும் உன்னிடன் சொல்லி இருப்பாங்க அதனால் என்னை பற்றி சில கெட்ட (நல்லவை இல்லாத) விஷயங்களை பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்", என்று ரகு சொல்லி முடிக்கும் முன்பே வந்தனாவின் முகம் சற்று வாடியது போல் ஆனது.


"பதறும் விஷயம் இல்லை அப்படி மோசமான விஷயங்களை இதுவரை நான் செய்ததும் இல்லை", என்றான் . சற்று மெல்லிய புன்னகை பூத்தாள். சரி வந்தனா, "நான் என்னை பற்றி சொல்றதுக்கு முன்னாடி இந்த செந்தமிழ் மொழில பேசுறத கொஞ்சம் நிறுத்திக்குறேன், என்னால முடியல", என்று அப்பாவி சிரிப்பு சிரிச்சான். வந்தனாவின் தலை அதை ஆமோதிப்பது போல் அசைந்தது ஆனால் அவள் கண்கள் அவனது அசட்டு சிரிப்பையும் முகத்தையும் ரசித்துக் கொண்டிருந்த‌து.

"காலேஜ் படிக்கும் போது பசங்க வற்புறுத்தி ஒரு இரண்டு தடவ தம் அடிச்சேன் எனக்கு பிடிக்காம தான். சத்தியமா அதுக்கு அப்புறம் அடிச்சது இல்ல இனிமேல் அடிக்கும் எண்ணமும் இல்ல" என்று சத்திய பிரமாணம் எடுத்தான் . ஐந்து நிமிடங்களுக்கு முன் பிரிந்த இருவர் கைகளும் சேர்ந்தது ஆம், "நீ செய்தது தப்பு இல்லை" என்று சொல்வது போல் வந்தனா ரகுவின் கை பற்றினாள்.

அப்புறம் என்று இழுத்தான் ரகு, சற்றே சந்தேக பார்வையுடன் பார்த்தாள். "பெருசா ஒன்னும் இல்ல, அப்போ அப்போ பசங்களோட பீர் அடிப்பேன். ஆனா எப்பவாவுது தான்", என்று தன் குற்றத்தை வாதாடினான்.

"நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் நீ வேண்டாம்னு சொன்ன அத தொட கூட மாட்டேன். நீ சரின்னு சொன்ன அப்போ அப்போ லைட்டா அடிசுக்குவேன்", என்ன சொல்ற ? என்று நீதிபதியின் தீர்ப்புக்கு காத்திருக்கும் கைதி போல் ஏங்கி நின்றான் .

"எப்பவாவது பார்ட்டி எதாவுது விசேஷம் இருந்தா லைட்டா சாப்பிடுங்க நான் எதுவும் சொல்லுல ஆனா லிமிட் தாண்ட கூடாது" என்று அன்புக் கட்டளையிட்டாள் . வெற்றி புன்னகை பூத்தான் ரகு. சேர்ந்து இருந்த இருவரது கையும் மீண்டும் இறுகியது.

"நீங்க இது வரைக்கும் யாரையும் லவ் பண்ணினதே இல்லையா?", என்று தன் கேள்வியை மென்று விழுங்கினாள்.

இதுக்கு ஏன் இவ்ளோ தயக்கம். "நான் சைட்டே அடிச்சது இல்ல, அப்படின்னு சொல்றதுக்கு நான் சாமியார் இல்ல". "சைட் அடிப்பேன் ஆனா யாரையும் காதலிக்குல", என்று வீர வசனம் உரைத்தான் .

ஏன்? என்று வந்தனா கேட்க நினைக்கும் முன்பே தான் யாரையும் காதலிக்காத காரணத்தை சொன்னான்.

"சைட் அடிக்க ஒரு பொண்ண கண்ணுக்கு பிடிக்கணும் ஆனா லவ் பண்ண மனசுக்கு பிடிக்கணும், அப்படி என்னோட மனசுக்கு பிடிச்சவ நீ மட்டும் தான்". (அடிச்சான் பாருங்க வசனத்தை நம்ம பயலுக கெட்டிகாரங்க ).

"இது சும்மா சொல்லல என் நெஞ்சத்தின் வார்த்தைகள்", என்று முடிப்பதற்குள் வெட்கத்துடன் குனிந்த வந்தனாவின் தலை , உலகை வென்றவன் போல் தலை நிமிர்ந்தான் ரகு .

"ஆமா, நீ என்ன பிடிச்சு தானா சம்மதம் சொன்ன?", என்று ரகு கேட்டு முடிக்கும் முன் ஆம் என்று தலை அசைத்தாள் வந்தனா . (இது தாங்க நம்ம தமிழ்நாட்டு பொண்ணுங்க உங்கள மிஞ்சிட யாரு )

இருவரும் சொர்கத்தை அப்பூங்காவில் உணர்ந்தனர் . கரங்கள் இணைந்தன , பாதகங்கள் உரசின, புன்னகை பூப்பது போல் அசடு வழிந்தனர் .

அப்படி மிதந்து கொண்டிருக்கும் போது ஒரு குரல் , "டேய் ரகு டைம் என்ன ஆச்சு தெரியுமா ஆபிசுக்கு போலியா உங்க அப்பா அனுபிச்ச ஈ‍-மெயில‌ எவ்ளோ நேரம் தான் பார்த்துடே இருக்க போற " என்று ரகுவின் நண்பன் சிவா சொல்லிய பின்பே ரகு சுயநினைவிற்கு வந்தான். (ஆமா அவுங்க அப்பா எப்பவோ அனுபிச்ச ஈ‍-மெயில‌ பார்த்து கனவு கண்டு கொண்டிருந்தான் ரகு, அதுல தான் வந்தனாவோட போட்டோ இருக்கு, நிச்சயம் முடிஞ்சு மூன்று மாசமா போன் மூலமா தான் பேசிட்டு இருக்காரு )

"மச்சி என்னமோ உலகின் மகிழ்ச்சியான மனுஷன் போல ஒரு உணர்வு டா." "இது தான் காதலா?" என்று வழிந்தான் ரகு .

சிவா அமைதியா, "மச்சி நான் ஒன்னு சொல்லட்டுமா?"

" என்னடா தத்துவமா?"

"அதே தான் டா."

"சரி சொல்லு."

"கிடைக்குற‌து கிடைக்காம‌ இருக்காது; கிடைக்காம‌ இருக்குறது கிடைக்காது" .

"சரி அதுனால என்ன சொல்ல வர ?"

"அவுங்க உனக்கு கிடைப்பாங்க", இதை சிவா சொல்லி முடிகுல ரகு தனது மேலதிகாரிக்கு போன் போட்டான் லீவு சொல்லிட்டு வந்தனாவை பார்க்க போக டிக்கெட் புக் பண்ணினான்.

இது தான் காதலா ? இதே தான் .

"காண்பவள் எல்லாம் காதலி இல்லை; உன்னை கவர்ந்தவளே காதலி "

Thursday, February 26, 2009

Just For Her

I am writing this story just to entertain you folks. All the characters in the story are completely imaginary. Any resemblance to real characters is a mere coincidence.

Get Set Go………

Will Padmaja allow me to have beer after marriage? Because, when we friends go for an outing, we used to have some beer. Let’s see if she opposees, I will have to quit that, what else I can do?

What if she wants to work after marriage? Let her go, no issues. At this point of time it would be a big boost to the family income. Also she can be independent.

Should I accept the onsite proposal? If she asks me to postpone it, what you will do Raghu? No problem, I have informed the company earlier itself.

Will she get the transfer after marriage or should I apply for it? We should have a clear discussion prior to the marriage itself. Also, my parents have already given their green signal to our love.

Will she like if I call her in the night or will it be a disturbance for her?

She writes poems and stories, if she asks me to read and tell me opinion about it, what I will do? No other goes, next two months I should get as many number of books as possible on poems and stories and make it a practice. After all, practice makes a man perfect.

Whether she likes Saree or Chudi? What would the apt thing to gift her? Sure If I go on thinking this I will become a mental soon.

Will her parents accept my love? I should try to convince them. As a consultant cant I convince them. If I can’t convince them, why I should be in consulting?

Will Shalini complain about me to Padmaja? I have once rejected her proposal. If she complains, how should I deal it? Stop this crap man. Shalini is a decent girl da, she won’t even think about such an activity.

Why should I get confused on thinking on the marriage date, let our parents decide on that. What do u say?

Also for the marriage will any of our relatives discuss about the caste? I don’t think so, because nowadays are all getting more matured. So, no need to worry, Raghu.

All these things, sorry craps were discussed by Raghu with himself. If I say when the discussion took place, that will be the highlight.

Ya, all this was just after sending an Orkut friend request to Padmaja. And Raghu doesn’t even know if Padmaja knows him?

He did all this just for her.

Thanks for reading the blog. If u got bored, what else can you do after reading it.

Wednesday, February 18, 2009

EGO - Exit of Golden Opportunity

Actually I was looking for a topic to put up in my blog, and I ended up deciding the title 'EGO'. I am not a pro in English so I searched in a dictionary, the meaning of EGO, so that I can put up something to share with you people. When I searched in an online dictionary it said "An exaggerated sense of self-importance; conceit" and "Appropriate pride in oneself; self-esteem".

Whatever the dictionaries and scholars say, for me EGO is the Exit of Golden Opportunity. Obviously, when you have an EGO, that will be the exit gate for your opportunities letting all your chances wasted.

Certainly everyone has some Egoism in them. Only sometimes, that too rarely, EGO will lead to a success. As an optimist, I would like to discuss some of the rare success stories. Some tasks may be really impossible for us, but a certain Ego in us will lead us to complete the task and attain a peak in our life. After reaching the next step in our life we should leave the EGO behind us, or we will be stagnant in that position. Since I oppose Adamant Egoism I don't want to discuss more on the few merits on EGO.

EGO not only lets you down in life but also destructs your environment and the nature. Let me discuss with you some different things I know. In a state, Ruling party will have EGO with opposition party they won't turn to their suggestions. Also Opposition party will try to complain the ruling party always, instead of cooperating with them and getting valuable plans for the people. Result, ruling party will be the opposition in the next election and same nature of opposition will be imposed on the ruling party. The particular state won't have any development in the end. This kind of Egoism will cause loss to a huge mass of the people.

During school days people used to have the 'topper' EGO. That is common between the school students because they are in the learning stage. They used to fight for silly things and they used to get them solved by themselves. All these kind of characters change once they enter into the college. Because college is the place where we learn things needed for living a pleasant life. But again, ego makes college life struggling. Perhaps school is the place to study and to build a solid foundation for our higher studies.

Let's keep the philosophical points aside; we will discuss the normal things that happen in our life. There is even more influence of ego in the friendship between people. This kind ego raises the questions like, "How come I am inferior to him/her?" in them. Because of the ego these questions keep on affecting the friendship and eventually people lose their friends.

If a person finds right person or lovable person to share life, they won't reveal it immediatly. Because of some unnecessary ego, they won't tell the other person about their interest. Though both of them have interests on each other they don't reveal their love. That's why I had mentioned early in the passage that EGO means the "Exit of Golden Opportunity".

Because of the ego we lose opportunities, partners, positions, people and many more important things in our life, and what else. Let's kill the ego in us and give a try to be a lovable and approachable person to others.

I don't have any intention to force this message to the readers, I just want to share my views which I came across in my life.

Monday, February 16, 2009

பாரம்

ஷாலினி எதையும் சாதுர்யமாக செய்யும் எண்ணம் கொண்டவள் . அவளது பாட்டி கமலம்மாவிடம் பள்ளி முடித்த விடுமுறையில் சமையல் கற்று கொண்டாள். அப்படியே விட்டுவிடவில்லை கல்லூரியில் தோழிகளை வீட்டிற்கு அழைத்து தன் ச‌மைய‌ல் சுவையை நிரூபித்தாள். படிப்பிலும் சுட்டி கல்லூரி முடித்து விட்டு சாப்ட்வேர் வேலையுடன் தனது சம்பாத்தியம் துவங்கினாள்.

அவள் தனது செலவிற்கே வேலைக்கு சேர்ந்தாள் என்று குழம்ப வேண்டாம், தனது சம்பாத்தியம் தனது திருமணத்திற்கு பெற்றோருக்கு உதவும் என்றே வேலை செய்ய துவங்கினாள். அவள் நினைத்தவாறே திருமணம் நல்ல இடத்தில் நிச்சயக்கப்பட்டு நன்றே நடந்தது.

ஷாலினியின் கணவன் ரகுவும் சாப்ட்வேர் துறையில் வேலை செய்கிறார். இன்றைய சூழ்நிலையின் கைதியாக ஷாலினி திருமணம் முடிந்தும் வேலையை தொடர்ந்தாள். அவள் கல்லூரி படிக்கும் போது தனக்கு தானே எடுத்த சத்திய பிரமாணம், திருமணத்திற்கு பிறகு வேலை செய்வதில்லை என்றே , ஏனெனில் அவள் தனது கணவனுக்கும் குழந்தைக்கும் வாழ்வதே வாழ்க்கை என்று இருந்தாள் . அது இப்போது முடியவில்லை இதை பாரமாக அவள் நினைத்து இருக்கும் வேலையில் ஓர் ஆண் குழந்தையும் பிறந்தது .

தனது நிறுவனத்தில் அவளுக்கு அளித்த மூன்று மாத விடுமுறை முடிந்தது தன் மகனுக்கு இரண்டு மாதம் மட்டுமே தாய் பால் கொடுத்துவிட்டு செல்ல வேண்டியது , இதுவும் அவளுக்கு பாரம் ஆனது. பள்ளி செல்ல துவ‌ங்கினான் ஷாலினியின் ம‌க‌ன் ஷ‌க்தி. அவளை போலவே ஷ‌க்தியும் கெட்டிக்கார‌ன் தனது பள்ளி ஆண்டு விழாவில் அவன் வாங்கும் ப‌ரிசுக‌ளை காண‌ ர‌குவையும் ஷாலினியையும் க‌ல‌ந்து கொள்ள‌ அன்போடு க‌ட்ட‌ளையிட்டான் இருவ‌ராலும் போக‌ இய‌ல‌வில்லை.

‌க்தி ச‌ற்று ய‌தார்த்த‌ உள்ள‌ம் கொண்ட‌வ‌ன் அத‌னால் வ‌ருந்த‌வில்லை. இதுவும் ஷாலினிக்கு ஒரு பார‌மாக‌வே ஆன‌து. ஷ‌க்தியும் த‌ன் பெற்றோர் நிலையினை உண‌ர்ந்து வ‌ள‌ர்ந்தான். ம‌க‌னை த‌ன் கையால் வ‌ளர்க்க‌ இய‌லாத‌ பார‌ம் ஷாலினியை உருத்திய‌து. ஷாலினியால் அவ‌ளை அமைதிப‌டுத்தி கொள்ள‌ முடிய‌வில்லை.

இறுதியில் ஷ‌க்திக்கு திரும‌ண‌ வ‌ய‌து நெருங்கிய‌தும் பெண் பார்க்க‌ துவ‌ங்கினாள் அவ‌ளால் உல‌க‌ம் செல்லும் வேக‌த்தை க‌ண்டு விய‌க்க‌ ம‌ட்டுமே முடிந்த‌து. அவ‌ள் வாய் அடைத்து விடும் வித‌மாக‌ ஷ‌க்தி அவ‌னுக்கு ஏற்ற‌ பெண்ணை ஷாலினியின் முன் நிறுத்தினான். ம‌க‌னின் முடிவிற்கு பச்சை கொடி காட்டி விட்டாள் ஆம் அவ‌ளால் த‌ன் ம‌க‌னின் வாழ்க்கையை ப‌ராம‌ரிக்காவிட்டாலும் பார‌மாக‌ இருக்க‌ விரும்ப‌வில்லை. ஆசீர்வ‌தித்து விட்டு த‌ன் குற்ற‌த்தை பார‌மாக‌ வைத்து கொண்டாள்.

ந‌‌ம்மை பூமியில் தாங்கும் பெண் தெய்வ‌ம் பூமாதேவி ம‌ட்டும் பார‌ம் சும‌ப்ப‌தில்லை. த‌னது உயிர் போல் த‌ன் வ‌யிற்றில் உயிர்க‌ளை சும‌க்கும் ஒவ்வொரு பெண்ணும் தெய்வ‌மே. ந‌ம்மை பார‌மென‌ க‌ருதாம‌ல் உயிராக்கிய‌ தாயின் ம‌ன‌தில் பார‌த்தினை, சூரிய‌னை க‌ண்டு உருகும் ப‌னியை போல் உருக்கி. உய‌ர்ந்திடுவோம் வாழ்வில்.

பூமியில் காட்சி த‌ரும் தெய்வ‌மே தாய்!!!