Monday, April 13, 2009

கிரிகெட் மொக்கை

" டேய் விஜய் மணி 6.30 எழுந்திரிக்க போறியா இல்லையா ? " என்று கத்தினான் விஜயின் நண்பன் சிவா.

"மச்சி இதோ கிளம்பிடுறேன்" என்று வேக வேகமாக புறப்பட்டான் விஜய்.

"ஏண்டா இப்படி பறக்குற எப்போ போனாலும் விளையாடதான போறோம்".

"இல்லடா 7 மணிக்கு வர சொன்னாங்களே லேட் ஆ போனா எப்படி " என்றான் பொறுப்புடன்.

ரெண்டு பேரும் காரில் கிரௌண்டுக்கு புறப்பட்டனர் .

"என்னடா டைம், போன வாரம் அந்த மேனேஜர் எப்போ வந்தாரு அவரு விளையடுலையா சும்மா சீன் போடாத மச்சி டிராபிக் இல்ல சீக்கிரம் போய்டுவோம் பீல் பண்ணாத " என்றான் விஜய்.

" ஆமாம் மச்சி அவரு பிராக்டிஸ் வரதே இல்ல ஆனா மேட்ச் மட்டும் விளையாடுவாரு போன வாரம் நம்ம கார்த்தி ஒரு நாள் வருலனு மேட்ச்ல உக்கார வெச்சுட்டாரு " என்று புலம்பினான் சிவா.

"எப்படியும் சீனியருக்கு தான் சான்ஸ் தருவாங்கனா நம்ம போறேதே வேஸ்ட் மச்சி இருந்தாலும் இந்த கிரிக்கெட் எனக்கு ஒரு வெறி அதான் போறேன் அத விட்டு தள்ளு போன வாரம் தெலுங்கு பில்லா ரிலீஸ் ஆச்சே பாத்தியா " என்றான் ஆர்வமாய் விஜய் .

"இல்லடா கேள்வி பட்டேன் அவ்ளோ தான் " என்றான் சிவா .

"சரி நீ சொல்லு மச்சி நயன்தாரா பெஸ்டா அனுஷ்கா பெஸ்டா ஏன்னா எனக்கு ரெண்டு பேரையும் பிடிக்கும் அதுனால வித்தியாசம் தெரியல டா " என்றான் விஜய் .

"அதெல்லாம் எனக்கு தெரியல நம்ம கம்பெனி மதுமிதா எனக்கு பிடிக்கும் " என்றான் சிவா .

"மச்சி அவள யாருக்கும் தான் பிடிக்காது என்ன ஒரு ஹோம்லி பேஷ் டா அது " என்று வழிந்தான் விஜய் .

"நாதேறி அவல நெனச்சு உருகாத ரோட்ட பாத்து போ டா " என்றான் சிவா .

"மச்சி இன்னைக்கு சொல்லிட போறேன் டா " என்றான் விஜய் ஆவேசமாய்.

"மச்சி என்னடா மது கிட்ட ப்ரபோஸ் பண்ண போறியா வாழ்த்துக்கள் " என்றான் சிவா குதூகலத்துடன்.

"டேய் புண்ணாக்கு நம்ம கேப்டன் கிட்ட சீனியாரிட்டி பாக்காதீங்க டேலன்ட் பாருங்க அப்ப‌டினு தான், அப்புறம் என்னடா கஷ்ட பட்டு விளையாடுறோம், அந்த மேனேஜர் வ‌ந்தா நமக்கு கல்தா ஆனா கேப்டன் வசனம் மட்டும் பின்னி எடுப்பாரு" என்றான் விஜய் .

சிவா பதில் சொல்லும் முன் "மச்சி நான் இன்னைக்கு விளையாடுவேனா னு தெரியாது ஆனா மூணு வருசத்துக்கு அப்புறம் கண்டிப்பா விளையாடுவேன் ஏன்னா நானும் சீனியர் ஆகிடுவேன் ல என்ன வெளிய தள்ள முடியாது டா " என்றான் விஜய் நக்கலாக.

"மச்சி ஒன்னே ஒன்னு சொல்லட்டுமா " என்றான் சிவா .

"நீ என்னடா வசனம் சொல்ல போற " என்றான் விஜய் .

"இதுவும் கடந்து போகும்" என்று தத்துவ மழை பொழிந்தான் சிவா .

"நீயும் இனிமேல் நடந்து போ " என்று பதில் அளித்தான் விஜய் .

இப்படி மொக்கை போட்டு கொண்டே காரில் பாட்டின் சத்தம் கூட்டினர் .

"நிமிர்ந்து நில் உயர்ந்து செல் " என்று சரோஜா பாடல் ஒலித்துக் கொண்டே இன்று விளையாடுவோம் என்ற நம்பிக்கையில் விரைந்தனர் .

14 comments:

Raj said...

ச‌ட்றே சிரிய‌ மொக்(கை)க‌தை.மிக‌வும் அருமை.உங‌க‌ளிட‌மிருந்து இன்னும் பெரிய‌ க‌தைக‌ளை எதிர் பார்க்கிறோம்.

வாழ்த்துக்க‌ள்.

JSTHEONE said...

@ Raj,

thanks thala...thanks for the comment...

will try to improve give a bigger one not mokkai but a story.. :)

Giri said...

last line is good finish...

JSTHEONE said...

@Giri,

Thanks a lot machi...

Jayakumar said...

Good flow na....

Keep it going

JSTHEONE said...

Thanks machi thanks for ur comments

Unknown said...

romba chinna Mokkai than.. no baseline i think.. or do you wrote with any baseline.??? But Mathumitha va pathi innum konjam eluthi irrukalam( Dont mistake me..!!)....

JSTHEONE said...

@satheesh thanks a lot for ur comment machi... baseline illa jolly irukanum nu ezhuthinen...last phrases 2 lines can be consider as message..
idhuvum kadandhu pogum and nimirndhu nil uyarndhu sel.....

madhumitha solli irukalaam unnoda peelings puriyudhu vidu next story la nalla explain panniduvom..
i jus wrote this for jolly :)

Divya said...

flow of writing is really gud:))

\\"இதுவும் கடந்து போகும்" என்று தத்துவ மழை பொழிந்தான் சிவா .


"நீயும் இனிமேல் நடந்து போ " என்று பதில் அளித்தான் விஜய் .\\


LOL:))

JSTHEONE said...

@Divya thanks a lot for ur comments :)

Prasanna said...

For me its like begining it was little bit confusing but after that it went good.Last message is really good.

JSTHEONE said...

@Prasanna thanks a lot for ur comment...

Swarna said...

U are a great entertainer na.... Good work,keep going :)

JSTHEONE said...

@Swarna,

Thanks a lot for the comment...

I will keep on trying to give my best :)