Sunday, January 18, 2009

புகழாரம்

கந்தசாமி, மனிதருள் மாணிக்கம் ! இப்படி ஒரு மனுஷன் நம்ம காலத்துல வாழ்ந்து இருக்கிறது நமக்கு பெருமை தர கூடிய விஷயம் . அவர் பள்ளிகளுக்கு வழங்காத நன்கொடையா ? அவர் நடத்தி வைக்காத திருமணமா ? தன்னுடைய பெற்றோரை கடைசி காலத்துல பார்க்க முடியாமல் இறைவன் அவனிடம் இழுத்துக் கொண்டதால் முதியோர் இல்லம் தொடங்கி பெரியவர்களுக்கு பணிவிடை செய்த உயர்ந்த உள்ளம் கொண்டவர் கந்தசாமி ஐயா !
நம்ம ஊர் கோயில் வீதியில் இருக்கும் பிள்ளையார் கோயிலுக்கு இவரே நன்கொடை தந்து கோயிலை பிரம்மாண்ட வடிவில் கட்டியமைத்து மக்களுக்கு மன நிம்மதி அளித்தவர். சென்ற ஆண்டு அம்மன் திருவிழாவில் அம்மனுக்கு தங்க கிரீடம் அளித்து கம்பீரம் சேர்த்தவர் . இன்று நம்ம ஊருக்கு நல்ல சாலை , பேருந்து நிலையம் இப்படி எல்லாம் வந்து இருக்கிறதற்கு கந்தசாமி ஐயா தயவு தான் . சென்ற தேர்தலின் போது மக்கள் வற்புறுத்தியும் தேர்தலில் போட்டியிடவில்லை . சேவை பலவற்றை செய்கிறேன் பதவி தேவை இல்லை அப்படி மக்களுக்கு பதில் அளித்தார் .
செல்லையாவும் முத்தையாவும் இப்படி பேசிக் கொண்டு நடந்ததை கந்தசாமியின் வேலைக்காரன் முருகையன் வியப்புடன் பார்த்து நடந்து வந்தான் . ஆம் ! இதே இருவரும் தான் சென்ற மாதம் கந்தசாமி ஐயாவையும் அவர் வீட்டு வேலைகாரியையும் தனது மனைவியான முனியம்மாவையும் தவறாக பேசிய அதே நாக்கு கொண்ட நரிகள் இப்படி பாராட்டியதை கண்டு வியந்தான் . நரம்பில்லா நாக்கு நியாயம் அறியாது போல என்று தனக்கு தானே நினைத்து கொண்டான் முருகையன் . தனது முதலாளி மேல் மரியாதையும் மனைவி மீது நம்பிக்கை வைத்துள்ளதால் அவர்கள் கூறிய குற்றத்திற்கு செவி சாய்க்கவில்லை .

செல்லையாவும் முத்தையாவும் மேலும் தொடர்ந்தனர் , இறைவன் நல்லவர்களை சோதிப்பது சகஜம் ஆகிவிட்டது . ஆம் கந்தசாமி ஐயாவுக்கு குழந்தை பாக்கியம் இல்லை அதன் வருத்தத்தை அவர் உள்ளே வைத்து பல பெற்றோர் அற்ற தெய்வத்தின் குழந்தையை தெய்வமாக இருந்து வளர்த்து வந்தார் . இனி அந்த புண்ணியவதி புஷப்பவல்லி எப்படி காலம் கடத்த போறாரோ ? என்று கந்தசாமி ஐயாவுக்கு புகழாரம் சூட்டி கொண்டு நடந்து வந்தனர் .
ஆம் ! இந்த இருவர் மட்டும் அல்ல இவர்களை போல் இப்படி பலரும் கலந்து உரையாடி கொண்டிருந்தது கந்தசாமியின் இறுதி ஊர்வலத்தில் . ஆம் ! என்று தான் இவ்வுலகம் இருக்கும் போது புகழ்ந்தது ? . அவரது இறுதி ஊர்வலத்திலாவது அவருக்கு கிடைக்க வேண்டிய புகழாரம் கிடைத்ததில் அவரை நன்கு அறிந்த உள்ளங்களுக்கு மகிழ்ச்சியே !

3 comments:

Ashok said...

dude.. sirukathai core is really good.. sollaatrathil nalla munaetraam.. innum aalamaa eluthungaa..

"sithramum kai palakaam, senthamilum naa palakkam.."

keep posting and add some fun to it, definelty ur sirukathaikal will be published in aanantha vikatan or kumudham.

JSTHEONE said...
This comment has been removed by the author.
JSTHEONE said...

Un paraattukku nanrigal pala kodi da... sure i will keep on improving myself da...